கொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்

இந்த அத்தியாயம் ஆனது அரச முன்னெடுப்புகளின் போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினூடாக வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டிய தேவையிருந்தமையைக் கவனத்திற் கொள்கின்றது. இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினூடான அபிவிருத்திகளுக்கு கொள்கைகள் மற்றும் சட்ட ரீதியான பரிசீலனைகள் தேவையென்பதை உள்ளடக்கியுள்ளது. இது மேலும் நிறுவனங்களின் வளர்ச்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. இது பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்களால் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, இப்பிராந்தியத்தின் முதல் கணினிக் கொள்கையாகிய தேசிய கணினிக் கொள்கை தொடர்பாக விரிவான விளக்கத்தினையும் உள்ளடக்கியுள்ளது. அந்த நேரத்தில் வேறு எந்த நாடும் இவ்வாறான கணினிக் கொள்கையினைக் கொண்டிருக்கவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறையில் தீர்மானம் எடுக்கும் உயர் கட்டமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பேரவை (CINTEC) பற்றியும் இவ்வத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டது. 

மேலும் இந்த அத்தியாயத்தில் திரு. ஜெயந்த பெர்னான்டோ அவர்களால் தெளிவுபடுத்தப்படுகின்ற சட்டமும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் என்ற பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. CINTEC நிறுவனத்தினால் சட்டம் மற்றும் தகவற் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவிற்கு செயற்குழுவொன்று 1986 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் 1995 இல் இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 14, 2006 இல் இயற்றப்பட்ட மின்னணு பரிமாற்றச் சட்ட இலக்கம் 19, 2007 இல் இயற்றப்பட்ட கணினி குற்றங்கள் சட்ட இலக்கம் 24 மற்றும் 2003 இல் இயற்றப்பட்ட அறிவு சார்ந்த சொத்துக்கள் சட்ட இலக்கம் 36, தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கான சான்றுகள் (சிறப்பு விதிகள்) இவ் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


 • பேராசிரியர் மொகான் முனசிங்க

  பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தகவற் தொழில்நுட்பத்துறையில் தீர்மானம் எடுக்கும் உயர் கட்டமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பேரவையின் (CINTEC) ஸ்தாபகத் தலைவராக இருந்தார். இவர் CINTEC னை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன், CINTEC னால் உருவாக்கப்பட்ட கணணிக் கொள்கை (COMPOL, 1982-83) மற்றும் 1984 இல் இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 10 னை வரைய உதவினார். இவர் மேலும் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்கட்கு சிரேஸ்ர வலுவூட்டல் ஆலோசகராகவும் (1982-86), தொலைத் தொடர்புகள் கொள்கைக்கான (1984-85) ஜனாதிபதி செயற்குழுவின் அங்கத்தவராகவும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் கிளார்க் மையத்தின் நிறுவன ஆளுநர் மற்றும் இலங்கை இயற்கை வளங்கள், வலுவூட்டல் மற்றும் அறிவியல் ஆணையத்தின் (NARESA) அவை உறுப்பினரும் ஆவார்.

