பேராசிரியர் கிஹான் டயஸ்

பேராசிரியர் கிஹான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார்.

பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவராவார். அத்துடன் இலங்கையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனமான லங்கா அக்கடெமிக் நெட்வேர்க் (LAcNet) இன் ஸ்தாபகரும் முதல் தலைவரும் ஆவார். இவர் மேலும் ஒரு சில இணைய சேவை வழங்குனர்கள் தங்களது சொந்த வலையமைப்பினை உரூவாக்குவதற்கு உதவினார்.

பேராசிரியர் கிஹான் அவர்கள் 2003 மற்றும் 2004 ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் ICT மேம்பாட்டில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளப் பொறுப்பான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஒரு ஸ்தாபக திட்டப் பணிப்பாளராக இருந்தார். இவர் ICTA இல் இருந்தபோது உள்ளூர் மொழிகளில் ICT இனைப் பயன்படுத்தும் திட்டத்தினை தலைமை தாங்கியதுடன், யுனிகோட் இணக்கமான எழுத்துருக்கள் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டார் அத்துடன் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் SLS 1134: 2004 என சான்றளிக்கப்பட்ட ICT சிங்கள தரநிலை வரைவை வடிவமைப்பதிலும் சேவையாற்றியுள்ளார். இவர் ICT இல் SLSI இன் துறைசார் குழுவின் தலைவராவார். இவர் ICTA இல் இருந்தபோது யுனிகோட் தரநிலை தொடர்பாக பல விழிப்புணர்வு மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சிகளை எழுத்தாக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக ஒழுங்கமைத்தார். இலங்கையின் இரண்டு IDN ccTLDs க்கள் மீது உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக ICTA இன் IDN டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராகவும் பணிபுரிந்தார் (தமிழ் மற்றும் சிங்களம்), இது LKNIC ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவர் இன்டர்நெட் சொசைட்டி ஸ்ரீலங்கா அத்தியாயத்தின் முன்னாள் தலைவராவார். இலங்கையில் இணைய அபிவிருத்தியில் பேராசிரியர் கிஹான் அவர்களின் முன்னோடியான பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் முகமாக 2013 ஆம் ஆண்டு தி இன்ரநெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் தற்போது மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) பணியாற்றுகின்றார் –இவர் ஆரம்ப வயதிலிருந்து கணினிகளில் ஆர்வமாக இருந்தார். இவரிடமிருந்து பொறியியல் சார் கட்டுரைகளை பெறுவதற்கு இவரது தந்தை பயன்படுத்திக் கொண்டார், மேலும் அவை மூலம் நுண்ணறிவு கொண்டதன் மூலம் பேராசிரியர் டயஸ் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என முடிவு செய்ததாக நினைவு கூர்ந்தார்.

1979 ஆம் ஆண்டு தனது உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், ஜிகான் கணினிகளை இனங்கண்டார். இவர் பேஸிக் புரோகிராமிங் யில் ஒரு புத்தகத்தினை கண்டுபிடித்தார் ஆனால் அவரின் பாவனைக்கு ஒரு கணினியும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் பார்ட்லீட் எலெக்ட்ரானிக்ஸ் யினால் ஒழுங்கமைக்கப்பட்ட பேஸிக் புரோகிராமிங் தொடர்பான ஒரு கணினி கற்கைநெறிக்கான விளம்பரமொன்றினை ஒரு பத்திரிகையில் பார்த்தார். பேராசிரியர் கிஹான் அதற்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்டார் அத்துடன் பேஸிக் மொழியினைப் பயன்படுத்தி ஒரு மைக்ரோ கொம்பியூட்டரில் எவ்வாறு நிரலாக்கம் செய்வது என கற்றுக் கொண்டார். அதன்பின்னர் தான் கணினி தொடர்பான பணிகளைத் தொடர வேண்டும் என தீர்மானித்துக் கொண்டார்.

பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கற்பதற்காகத் பேராசிரியர் கிஹான் தெரிவு செய்யப்பட்டார். இவர் 1986 ஆம் ஆண்டு பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார், அதேநேரம் கணினி விஞ்ஞானத் துறையினை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தினை மொறட்டுவை பல்கலைக்கழகம் மேற்கொண்டிருந்தது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கணினி விஞ்ஞானத் துறைக்கு பொறுப்பாளராக பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் மற்றும் அத்துறையில் பணிக்கமர்த்தப்பட்ட முதல் நபராகவும் அவர் காணப்பட்டார். பேராசிரியர் கிஹான் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினைத் பின்பற்றுவதற்காக 1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையை விட்டு வெளியேறினார்.
இவர் கலிபோனியாவில் இருந்தபோது இணையத்தினை இனங்கண்டார். அந்த நேரத்தில் இணைய வசதிகள் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு மட்டும் கிடைக்கக்கூடியவாறு வரையறுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் இருந்த இலங்கையர்கள் தமக்கிடையே தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மின்னஞ்சலினைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தக் குழு படிப்படியாக வளர்ச்சியடைந்து SLNET – இலங்கை வலையமைப்பு என பெயரிடப்பட்டது. இது சமூக ஊடக வலையமைப்புகளில் ஒன்றாக இருந்ததனை அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அதன்பின்னர் இணையத்தினூடாக இலங்கையையும் இணைக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

