கட்டண அமைப்புகள்

 • திரு. ஜானக்க டி சில்வா

  திரு. ஜானக்க டி சில்வா சிலோன் பல்கலைக்கழகத்தின் பேராதெனிய வளாகத்தில் பௌதீகவியல் மற்றும் கணிதத்துறையில் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இவர் சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு MBA பட்டம் பெற்றுள்ளார். மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka), மேலாண்மைக் கணக்காளர்கள் பட்டய நிறுவனம் மற்றும் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கிறார். திரு. ஜானக்க டி சில்வாவின் கணினிச் செயன்முறையுடனான சங்கம், இலங்கை வங்கியின் செயற்பாடுகளை கணினிமயமாக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டபோது 1978 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் திரு. ஜானக்க டி சில்வா சம்பத் வங்கியில் ஸ்தாபக பொது மேலாளர் / தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார், அங்கு மல்டி-பொயின்ட் ஏ.டி.எம் வலையமைப்பு மற்றும் நீடிக்கப்பட்ட வங்கி நேரம் போன்ற பல இலக்குகளை அடைவதற்கு அவர் பொறுப்பாகவிருந்தார். 1995 இல் அவர் யூனியன் வங்கியிலும் இணைந்தார், அங்கு செயற்பாடுகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் பல முக்கிய இலக்குகளை அடைந்தார்; வங்கிக் கிளைகள் என்ற கருத்து நீக்கப்பட்டது, ’தொலைபேசி வங்கி’ அறிமுகப்படுத்தப்பட்டது அத்துடன் யூனியன் வங்கியானது இணையத்தில் தனது சொந்த வலைத்தளத்தினைக் கொண்ட முதல் வங்கியாக இருந்தது. இணைய வங்கிச்சேவையை அறிமுகப்படுத்திய முதல் வங்கி இதுவாகும்.

  மேலும் வாசிக்க…
 • நயேனி பெர்னான்டோ அம்மணியார்

  நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யூனிவஸிட்டி ஓஃப் சிலோன்) பட்டம் பெற்ற பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவில் ஜோர்ஜ் வோஸிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் பொருளாதார புள்ளிவிபர துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை கணனி நிபுணர்கள் சங்கத்தின் (CSSL) ஒரு உறுப்பினராவார். மேலும் இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சொன்ரா கழகத்தினால் பெண் சாதனையாளர் என கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

  இவர் 1971 ஆம் ஆண்டு தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் ஒரு நிரலாளராக தகவல் தொழினுட்பத் துறையில் தனது தொழிலினை ஆரம்பித்ததுடன், 1978 இருந்து 2000 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியிலும் கடமையாற்றினார். இவர் 1988 இல் இலங்கை தன்னியக்க காசோலைத் தீர்வகத்தினை (SLACH) நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகவிருந்ததுடன் அதன் முகாமையாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார்.

  1993 இல் ஆஃப்லைன் நிதி பரிமாற்றும் முறைமையினையும் SLIPS (இலங்கை இன்ரபேங்க் பேமென்ற் சிஸ்டம்) அறிமுகப்படுத்தும் செயன்முறையினை ஆரம்பித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தினையும் வகித்தார். 1994 ஆண்டு முதல் 2000 வரையான காலப்பகுதியில் மத்தியவங்கியின் தகவல் தொழினுட்பத் துறையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

  1996 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலின் பின்னர் அதனை விரைவாக கட்டியெழுப்புவதற்காக தகவல் தொழினுட்பத் துறைக்குத் தலைமைத்துவம் வழங்கினார், இத் தாக்குதலில் வங்கியின் கணனித் தொகுதிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும் இவர் Y2K தயார்நிலைக்கான இலங்கை குழுவில் நிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றினார்.

  இவர் ஓய்வு பெற தகுதியான வயதினை அடைந்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கியின் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
  இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 வரையான காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் தனியார் துறையில் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார்.

  இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஸ் நாட்டின் மத்திய வங்கிக்காக நாடளாவிய ரீதியில் செயற்படத்தக்க இலத்திரனியல் காசோலைத் தீர்வு முறைமை மற்றும் இலத்திரனியல் பணப்பரிமாற்ற வலையமைப்பு (எலக்ரோனிக் செக் கிளியரிங் சிஸ்டம் மற்றும் எலக்ரோனிக் பன்ட் ட்ரான்ஸ்பர் நெட்வேர்க்) ஆகியவற்றினை நிறுவுவதற்காக தள திட்ட முகாமையாளராக செயற்பட்டார், அத்துடன் 2010 இல் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். நயேனி பெர்னான்டோ அம்மணியார் கணனி நிபுணத்துவ சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராவார். அத்துடன் அதன் சபையின் துணைத் தலைவராக 1993 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை சேவையாற்றினார்.

  நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் பெயரானது இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித் தொழிற்துறையில் தகவல் தொழினுட்பத்தின் நடைமுறைப்படுத்தலுடன் ஒப்புவிக்கப்படுகின்றது அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல இலக்குகளை அடைய உதவிய கருவியாக இவள் இருந்தாள்.

  மேலும் வாசிக்க…
 • கலாநிதி ரானி ஜெயமஹா
  கலாநிதி ரானி ஜெயமஹா இற்கு 1970 ஆம் ஆண்டில் பேராதனையில் அமைந்திருந்த அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கியியல் இல் முதல் பட்டம், பி.ஏ(Hons) வழங்கப்பட்டது. சிலோன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராக ஒரு வருடம் பணியாற்றிய அவர், பின்னர் 1971 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சித் துறையில் (ERD) பொருளாதார நிபுணராக இணைந்தார். அதன் பின்னர், அவர் ஓர் ஐரோப்பியப் பேரவைப் புலமைப்பரிசிலைப் பெற்றார் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து, ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு (1975-1976) முதுகலைப் பட்டம் பெற்றார்.  

  அவர் 1976 ஆம் ஆண்டில் பொருளியலில் முதுவிஞ்ஞானமானிப் பட்டம் பெற்றார் அத்துடன் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த பின்னர் ஈஆர்டியின் (ERD) பணம் மற்றும் வங்கிப் பிரிவில் மூத்த பொருளாதார நிபுணராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர், அவர் ஈஆர்டியில் பல பிரிவுகளுக்குப் பொறுப்பான துணைப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1987 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (phD) கற்கையை ஆரம்பித்தார். கலாநிதி ஜெயமஹா 1989 ஆம் ஆண்டில் நாணய பொருளாதாரத்தில் பிஎச்டி (phD) பட்டம் பெற்று இலங்கைக்குத் திரும்பினார் அத்துடன் சிபிஎஸ்எல் (CBSL) இல் வங்கி அபிவிருத்தித் துறையில் பணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

  மேலும் வாசிக்க…
 • திரு. சன்னா டி சில்வா

  திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

  இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய பின்னர், இலங்கையில் முதல் இணைய நிறுவனமான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். இந்தக் கம்பனியானது இலங்கையின் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net யினை வடிவமைத்தது அது இப்போதும் நடைமுறையிலுள்ளது. இலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது; அவை டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் என்பனவாகும். இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையம், TNL ரேடியோ லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் மற்றும் மைக்ரோசொப்ற் சிறீலங்கா ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார் பின்னர் IBM இல் இணைந்து கொண்டார்.

  அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் திரு. சன்னா டி சில்வா அவர்கள் இணைந்தார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சேவையகமும் உருவாக்கப்பட்டது. மற்றுமொரு இலக்காக, பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச், லங்காபே ஆனது உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது. நிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு சன்னா டி சில்வா விளக்குகிறார்.

  மேலும் வாசிக்க…