  இவர் தனது பட்டப்பின் கற்கைநெறிகளாக பொறியியல் பிரிவில் இங்கிலாந்தின் கேம்பிரிச் பல்கலைக்கழகத்திலும், பௌதீகவியல் பிரிவில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மற்றும் பொருளியல் அபிவிருத்தி பிரிவில் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் கொன்கோடியா பல்கலைக்கழகத்திலும் பட்டங்களைப் பெற்றார். பேராசிரியர் முனசிங்க அவர்கள் மேலும் பல கௌரவ கலாநிதிப் பட்டங்களையும் (கொனரீஸ் கோஸா) அத்துடன் நிலையான அபிவிருத்தி, காலநிலை மாற்றம், ஆற்றல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும் இனங்காணப்பட்டார். இவர் 100 ற்கும் மேற்பட்ட புத்தகங்களையும், 350 ற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதுடன் அவரது ஆய்வுகளுக்காக பல சர்வதேச பரிசுகளையும் பெற்றுள்ளார். இவற்றுள் சமாதானத்திற்கான நோபல் பரிசினை ஐ.நா காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் சார்பில் துணை தலைவராகப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர் பல சர்வதேச விஞ்ஞான கல்விக்கூடங்களின் சக உறுப்பினராகவும், சுமார் 15 தொழில்முறை பத்திரிகைகளின் ஆசிரியர் குழாமிலும் பணியாற்றுகிறார்.
  இவர் கொழும்பிலுள்ள அபிவிருத்திக்கான முனசிங்க நிறுவனத்தின் ஸ்தாபக தலைவராக இருப்பதுடன், ஜனாதிபதியின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்படும் 2030 இல் நிலையான இலங்கை எனும் தொலைநோக்கு மூலோபாயத் திட்டத்தின் தலைவரும் ஆவார். இவரது 50 வருடகால பொதுச் சேவையில் சுற்றுச்சூழல் தரம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி குழுவின் ஆலோசகராகவும் உலக வங்கியின் சிரேஸ்ர ஆலோசகர் அல்லது சிரேஸ்ர முகாமையாளராக சேவையாற்றியது குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 90 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய துறைசார் அனுபவத்தினைக் கொண்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பிரபல்யமான பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஈடுபாட்டின் மூலம் 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியிலான கொள்கையின் இருமுக்கிய சாதனைகளில் நேரடியாகப் பங்களிப்புச் செய்துள்ளார் அவையாவன – ஐ.நா. பொதுச் சபையின் ஒப்புதலிலுள்ள நிலையான அபிவிருத்திக்கான இலக்குகள் (SDG) மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் COP21.

  மேலும் வாசிக்க…
 • பேராசிரியர் வி.கே.சமரனாயக்க

  பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 வருடங்கள் சேவையாற்றிய பின் மிக நீண்ட கால புகழ்மிக்க சேவையாற்றிய ஒருவராக கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகப் பேரவை மற்றும் செனட் இனால் கணினி விஞ்ஞானத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராக முன்னர் கொளரவப் படுத்தப்பட்டிருந்தார்.

  வன்னியாராச்சிகே கித்சிறி சமரனாயக்க அவர்கள் திரு. மற்றும் திருமதி. சமரனாக்க ஆகியோருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். இவரது தந்தையார் ராஜகிரிய கேவவிதாரண வித்தியாலயவில் அதிபராகவும், இவரது தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்தனர். கித்சிறி சமரனாயக்க அவர்கள் அதே பாடசாலையில் ஆரம்பக் கல்வியினைக் கற்றார் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஆனந்தாக் கல்லூரியில் இணைந்தார். போட்டிப் பரீட்சை ஒன்றிற்குத் தோற்றியதன் மூலம் 1950 ஆம் ஆண்டு ரோயல் கல்லூரியில் சேர்ந்தார். இவர் தமது வாழ்நாள் முழுவதும் பாடசாலை சூழலில் அதாவது அதிபருக்காக ஒதுக்கப்பட்ட விடுதியில் வாழ்ந்தமையால் பாடசாலைச் செயற்பாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் விரும்பிச் செயற்பட்டார் அதுவே அவரது வாழ்வில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உந்துசக்தியாக அமைந்தது.

  பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் 1956 ஆம் ஆண்டு விஞ்ஞானத்துறையில் பட்டம் பயில்வதற்காக சிலோன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானதுடன் பின்னர் கணிதப்பிரிவில் விசேட பட்டம் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் கல்வி நடவடிக்கைகளில் திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக முதல் வகுப்பு ஹானர்ஸ்ட் பட்டத்துடன் 1961 ஆம் ஆண்டு தனது பட்டத்தினைப் பூர்த்தி செய்ததுடன் அதன் பின்னர் உதவி விரிவுரையாளராக பணிபுரிய நியமனம் பெற்றார். இதன்மூலம் ஒரு நீண்ட மற்றும் சிறப்புமிக்க பல்கலைக்கழக வாழ்க்கைப்பயணம் தொடங்கியதுடன், தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்பேற்படுத்தப்பட்டது.

