திரு. சன்னா டி சில்வா

திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய பின்னர், இலங்கையில் முதல் இணைய நிறுவனமான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். இந்தக் கம்பனியானது இலங்கையின் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net யினை வடிவமைத்தது அது இப்போதும் நடைமுறையிலுள்ளது. இலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது; அவை டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் என்பனவாகும். இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையம், TNL ரேடியோ லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் மற்றும் மைக்ரோசொப்ற் சிறீலங்கா ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார் பின்னர் IBM இல் இணைந்து கொண்டார்.

அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் திரு. சன்னா டி சில்வா அவர்கள் இணைந்தார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சேவையகமும் உருவாக்கப்பட்டது. மற்றுமொரு இலக்காக, பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச், லங்காபே ஆனது உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது. நிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு சன்னா டி சில்வா விளக்குகிறார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். நாட்டில் அமைதியின்மை காரணமாக 1980 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. அதனால் அவரது பல்கலைக்கழகக் கல்வியை நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். இவர் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

திரு.சன்னா டி சில்வா தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பின்னர் அப்பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்ட்ட, ஆப்டிகல் கேரக்டர் அங்கீகார நுட்பங்களைப் பயன்படுத்தி அமெரிக்க தபால் திணைக்களத்திற்காக கடிதத்திலுள்ள முகவரிகளை ஸ்கேன் செய்து வார்கோட்டாக மாற்றும் ஒரு செயற்றிட்டத்தில் ஈடுபட்டார் (இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னர் சிங்கள குறியீடுகளுக்கான OCR தொடர்பான ஆய்வினை இவர் மேற்கொண்டார்). பின்னர் திரு.சன்னா டி சில்வா அவர்கள் தொடர்பாடல் துறையில் கவனம் செலுத்தினார். இவரது இறுதியாண்டு செயற்றிட்டமானது KA9Q தளத்திலிருந்து நோவெல் நெட்வேர்க்கான அணுகல் ஆகும். மேலும் அவர் நோவெல் நெட்வொர்க்கை இயக்கும் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் பணிபுரிந்தார். இது இவர் தொடர்பாடல் பிரிவில் பெற்ற முதல் அனுபவமாக இருந்தது.
லங்கா இன்ரநெட்

இவர் தனது முதுமானிப் பட்டத்தினைப் பூர்த்தி செய்தபோது, இலங்கையில் இணைய கம்பனியொன்றை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இந்த முயற்சியின் கீழ் முதல் செயற்திட்டங்களில் ஒன்றாக அந்தக் கம்பனிக்கான ஒரு வலைத்தளத்தினை வடிவமைத்தலாகும், இது இலங்கையில் வடிவமைக்கப்பட்ட முதல் வணிக வலைத்தளமாக இருந்தது. இது நடந்தது 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலாகும். இவ் வலைத்தளம் www.lanka.net இல் தற்போதும் காணப்படுகின்றது ஆனால் இதன் உரிமைத்துவம் மாற்றப்பட்டிருக்கலாம்.

இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார் பின்னர் இலங்கையில் முதல் இணைய கம்பனியான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தால் இணைய இணைப்பு வழங்கப்பட்டிருந்தது ஆனால் அதனைப் பெற்று தூர இடங்களில் பணியாற்றுவதற்கு கடினமாக இருந்தது. இதன் வெளியீடு 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன்போது இலங்கையில் இணையத்தினை எவ்வாறு அணுகுவது என கலாநிதி ஆதுர் கிளார்க் வலைத்தளத்தினை பயன்படுத்திக்கொண்டு டயல்-அப் இணைப்பினூடாக செயல் விளக்கமளிக்கப்பட்டது. இக் கம்பனி 1995 ஆம் ஆண்டு ஒரு டெடிகேடட் இணைப்பினைப் பெற்றுக்கொண்டது அத்துடன் அவர்களது முதல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. அதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தியதாக திரு. சன்னா டி சில்வா குறிப்பிடுகின்றார்.
முதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் மற்றும் ஓன்லைன் வானொலி நிலையம்.

இலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாளினை உருவாக்கியது லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் அடையப்பட்ட முதல் இலக்காகும். இலங்கை அசோசியேட்டட் செய்தித்தாள்கள் நிறுவனத்தின் டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகிய செய்தித்தாள்கள் ஓன்லைனில் கிடைக்கக் கூடியவாறு செய்யப்பட்டது. மேலும், இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையமாக TNL ரேடியோ ஆனது லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இது லங்கா இன்ரநெட் நிறுவனத்தின் எளிமையான தொடக்கமாக இருந்ததாக திரு.சன்ன டி சில்வா அவர்கள் நினைவுபடுத்துகின்றார். ஒரு சிறிய குழு பல தொழினுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களிடம் எந்தவொரு அதிநவீன சாதனங்களும் இருந்திருக்கவில்லை, ஆனால் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இலங்கையில் முதல் WI-FI நெட்வேர்க்கினை ஸ்தாபித்தது அடையப்பட்ட இன்னுமொரு இலக்காகும். மேலும், இலங்கையில் VOIP புரட்சியில் ஈடுபட்ட முன்னோடிகளாக இவர்கள் காணப்பட்டனர்.

