பேராசிரியர் மொகான் முனசிங்க

பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தகவற் தொழில்நுட்பத்துறையில் தீர்மானம் எடுக்கும் உயர் கட்டமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பேரவையின் (CINTEC) ஸ்தாபகத் தலைவராக இருந்தார். இவர் CINTEC னை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன், CINTEC னால் உருவாக்கப்பட்ட கணணிக் கொள்கை (COMPOL, 1982-83) மற்றும் 1984 இல் இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 10 னை வரைய உதவினார். இவர் மேலும் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்கட்கு சிரேஸ்ர வலுவூட்டல் ஆலோசகராகவும் (1982-86), தொலைத் தொடர்புகள் கொள்கைக்கான (1984-85) ஜனாதிபதி செயற்குழுவின் அங்கத்தவராகவும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் கிளார்க் மையத்தின் நிறுவன ஆளுநர் மற்றும் இலங்கை இயற்கை வளங்கள், வலுவூட்டல் மற்றும் அறிவியல் ஆணையத்தின் (NARESA) அவை உறுப்பினரும் ஆவார்.

இவர் தனது பட்டப்பின் கற்கைநெறிகளாக பொறியியல் பிரிவில் இங்கிலாந்தின் கேம்பிரிச் பல்கலைக்கழகத்திலும், பௌதீகவியல் பிரிவில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மற்றும் பொருளியல் அபிவிருத்தி பிரிவில் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் கொன்கோடியா பல்கலைக்கழகத்திலும் பட்டங்களைப் பெற்றார். பேராசிரியர் முனசிங்க அவர்கள் மேலும் பல கௌரவ கலாநிதிப் பட்டங்களையும் (கொனரீஸ் கோஸா) அத்துடன் நிலையான அபிவிருத்தி, காலநிலை மாற்றம், ஆற்றல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும் இனங்காணப்பட்டார். இவர் 100 ற்கும் மேற்பட்ட புத்தகங்களையும், 350 ற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதுடன் அவரது ஆய்வுகளுக்காக பல சர்வதேச பரிசுகளையும் பெற்றுள்ளார். இவற்றுள் சமாதானத்திற்கான நோபல் பரிசினை ஐ.நா காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் சார்பில் துணை தலைவராகப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர் பல சர்வதேச விஞ்ஞான கல்விக்கூடங்களின் சக உறுப்பினராகவும், சுமார் 15 தொழில்முறை பத்திரிகைகளின் ஆசிரியர் குழாமிலும் பணியாற்றுகிறார்.
இவர் கொழும்பிலுள்ள அபிவிருத்திக்கான முனசிங்க நிறுவனத்தின் ஸ்தாபக தலைவராக இருப்பதுடன், ஜனாதிபதியின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்படும் 2030 இல் நிலையான இலங்கை எனும் தொலைநோக்கு மூலோபாயத் திட்டத்தின் தலைவரும் ஆவார். இவரது 50 வருடகால பொதுச் சேவையில் சுற்றுச்சூழல் தரம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி குழுவின் ஆலோசகராகவும் உலக வங்கியின் சிரேஸ்ர ஆலோசகர் அல்லது சிரேஸ்ர முகாமையாளராக சேவையாற்றியது குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 90 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய துறைசார் அனுபவத்தினைக் கொண்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பிரபல்யமான பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஈடுபாட்டின் மூலம் 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியிலான கொள்கையின் இருமுக்கிய சாதனைகளில் நேரடியாகப் பங்களிப்புச் செய்துள்ளார் அவையாவன – ஐ.நா. பொதுச் சபையின் ஒப்புதலிலுள்ள நிலையான அபிவிருத்திக்கான இலக்குகள் (SDG) மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் COP21.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