டயல்-அப் மொடம் உடனான தொலைபேசி இணைப்பே அப்போது கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தொழினுட்பமாகும் அத்துடன் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கான தொலைபேசி அழைப்பிற்கான கட்டணமும் மிக அதிகமாகக் காணப்பட்டது. பேண்தகைமையை உறுதிசெய்வதற்காக தன்னார்வ, இலாப நோக்கற்ற நிறுவனமான லங்கா அகாடமிக் நெட்வேர்க்கினை (LAcNET) திரு.ஜிகான் அவர்கள் ஸ்தாபித்தார்.

நாட்டின் குறியீடு மேல் நிலை டொமைன் (கன்ரிகோட் ரொப்லெவல் டொமைன்) .lk இனை உருவாக்குவது பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்களின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. பல நாடுகள் இவ்வாறான இரு எழுத்துக்களைக் கொண்ட கன்ரிகோட்களை பயன்படுத்தின அதாவது ஜப்பான் நாடு .jp யினையும் மற்றும் ஜக்கியராஜ்ஜியம் .uk யினையும் பயன்படுத்தியதனையும் உதாரணமாகக் கூறலாம். இலங்கைக்கான கன்ரிகோட் .lk இனைப் பெறுவதற்கான கோரிக்கையினை ஜொன் பொஸ்ரல் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் கிஹான் டயஸ் அனுப்பினார். அதன்பயனாக ஜொன் பொஸ்ரல் அவர்கள் .lk யினை பதிலாக வழங்கி அதனை பேராசிரியர் ஜிகானிடம் ஒப்படைத்தார். பின்னர், பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் .lk டொமைன் பதிவகத்தின் பதிவாளராக இருந்ததுடன் அதனைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

ஜிகான் அவர்கள் 1992 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார். மொறட்டுவை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களும் இணைக்கப்பட்டன. அதனையடுத்து ஒரு இணைய இணைப்பொன்று சிறீலங்கா ரெலிகோமின் ஊடாக பெறப்பட்டது. இதுவே இலங்கையின் முதல் கல்விசார் வலைமைப்பான இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) ஆரம்பமாகவிருந்தது, இதனை உருவாக்குவதற்கு பேராசிரியர் டயஸ் அவர்கள் ஒரு கருவியாக காணப்பட்டதுடன் 10 ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கினார். அண்ணளவாக 12 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இவ் வலையமைப்பில் 2002 ஆம் ஆண்டளவில் இணைக்கப்பட்டனர்.

பேராசிரியர் டயஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஓய்வு விடுமுறையிலிருந்தார். இவர் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பத்தில் உயர் அரச தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னைய அமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC) இணையக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இந்தக் குழுவானது இலங்கையில் இணையத்தினை விருத்தி செய்யவும் மற்றும் தரமுயர்த்தவும் காணப்பட்ட பிரச்சினைகளை எடுத்துரைத்ததுடன் இணையம் பற்றிய தகவல்களை கொண்ட ஒரு வலைத்தளத்தினை உருவாக்குவதற்கும் ஒப்புக் கொண்டது. அதில் காணப்பட்ட தகவல்கள் மூன்று மொழிகளிலும் உள்ளடக்கப்பட்டதாக இருக்க வேண்டிய தேவையேற்பட்டது – அதாவது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் இருக்க வேண்டும். ஆனால் சிங்கள மொழிக்கான எழுத்துருக்கள், தனியுரிமை மரபு எழுத்துருக்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாதவாறு பயன்படுத்தப்பட்டு வந்தமையையும் இந்தக் குழு உணர்ந்தது. சிங்களமொழியில் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதெனில் அதனுடன் ஒரு எழுத்துரு இணைக்கப்பட்டிருந்தது. எழுத்துரு அனுப்பப்படவில்லையெனில், மின்னஞ்சல் அடையாளம் காணமுடியாத குறியீடுகளாக காட்டப்படும். ஓன்லைனில் சிங்கள பத்திரிகைகளை வாசிக்கவேண்டுமெனில், வேறுபட்ட எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது.

சிங்கள மொழிக்கான எழுத்துருக்கள் சர்வதேச தரநிலை யுனிகோட்டிற்கு இணக்கமாக்கப்பட வேண்டும் என பல பரந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகளின் பின்னர் இக்குழு தீர்மானித்தது.