ஓபின்சோஸ், மைக்ரோசொப்ட் மற்றும் ஐபிஎம்
இதன்பின்னர் திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் தொடர்பான சோதனைகளில் ஈடுபட விரும்பினார். பயனர்க்கு இலகுவான இடைமுகங்களை கட்டமைப்பது அவரது யோசனையாக இருந்தது. அத்துடன் பலதரப்பட்ட ஓபின்சோஸ் சார்பான சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தினை ஆரம்பித்தார். தொடர்ந்து மைக்ரோசொப்ட் சிறீலங்காவில் இவர் இணைந்தார். மைக்ரோசொப்ட்டில் இருந்து கொண்டு ICTA உடன் சேர்ந்து விண்டோஸ் விஸ்ரா மற்றும் எம்.எஸ் ஓபிஸ் 2007 ஆகியவற்றிற்கு சிங்கள மொழியிலான பயனர் இடைமுகங்களை வடிவமைத்தது அவர் ஈடுபட்ட செயற்றிட்டங்களில் மிக சுவாரஸ்யமான ஒரு செயற்றிட்டம் என திரு. சன்னா டி சில்வா நினைவுபடுத்துகின்றார். இந்தத் திட்டமானது ‘LIP’ (Language Interface Pack) என பெயரிடப்பட்டிருந்தது. அத்துடன் ஆங்கில மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழி பெயர்ப்பதற்காக பல சொற்கள் மற்றும் சொற்தொடர்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் இவர் IBM ற்கு மாறியதுடன் அங்கு அவர்களது மென்பொருள் வணிகத்திற்குப் பொறுப்பாக இருந்தார்.

லங்காகிளியர்
அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தது ஒரு அரிய சந்தர்ப்பம் என திரு. சன்னா டி சில்வா அவர்கள் கூறுகின்றார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சுவிட்ச் பொருத்தப்பட்டதனால் ஒரு வங்கியினது ஒரு வாடிக்கையாளர் மற்றய ஒரு வங்கியினது ஒரு வாடிக்கையாளருக்கு நிகழ்நேரத்தில் பணப்பரிமாற்றம் செய்ய முடிந்தது, அதிலும் ஒரு கணக்கிலிருந்து இன்னுமொரு கணக்கிற்கான பணப்பரிமாற்றம் ஒரு சில செக்கன்களில் செய்ய முடிந்ததுடன் 24/7 சேவையாக வழங்கப்பட்டது. ஒரு இலங்கை வங்கி வாடிக்கையாளர் தனது இணைய நுழைவாயிலைப் பயன்படுத்தி நள்ளிரவு நேரத்தில் கூட இன்னுமொரு கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என திரு.சன்னா டி சில்வா அவர்கள் விளக்குகின்றார்.

பொதுவான ஏ.டி.எம் நெட்வேர்க்கினை உருவாக்குவது இன்னுமொரு இலக்காகக் காணப்பட்டது. தனியொரு வங்கியால் நாடு முழுவதிலும் உள்ள அதன் ஏ.டி.எம்களை கையாள முடியாது. ஆகவே, நாட்டிலுள்ள வங்கிகளை முதலில் ஒரு பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச்சினூடாக இணைக்க வேண்டிய தேவை இலங்கை மத்திய வங்கிக்கு காணப்பட்டது, இதன் மூலம் ஒரு வங்கியினது வாடிக்கையாளர் தனது கணக்கின் மூலம் வங்கிப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வேறு எந்தவொரு வங்கியினது ஏ.டி.எம் இனைப் பயன்படுத்துவது சாத்தியமானது. லங்காகிளியர் நிறுவனத்தினால் பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச் ஆன லங்காபே உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது.

பின்தளம் இயலுமைப்படுத்தப்படும் ஒரு தொலைபேசி அடிப்படையிலான கட்டண புரட்சியைத் தொடங்குவது அடுத்த கட்டம் என திரு.சன்னா டி சில்வா கூறுகிறார். லங்காகிளியர் இனால் ஒரு உள்நாட்டு பிராண்டு அட்டை வடிவமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இவர் கூறுகின்றார். அதாவது பொயின்ற் ஓஃப் சேல்ஸ் மெஸின்ஸ் (POS) ற்குப் பயன்படுத்துவதற்கான ஒரு லங்கா பே பிராண்டட் காட். லங்காகிளியர் ஆனது சர்வதேச காட் முறைமைகளுடன் பங்குதாரராக இருக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பதனால் பயனாளிகள் இவற்றினை வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம். இது வங்கிகளுக்கான செலவினைக் குறைப்பதுடன் வெளிநாட்டுச் செலாவணியையும் பெற்றுத்தருகின்றது.

நிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு.சன்னா டி சில்வா விளக்குகிறார்.