  மேலும் வாசிக்க…
 • பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க

  பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க அவர்கள் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பதில் தலைவர் மற்றும் தலைவராகவும் இருந்ததுடன் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பணியாற்றினார்.

  பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் சிலோன் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்ததுடன் கணிதப்பிரிவில் முதலாம் தரத்தில் விசேட விஞ்ஞானமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட விஞ்ஞான புலமைப்பரிசிலைப் பெற்றதுடன் விசேட பட்டத்திற்கான இறுதிப்பரீட்சையில் விஞ்ஞான பீடம் சார்பாகவும் முதல் தகுதி பெற்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்காக 1965 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் அவரது ஆய்வின் தலைப்பு “நேர் கோட்டில் அல்லாத சொட்டாக்கப் புலங்களின் உருவாக்கம்” என்பதாகும். இவர் 1965 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதன் பின்னர் கணிதப்பிரிவில் விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு பேராசிரியராக நியமிக்கப்பட்டதுடன் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், பின்னர் சிலோன் பல்கலைக்கழகத்தில் வித்தியோதயா வளாகம் என அழைக்கப்பட்டதுடன் 1977/78 காலப்பகுதியில் அங்கு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் இருந்தார்.

  இவர் 1978 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார் அத்துடன் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றினார், அங்கு அவர் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிக்காக “தீர்மானம் எடுத்தலில் அளவு சார்ந்த நுட்பங்கள்” எனும் பாடப்பிரிவினை வடிவமைத்து வழங்கினார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு பீடாதிபதியாக 1983, 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டதுடன், பல தடவைகள் பதில் உப வேந்தராகவும் இருந்துள்ளார்.

  பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் 1994 ஆண்டு மூன்றாம் நிலை மற்றும் தொழில்துறைக் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் ICTA வின் தலைவராக இருந்த காலத்தில் அதன் குழுவில் இணைந்தார். பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்ததனால், பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் ICTA வினது பதில் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று வருடத்தின் பின்னர் ICTA வின் தலைவராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் இந்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்காக பல்கலைக்கழகத் துறையில் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் தனது பணிகளை முன்னெடுத்ததற்கான புகழ்மிக்க வரலாற்றினைக் கொண்டுள்ளார். ஆகவே ICTA வினது தலைவராக நியமிக்கப்படுவதற்கான தகுதியையும் அதற்கு மிகப் பொருத்தமானவராகவும் காணப்பட்டார். இவர் இந்தப் பதவியின் மூலம் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் ICTA வினது பிரதான திட்டமாகிய இ-இலங்கை அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டல்களை வழங்கினார். இவர் ICTA வினது தலைவர் பதவியிலிருந்து 2014 ஆம் ஆண்டு விலகினார்.

  மேலும் வாசிக்க…
 • திரு. ஈரன் விக்கிரமரத்ன

  திரு. ஈரன் விக்ரமசிங்க அவர்கள் ICT யில் உயர் அரசாங்க நிறுவனமான இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICTA) நிறுவனத்தின் தலைவராவார், அத்துடன் ICT தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயப்படுத்தினார். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியல் சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசகராகவும், ICTA வினை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை வரையறுப்பதற்கும் பங்காற்றினார், இவற்றிற்கு அவரது உரையாடல் திறமையே காரணமாகும்.

  திரு. விக்கிரமசிங்க அவர்கள் உலக வங்கியுடன் தொடர்புபட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை, வேறு எந்தவொரு நாடும் பெற்றிராத முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமாகக் குறிப்பிடுகின்றார் ஆகவே அது ஓரு முன்னிலையான திட்டமாயிருந்தது இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை திட்டமிடும் போது முதலில் அதற்கு ஒரு தூரநோக்கு வேண்டுமெனக் கருதினார். பின்னர் ஒரு திட்டமும் ஒரு திட்டவரைவும் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் அத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விரிவாக தீர்மானிக்க செயற்பாடுகள் தேவைப்பட்டது. ஒரு கண்காணிப்பு முறை அங்கு அவசியமானது. இவ்வாறான திட்டங்களின் போது பேண்தகைமை நிச்சயப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் அனைத்து நன்மைகளும் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச்சேர வேண்டுமென மேலும் கூறினார்.