இலங்கையில் ICT துறையின் ஆரம்பகால வரலாறு

ஆரம்பம்

அது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களை கணணியின் பக்கம் கவனத்தை ஈர்க்க வைத்த ஒரு சந்தர்ப்பம் ஆகும். 1982 இல் பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ர வலுவூட்டல் ஆலோசகராக இருந்த காரணத்தினால் அவரது முதல் வார கூட்டத்தின் போது 03 பக்கக் குறிப்பாணையொன்றினைச் சமர்ப்பித்தார். பின்னர் அதனைக் கண்ணுற்ற ஜனாதிபதி அக் குறிப்பாணையைச் சிபார்சு செய்யப்பட்டவற்றை இரண்டு வரிகளில் சுருக்கமாக ஒரு ½ பக்கக் குறிப்பாணையாகத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காக பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் அப்போதைய பாவனையிலிருந்த அவரது ரண்டி ரேடியோ ஸாக் ரி ஆர் எஸ் 80 கணினியையும் எப்ஸன் டோட் மெற்றிக்ஸ் பிறின்ரரினையும் கொண்டு அவ் ஆவணத்தினை உடனடியாகத் திருத்தினார், அத்துடன் அவ் ஆவணத்தின் ஸ்ரைல் மற்றும் போமெற்றினை அரைமணி நேரத்திற்குள் மாற்றித் தருமாறு ஜனாதிபதியினால் பணிப்புரைக்கப்பட்டார்.

இதன் பெறுபேற்றினால் கவரப்பட்ட ஜனாதிபதி “இந்த தொழில்நுட்பத்தினைப் பற்றி நாம் மேலும் அறிந்து கொள்ள வேண்டும்” என கூறியிருந்ததுடன் அதனைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்களால் தேசிய கணினிக் கொள்கை தொடர்பான விசேட ஜனாதிபதி குழுவின் உருவாக்குவதற்கான விரிவான விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக அரசாங்கத்தினால் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை தேசிய கணினிக் கொள்கை (COMPOL)

தேசிய கணினிக் கொள்கைக்கான வழிகாட்டல்கள் ஆனது இயற்கை வளங்கள், வலுவூட்டல் மற்றும் அறிவியல் ஆணையத்தின் (NARESA) தலைவரின் வேண்டுதலுக்கிணங்க அமைக்கப்பட்டது. இது விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் உடைய சிறந்த உறுப்பினர்களைக் கொண்டது. பேராசிரியர் மொகான் முனசிங்க தலைவராக இருந்ததுடன் பேராசிரியர் வி.கே.சமரனாயக்க, கலாநிதி.ஆர்.வி.ஏக்கனாயக்க, கலாநிதி என்.டபிள்யூ.என்.ஜெயசிறி மற்றும் கலாநிதி அஜித் கனகசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். NARESA இலிருந்து திரு.யாபா அவர்கள் செயலாளராகவும் இருந்தார்.

அக்குழுவினது சிறந்த செயற்பாட்டினாலும் உயர் நிபுணத்துவத் தரத்தினாலும் COMPOL யினுடைய அறிக்கையானது நான்கு மாத காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டது. இதன் விளைவாக கொள்கைக்கான ஆவணமானது 1983 ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், அதனை பரிசோதிக்கும் காலமாக அவ் ஆண்டு காணப்பட்டது. இருபது ஆண்டு காலத்திற்கும் அதிகமாக இலங்கையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தகவற் தொடர்பாடல் தொழில்நுட்பக் கொள்கையாக இக் கொள்கை இருந்ததுடன், பல ஆண்டுகளுக்கு பின்னர், 2009 ஆம் ஆண்டு, ICTA இன் இ-அரசாங்கக் கொள்கை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் இது முதல் கணினிக் கொள்கையே தவிர இது “கட்டுப்படுத்தும்” கொள்கையல்ல என வலியுறுத்தினார். அத்துடன் முக்கியமாக அபிவிருத்திக்காக தகவற் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அதனை எளிதாக்கலாம் எனவும் கூறினார். அதாவது இலங்கை மக்களின் நலனிற்காகவும், நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காகவும் கணினி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தலாம் எனக் கூறினார். முதலில் நாட்டின் அபிவிருத்திக்காக என்னென்ன தேவையெனவும் அதன் பின்னர் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக எந்தெந்த தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. தேசிய கணினிக் கொள்கை வழிகாட்டுதல்கள் தொடர்பான பொதுத் தத்துவமானது “பொது மற்றும் தனியார் துறைகளில் முன்முயற்சி மற்றும் ஆக்கத்திறனை வளர்ப்பதற்கு இச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதையும் சீர்படுத்துவதையும் விடுத்து அவற்றினை ஒன்றிணைத்து, ஊக்குவித்து நெறிப்படுத்தலாம்” எனக் கூறுகின்றது. அப்போதய தூரநோக்காக இருந்த “ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வணிகத்திலும் அரசு சிந்திக்கும் மற்றும் செயல்படும் வழிகளை மேம்படுத்த தகவல் தொடர்பாடற் தொழில்நுட்பத்தின் நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” எனும் வாசகமானது 20 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்பட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தின் தூரநோக்குடன் கிட்டத்தட்ட சரியாக பொருந்துகிறது.