இந்தக் குறியீடு மூலம் சிங்கள மொழி உட்பட அனைத்து மொழிகளையும் கையாள முடிவதுடன், தரவு பரிமாற்றங்கள் எழுத்துருக்கள் இணைக்கப்படாமல் நடைபெறுவதற்குச் சாத்தியமாகவும் மற்றும் வலைத்தளங்களை வாசிக்கும் போது எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய தேவையில்லாமலும் இருக்க வாய்ப்பேற்படுத்தப்பட்டது. CINTEC இல் வைத்து கொழும்பு பல்கலைக்கழக கணினியல் கல்லூரி, இலங்கை தரநிலைகள் நிறுவனம் போன்ற பல பங்குதாரர்களைக் கொண்ட ஒரு எழுத்துரு உருவாக்கக் குழு உருவாக்கப்பட்டதுடன் அதன் தலைவராக பேராசிரியர் டயஸ் நியமிக்கப்பட்டார்.

CINTEC இன் முடக்கம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப நிறுவனத்தின் உருவாக்கத்தினால் (ICTA) எழுத்துரு குழுவானது ICTA னால் பொறுப்பேற்கப்பட்டதுடன் அது உள்நாட்டு மொழிகள் செயற்படு குழு என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. பேராசிரியர் டயஸ் அவர்கள் ஒரு திட்டப் பணிப்பாளராக ICTA இல் இணைந்தார் அத்துடன் ICTA வின் உள்நாட்டு மொழிகள் முயற்சி குழுவினையும் தலைமை தாங்கினார். சிங்களத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் யுனிகோட்டிற்கு இணக்கமான சிங்கள எழுத்துருக்களை கணினிகளைப் பயன்படுத்தி எழுத முடியுமென பேராசிரியர் டயஸ் தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இவ் முயற்சி ஒரு வெற்றியாக இருக்கின்றதுடன் மற்றும் சிங்களத்தில் ICT யைப் பயன்படுத்துவது தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது.

இணையச் சமூகத்தின் இலங்கை அத்தியாயத்தினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் பேராசிரியர் டயஸ் அவர்கள் ஈடுபட்டிருந்தார் அத்துடன் அதன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இணையத்தினை பாதுகாப்பாக பயன்படுத்துவது, இணையம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது மற்றும் இணையத்தினை அதிக பாவனையாளர்கள் பயன்படுத்தக்கூடியவாறு எளிதாக்குதல் போன்ற பணிகளில் இதன் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். மேலும், இணையத்தினை மிக குறைந்த செலவில் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதுடன் அத்துடன் வீடு, அலுவலகம் போன்ற எந்தவொரு இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மற்றும் எந்த நபராலும் இணையத்தினைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது என பேராசிரியர் டயஸ் கூறுகின்றார்.

பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் இன்ரநெட் ஹால் ஆஃப் ஃபேம் யினுள் 2013 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் 1995 ஆம் ஆண்டிலிருந்து இன்ரநெட் சொசைட்டியுடன் பணியாற்றுகின்றார். இது இலங்கையில் இணைய அபிவிருத்திக்காக பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் ஆற்றிய முன்னோடியான பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சிறந்த அங்கீகாரமாகும். இதனை முன்னிட்டு கருத்து வெளியிட்ட பேராசிரியர் அவர்கள், இது இலங்கையில் இணைய வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்காக கிடைத்த சிறந்த அங்கீகாரம் எனவும், இது எனக்கு மட்டுமன்றி என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரம் எனவும் பெருமையுடன் கூறுகின்றார். மேலும், இலங்கையர்கள் அவர்களின் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இணையத்தினை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அது எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் எனவும் அத்துடன் அதனை பாதுகாப்பாகவும், வேகமாகவும் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் உருவாக்கி அதற்காக பல பயனுள்ள ஆப்ளிகேசன்களையும் உருவாக்க வேண்டிய தேவையுள்ளதென இந்தப் பிரிவில் உள்வாங்கப்படும் நபர்களுக்கு பேராசிரியர் டயஸ் அறிவுரை வழங்குகின்றார்.

முடிவாக, இவர் தற்போது இ-கற்றல் செயன்முறைகளில் ஈடுபட்டுவருவதாகக் கூறுகின்றார்; அதாவது குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழில் கற்கின்றவர்களுக்கு எவ்வாறு இ-கற்றல் கிடைக்குமாறு செய்யமுடியும்  போன்ற செயற்பாடுகள். இவர் ஆர்வம் காட்டுகின்ற மற்றைய பிரிவாக மொழி காணப்படுகின்றது. நமது பாரம்பரியத்தை நாம் பெருமைப்படுத்த வேண்டும் அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ICT யின் பயன்பாட்டை எளிதாக்குவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

Video Resources

 

Launch of Website prof.rohan.lucas.lk
by Prof Gihan Dias

 

2013 Induction Ceremony: Acceptance Speech
Prof Gihan Dias

 

2013 Historic Profile
– Prof Gihan Dias –
Internet Hall of Fame Global Connector

தொகுப்பு

வளங்கள்

‘Electronic mail’ links up Sri Lankan scientists, The Island – 20th August, 1992
CINTEC says strong demand for ‘Dot lk’
Launch of the Domestic Internet Exchange
Launch of the Domestic Internet Exchange -1 
Sri Lanka Sentry – Guidelines on Information Security for end-users
 
Prof. Gihan Dias and Building Lankan Internet – ReadMe