இணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு

 • பேராசிரியர் அபய இந்துருவ

  பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார்.

  பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “லங்கா எக்ஸ்பெரிமென்ரல் அகடெமிக் அன்ட் ரிசேச் நெட்வேர்க்” யினை உருவாக்கியதைக் குறிப்பிடலாம் மற்றும் மிகக்குறைந்த வளங்களை ஒன்றிணைத்து LEARNmail -இலங்கையில் உள்ள கல்விசார் மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கான முதல் இணைய மின்னஞ்சல் சேவையினை 1990 ஆண்டு ஸ்தாபித்தார். இலங்கையின் கன்ரிகோட் டொப் லெவல் டொமைன் பதிவகமான .LK யினால் LEARNmail அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு இயற்கையான முன்னேற்றமாக இருந்தது. இதில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் தொழினுட்பப் பிரிவிலும் அபய இந்துருவ அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கும் பொறுப்பாக இருந்தனர்.

  பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் இலங்கை கணினி மற்றும் தகவல் தொழினுட்ப பேரவையின் (CINTEC) முதல் சபையினது உறுப்பினராக இருந்ததுடன் CINTEC சபையில் 1998 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளார்.
  இவர் ஆற்றிய சேவைகள் அனைத்தும் இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினை அறிமுகப்படுத்துவது சார்ந்தவையாக இருந்தது, அத்துடன் அவரடைந்த முக்கிய இலக்குகளின் விளைவுகளை தற்போது இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினைப் பயன்படுத்தும் அனைவ ராலும் உணரமுடியும். இதற்காக இவருக்கு இணையச் சமூகத்தினால் (இன்ரநெட் சொசைற்றி) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது – பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 2014 அம் ஆண்டு இன்ரநெட் கோல் ஓஃப் பேம் இனுள் சேர்க்கப்பட்டார்.

  மேலும் வாசிக்க…
 • பேராசிரியர் கிஹான் டயஸ்

  பேராசிரியர் கிஹான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார்.

  பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவராவார். அத்துடன் இலங்கையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனமான லங்கா அக்கடெமிக் நெட்வேர்க் (LAcNet) இன் ஸ்தாபகரும் முதல் தலைவரும் ஆவார். இவர் மேலும் ஒரு சில இணைய சேவை வழங்குனர்கள் தங்களது சொந்த வலையமைப்பினை உரூவாக்குவதற்கு உதவினார்.

  பேராசிரியர் கிஹான் அவர்கள் 2003 மற்றும் 2004 ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் ICT மேம்பாட்டில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளப் பொறுப்பான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஒரு ஸ்தாபக திட்டப் பணிப்பாளராக இருந்தார். இவர் ICTA இல் இருந்தபோது உள்ளூர் மொழிகளில் ICT இனைப் பயன்படுத்தும் திட்டத்தினை தலைமை தாங்கியதுடன், யுனிகோட் இணக்கமான எழுத்துருக்கள் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டார் அத்துடன் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் SLS 1134: 2004 என சான்றளிக்கப்பட்ட ICT சிங்கள தரநிலை வரைவை வடிவமைப்பதிலும் சேவையாற்றியுள்ளார். இவர் ICT இல் SLSI இன் துறைசார் குழுவின் தலைவராவார். இவர் ICTA இல் இருந்தபோது யுனிகோட் தரநிலை தொடர்பாக பல விழிப்புணர்வு மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சிகளை எழுத்தாக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக ஒழுங்கமைத்தார். இலங்கையின் இரண்டு IDN ccTLDs க்கள் மீது உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக ICTA இன் IDN டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராகவும் பணிபுரிந்தார் (தமிழ் மற்றும் சிங்களம்), இது LKNIC ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவர் இன்டர்நெட் சொசைட்டி ஸ்ரீலங்கா அத்தியாயத்தின் முன்னாள் தலைவராவார். இலங்கையில் இணைய அபிவிருத்தியில் பேராசிரியர் கிஹான் அவர்களின் முன்னோடியான பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் முகமாக 2013 ஆம் ஆண்டு தி இன்ரநெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டார்.

  மேலும் வாசிக்க…
 • திரு.லால் டயஸ்

  திரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார்.

  திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார். இவர் இலங்கை CERT யினை உருவாக்குவதற்கு கருவியாகத் தொழிற்பட்டதுடன் தற்போது அதன் சிரேஸ்ர நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

  இலங்கை CERT யினை உண்மையான தொழில்முறை அலங்காரமாக நிலைநிறுத்துவதற்காக சைபர் செக்யூரிட்டி ஸ்பேஸில் பிற தேசிய CERT க்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உலக அமைப்புகளுடன் உறவுகளை உருவாக்குவதற்கான தனது பரந்த சர்வதேச வெளிப்பாட்டை திரு.லால் டயஸ் ஆல் பயன்படுத்த முடிந்தது.

  மேலும் வாசிக்க…
 • திரு. சிறீ சமரக்கோடி

  திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். இவர் மின்னணுவியல் மீதான ஆர்வத்தை இங்கு தான் முதலில் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கு மொபைல் தொலைபேசி முறையினை கொண்டுவருவதில் முன்னோடியாக இருந்தார். இவர் செல்டெல் லங்கா (Celltel Lanka) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் ஆரம்ப உரிமப் பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஈடுபட்டார். மேலும், லங்கா இன்டர்நெட்டை அமைப்பதிலும் அவர் ஈடுபட்டார், இது இலங்கையில் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net ஐத் தொடங்கியது.

  மேலும் வாசிக்க…
 • பேராசிரியர் ரோஹன் சமரஜீவா

  பேராசிரியர் ரோஹன் சமரஜீவ அவர்கள் 1998-99 காலப்பகுதியில் இலங்கையில் தொலைத்தொடர்புகள் திணைக்களத்தின் பிரதான பணிப்பாளராக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பினார். உரிமம் பெற்ற பின்னர் இரண்டு புதிய நிலையான ஆபரேட்டர்களான சன்டெல் மற்றும் லங்கா பெல் மற்றும் சிறீலங்கா டெலிகாம் ஆகியன தனியார்மயமாக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம், ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் திணைக்களமானது சிறீலங்கா டெலிகாம் (SLT) எனப்படும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது. 1996 இல் இயற்றப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் ஒழுங்குமுறை நிறுவனத்தின் சுயாட்சியை வலுப்படுத்தியதுடன், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (TRC) வழிவகுத்தது.

  மேலும் வாசிக்க…
 • கலாநிதி கவன் ரட்ணதுங்க
     

  கலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடி என்ற இடத்தில், அவருக்கு முதலில் ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தது. கலாநிதி கவன் அவர்கள் பிரின்ஸ்டனில் இருந்து கனடாவில் உள்ள டொமினியன் வானியற்பியல் ஆய்வகத்திற்கும், பின்னர் 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள நாசா கோடார்ட் விண்வெளி விமான மையத்திற்கும் சென்றார்.

   

  மேலும் வாசிக்க…