  மேலும் வாசிக்க…
 • திரு. மஞ்சு ஹத்தொட்டுவ

  திரு. மஞ்சு ஹத்தொட்டுவ அவர்கள் தனது பாடசாலை கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானமானி (கௌரவ) பட்டத்தையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் மில்லேனியம் ஐ.டி (MIT) நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி / நிறைவேற்று பணிப்பாளராகவும் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் ​மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை தலைவராகவும்,  பணியாற்றியுள்ளார். MIT யில் பணிபுரியும்போது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அவர் காட்டிய ஈடுபாடானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறையை அபிவிருத்தி செய்வதில் தனது ஆர்வத்தை சுட்டிக்காட்டுவதாக திரு. ஹத்தொடுவ குறிப்பிடுகிறார்.

  அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் ( ICTA) தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளர் / தலைமை நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.  ICTA நிறுவனத்தின் செயல்பாடுகள் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 திகதியன்று கொழும்பு 05, கிரிமண்டல மாவத்தை எனும் இடத்தை முகவரியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

  மேலும் வாசிக்க…
 • திரு.ஜெயந்த பெர்னான்டோ

  ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இலங்கையில் ICT சட்டத்தினை சீர்திருத்துவதற்கு 20 ஆண்டுக்கு மேல் முன்னோடியாகச் செயற்பட்ட ஓர் சட்டத்தரணியாவார். இவர் IT மற்றும் தொடர்பாடல் சட்டப்பிரிவில் (லண்டன் பல்கலைக்கழகத்தில்) விசேட முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளதுடன், தெற்காசியாவிலேயே முதன் முதலாக “ஜ.நா மின்னணு தொடர்பாடல்கள் உடன்படிக்கை” இல் இணைவதற்கும், “பூடபெஸ்ட் இணையக் குற்ற உடன்படிக்கை” இல் இலங்கையை இணைத்துக் கொள்வதற்காகவும் முன்னின்று செயலாற்றினார்.

  இவரது ICT சட்ட நிபுணத்துவமானது பரந்த தலைப்புக்களை உள்ளடக்குகின்றது, அவற்றில் தகவல் தொழில்நுட்பபாதுகாப்பு அல்லது இணையவழிக் குற்றம் (இணையம் சார்ந்த குற்றங்கள்), அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் மென்பொருள் உரிமம், மின்னணு பரிமாற்றங்கள் மற்றும் கையடக்க வங்கிச் சேவை, தனியுரிமை, இணைய ஆளுமை மற்றும் பெரிய IT முறைமைகளை ஒப்பந்தமிடல் அல்லது வரைதல் ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். இவர் பல நாடுகளில் ICT சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களில் பரந்த அளவில சேவையாற்றிய அனுபவம் கொண்டவர் அத்துடன் ஜரோப்பிய பேரவை மற்றும் UNCITRAL ஆகியவற்றில் நிபுணராகச் சேவையாற்றியுள்ளார். இவரது ஓய்வு நேரங்களில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் பல பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

  தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி (இலங்கை CERT) உட்பட பல வாரியங்களில் பணியாற்றுகிறார். அவர் முன்பு LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் (.LK) வாரியத் தலைவராக பணியாற்றினார். கூடுதலாக, அவர் இலங்கை ICT ஏஜென்சியின் (ICTA) பொது ஆலோசகராகவும், தலைமை சட்ட அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

  இவ் இணைய ஆளுமையுள்ள அரங்கத்தில், ICANN இன் அரசாங்க ஆலோசகர் குழுவின் (GAC), துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் தெற்காசிய மனிதர் என்பது சிறப்பானது, மேலும் ICANN இன் நியமனக் குழுவின் துணை தலைவராகவும் (2005-07) சேவையாற்றியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ட்ராஸ்பர்க் இலுள்ள ஜரோப்பியப் பேரவையின் இணையவழி குற்ற கமிஷன் கமிட்டியின் உலகளாவிய செயலகத்தின் (T-CY) ஒன்பது பேர் கொண்ட குழுவில் தெரிவு செய்யப்பட்ட முதல் தென்கிழக்காசிய மனிதர் எனும் பெருமையைப் பெற்றார். T-CY ஆனது உலகளாவிய ரீதியில் பூடபெஸ்ட் இணையவழி குற்ற உடன்படிக்கையை நிர்வகித்தது.