COMPOL அறிக்கை – அபிவிருத்தியினை முக்கியத்துவப்படுத்துகின்றது

அந்நேரத்தில் வேறு எந்தவொரு நாடும் COMPOL போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு கணினிக் கொள்கையினைக் கொண்டிருக்கவில்லை. நாட்டினது தேவைகள், அபிவிருத்தி என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான சவால்களை எதிர்நோக்குதல் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கான தேசிய கொள்கையின் உருவாக்கத்தின் போது அமைச்சருக்கு அறிவுறுத்துவதற்காக ஒரு குழு அல்லது ஒரு பேரவை இருந்திருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் அதனை வழிவகுத்து உருவாக்குவதற்கும், தொழில்நுட்பத்திறன்களில் முன்னிற்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது: இத்துறையில் நிபுணத்துவத் தரத்தினை ஸ்தாபித்தல்: மற்றும் தொலைநோக்குடனான குறிக்கோள், அதன் பிறகு கணினி தொடர்பான சேவைகளை வழங்குவது. இவ் இலக்குகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்பட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான நோக்கங்களுடன் உடனிணைக்கின்றது.

1984 இல் இயற்றப்பட்ட கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சட்ட இலக்கம் 10 மற்றும் CINTEC னை உருவாக்குதல்

COMPOL அறிக்கையினை வரையும்போது, 1984 இல் இயற்றப்பட்ட கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சட்ட இலக்கம் 10 யினைத் தயாரிக்கும்போது பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் சட்ட வரைவாளர் அலுவலகத்திற்கு தனிப்பட்ட ரீதியாக உதவினார். இச்சட்டமானது தேசிய அபிவிருத்திக்கு உதவுவதற்கான கொள்கையினை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் முழுமையாகக் கவனம் செலுத்தியது. இதன் சில நோக்கங்களாக, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான கொள்கையினை உருவாக்குவதற்கும் நடைமுறைப்படுத்தவதற்கும் தேவையான ஆலோசனைகளை அமைச்சருக்கு வழங்குவது மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காகவும் தொழில்நுட்ப மாற்றத்தின் போதான சவால்களை எதிர்நோக்குவதற்கும் தேவையான திறனை பெற்று இலங்கையை மேம்படுத்துவதற்காக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் என்பனவற்றினைக் குறிப்பிடலாம். மேலும் பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் தொலைத் தொடர்புக் கொள்கைக்கான ஜனாதிபதி குழுவில் சேவையாற்றியுள்ளதுடன் CINTEC சட்டத்திலிருந்து பெற்ற பொருத்தமான எண்ணப்பாடுகளையும் இதனுடன் இணைத்தார்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தீர்மானங்களை எடுக்கும் கட்டமைப்பாக இலங்கை கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பேரவை (CINTEC) ஆனது 1984 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்ட்டது. CINTEC ஆனது மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது: முதலாவது, ஜனாதிபதி அல்லது பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கான பேரவை. அதற்கு பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் தலைவராக இருந்தார். பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முதல் பேரவையின் ஏனைய அங்கத்தவர்களாக பேராசிரியர் வி.கே.சமரனாயக்க (கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் CINTEC இன் அடுத்த தலைவர்), கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க( இலங்கை கணினிச் சங்கத்தின் தலைவர்), பேராசிரியர் அபய இந்துருவ (மொறட்டுவை பல்கலைக்கழகம்), கலாநிதி என்.டபிள்யூ.என் ஜெயசிறி (வணிக முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனம்), திரு.சி.குணசிங்கம் (மேலதிக செயலாளர், ஜனாதிபதி செயலகம்), திரு.கே.கே.குணவர்த்தன (தொலைத்தொடர்புகள் நிறுவனத்தின் பணிப்பாளர்), திரு.அகில் மொகமட் (தேசிய திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பாளர்), திரு.ஜி.குமாரதுங்க (சுங்கத் திணைக்கள ஆணையாளர்) மற்றும் பேராசிரியர் ஜே.குணவர்த்தன (பேராதெனிய பல்கலைக்கழகம்) ஆகியோர் இருந்தனர். இப் பேரவையின் நிபுணத்துவத்தினூடான பரந்த உள்ளடக்கமானது (அரசாங்க, கல்வி மற்றும் சிவில் சமூகத்தின் சிரேஸ்ர நபர்களின் உள்ளடக்கத்தினால்) அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு உதவியது.