  திரு.ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இங்கிலாந்து அரசாங்கத்தின் பிரிட்டிஷ் செவெனிங் ஸ்கோலர் ஆவார் (2002). அத்துடன் அமெரிக்காவின் ஐசனோவர் சக உறுப்பினருமாவார்.

  மேலும் வாசிக்க…
 • திரு. வசந்த தேசப்பிரிய

  திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினது செயலாளர் ஆவார். இவர் அம்பலாங்கொடை தர்மாசோகா கல்லூரியில் மற்றும் இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். இவர் தனது முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினை இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன், கொழும்பு கணினியியல் கல்லூரியில் (UCSC) தகவல் தொழினுட்பத்தில் பட்டபின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ஒரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுச் வேவையாற்றிய அனுபவமுள்ளவர். அவர் அரசு கணினிமயமாக்கல் திட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளார்.

  திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் ஆரம்பத்தில் இறப்பர் அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அலுவலகங்களில் தகவல் தொழினுட்பப் பிரிவில் பொறுப்பதிகரியாக பணியாற்றினார். இவர் 1985 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் இறப்பர் மீள் நடுகை மற்றும் மானிய நிர்வாக திட்டத்தினைக் கணினிமயமாக்கலில் ஈடுபட்டார். இவர் 1998 ஆம் ஆண்டு சிரேஸ்ட உதவிச் செயலாளராக (IT) பொது நிர்வாக அமைச்சில் இணைந்தார். இவர் பொது நிர்வாக அமைச்சில் தகவல் தொடர்பாடற் தொழினுட்பத்தின் பயன்பாட்டினை அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடியாவார்; இவ் அமைச்சானது பொது நிர்வாகச் சுற்றுநிருபங்களை முழு பொதுத்துறைக்கும் மினனஞ்சல் செய்யும் செயற்பாட்டினை முதன்முறையாக ஆரம்பித்ததுடன் அதனை அமைச்சினது இணையத்தளத்திலும் பிரசுரித்தது. இவ் அமைச்சினது முதல் இணையத்தளமானது திரு. தேசப்பிரிய அவர்களின் தலைமையிலான ஒரு குழுவினரால் 1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தில் (ICTA) 2003 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார். இதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு, மறுகட்டமைப்பு அரசினது பணிப்பாளராக திரு. தேசப்பிரிய அவர்கள் தரமுயர்த்தப்பட்டார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ICTA வின் தலைமைத்துவக் குழுவின் அங்கத்தவராக இருந்ததுடன் அரச மறுகட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை வடிவமைப்பதில் மற்றும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார்.

  மேலும் வாசிக்க…
 • திரு. கோலித தர்மவர்தன

  திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) “கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்………” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாவனையின் ஊடாக உருவாகக் கூடிய புதிய சூழ்நிலையுடன் பணியாற்றக் கூடிய சாத்தியக்கூறுகளை உறுதி செய்வதற்கு ஆதாரச் சட்டத்தை மீளாய்வு செய்வதன் அவசியத்தை குழு ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தது. சட்டங்களை வகுப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் முக்கிய பொறுப்பு திரு. தர்மவர்தன அவர்களிடம் வழங்கப்பட்டது. கணினிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களால் உருவாக்கப்பட்ட தகவல்களை ஏற்றுக் கொள்வது குறித்து இந்தப் பணி முடிவுறுத்தப்பட்டதுடன், அதன் விளைவாக 1995 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க ஆதாரச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

  மேலும் வாசிக்க…