CINTEC ஆனது அதன் ஆரம்பத்திலிருந்து ஜனாதிபதியின் கீழ் செயற்பட்டது. இது அரச தாபனங்கள் அனைத்திலும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் CINTEC யினது ஆதிக்கம் தேவைப்பட்டது என்பதனை காட்டுகின்றது. மேலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தியில் பொதுக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் திறம்பட உருவாக்குவதற்கும் போராசிரியர் முனசிங்க தமக்கு உதவுவாரென அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தன நம்பினார்- ஒரு தலைவராக அபிவிருத்திகளினூடாக இலங்கையை மேம்படுத்துதல். உதாரணமாக, 1984 ஆம் ஆண்டு சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஜனாதிபதி தனது விசேட உரையில் பின்வருமாறு கூறினார். “விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அபிவிருத்தியில் கட்டாயமாகத் தேவையான பகுதியாகும். அது தொட்டிலில் இருந்து பகுதியாக வளர்க்கப்பட வேண்டும்…… நாங்கள் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பேரவையினை ஸ்தாபிப்பதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளோம்…… இன்று மைக்ரோ சிப் ஆனது அறிவினைத் தாங்குகின்றது… எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டிய தேவை வளர்ந்துவரும் ஒரு நாட்டின் வாழ்வில் மிக முக்கியமானது … நேரமானது அதன் உள்ளீடாக இருக்கின்றது. அந்த நேரம் இப்போது, அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள், எதிர்கால இளைஞர்கள் மற்றும் பெண்கள் இதன் பயனாளியாவீர்கள்”.

CINTEC இன் செயலகமானது பேரவையின் பணிகளுக்கு ஆதரவளித்தது. அத்துடன் சட்டம் மற்றும் கணினிகள் குழு, தரவுத் தொடர்பாடல் குழு, பொதுத் துறை கணினிமயமாக்கற் குழு மற்றும் கல்விக் குழு போன்ற பல செயற்படு குழுக்கள் காணப்பட்டன. இக் குழுக்களது அங்கத்தவர்கள் அரச துறை, கல்வித்துறை மற்றும் தனியார் துறை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் உடையவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.

பின்னர் மொறட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகம் அத்துடன் NIBM போன்ற சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுடன் CINTEC இணைந்ததால் கல்வி நடவடிக்கைகள் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியன அதன் ஏனைய அம்சங்களாகக் காணப்பட்டது. மேலும் CINTEC ஆனது அக் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில் ரீதியான அமைப்பான இலங்கை கணினிச் சமூகத்துக்கு ஆதரவளித்தது. அத்துடன் CINTEC முக்கியமான அமைச்சுகளுடன் தொடர்பினைக் கொண்டிருந்தது அதன்மூலம் அரச நிறுவனங்களில் கணணிமயமாக்கத்தினை அறிமுகப்படுத்தப்படுவதற்கான காரணியாக CINTEC சேவையாற்றியது. இவ் இணைப்புக்கள் கணினி பயன்பாட்டினையும் தரயுயர்வினையும் எளிதாக்கின.

1984 ஆம் ஆண்டு CINTEC தொடங்கப்பட்டதிலிருந்து அது வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததுடன், வளர்ந்து வரும் நாடுகளில் கணினி பயன்பாட்டினூடாக எவ்வாறு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்கு பிரதானமான ஓரு உதாரணமாகவும் காணப்பட்டது. பல முன்னணி கட்டுரைகள் இலங்கையிலும் சர்வதேச ரீதியலும் வெளியிடப்பட்டது. உலகின் முக்கிய இரண்டு அறிவியல் கல்விக்கூடங்களான அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி யில் உள்ள தேசிய அறிவியல் கல்விக்கூடம் மற்றும் டிரிஸ்ரேயில் உள்ள மூன்றாவது உலக அறிவியல் கல்விக்கூடம் ஆகியன இலங்கையில் நடைபெறும் இத் திரும்பு முனையான செயற்பாடுகளை அங்கீகரித்தன. அவை ஆரம்ப காலங்களில் பல சர்வதேச கருத்தரங்குகளுக்கும், பல புத்தகங்களை வெளியிடுவதற்கும் CINTEC உடன் நெருக்கமான ஒத்துழைப்பினை வழங்கியது (CINTEC-USNAS, 1985 மற்றும் CINTEC-TWAS, 1989)

முன்னேற்றம்

ஓரு தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் போது அதனை உடனே முடிவுக்கு கொண்டு வர முடியாது, மாறாக முதலில் அபிவிருத்திக்கான சவாலொன்று முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளதுடன் அதன் பின்னர் பொருத்தமான தொழில்நுட்பம் தெரிவு செய்யப்பட்டு அதனில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் முனசிங்க அவர்கள் வலியுறுத்தினார். இவர், அரசாங்கமானது ஒரு மேம்படுத்தத்தக்க, உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய வகிவாகத்தினையும், வணிகத்தினை பிரதானமாகக் கொண்டு கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வித்துறை மனித வள திறனை மேம்படுத்துகிறது மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை குறிப்பிடுகின்றது எனக் கூறினார். இதற்கு மேலதிகமாக, பேராசிரியர் முனசிங்க அவர்கள் நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளில் இலக்கு இலக்கம் 9 னை வலிறுத்தினார் – தொழில்துறை, கண்டுபிடிப்புக்கள் மற்றும் உட்கட்டமைப்பு – இவை தகவற் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஆளுமையுடன் நிலையான அபிவிருத்தியில் பிரதான உந்து சக்திகளாக இருக்க முடியும்.

அவரின் முதன்மையான பணிகளைத் தவிர, பேராசிரியர் முனசிங்க அவர்கள் சூழல், வலுவூட்டல், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய துறைகளில் பாரிய சேவையாற்றியதற்காக பாராட்டுக்களைப் பெற்றார். மேலும், இப்பூமியில் நிலையான திறனானது மனித இனத்தினை விடவும் 1½ மடங்கு பயன்படுத்தப்படுகின்றது எனத் தற்போது விளக்குகிறார். அத்துடன் தகவல் தொடர்பாடற் தொழில்நுட்பத்தினால் வளங்கள் செயற்திறன் மிக்கதாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் தகவல் தொடர்பாடற் தொழில்நுட்பத்தினால் வறுமையிலிருக்கின்றவர்களை வறுமையிலிருந்து மீண்டெள உதவுவதோடு செல்வத்தை மேலும் சமமாக பங்கீடு செய்ய முடிகின்றது; தகவல் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றது; மற்றும் சிறந்த ஆளுகையினை வழங்குகின்றது, பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகின்றது. தகவல் தொடர்பாடற் தொழில்நுட்பம் என்பது ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக மட்டுமே கருதப்படாமல் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கும் அபிவிருத்தி மேலும் நிலையானதாக உருவாக்கப்படுவதற்கும் ஒரு முக்கிய உந்துதலாக கருதப்பட வேண்டும்.

தொகுப்பு
வளங்கள்