Author: Chamali Perera

திரு. கோலித தர்மவர்தன

திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) "கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.........” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாவனையின் ஊடாக...
Read More

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ அவர்கள் தனது பாடசாலை கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானமானி (கௌரவ) பட்டத்தையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் மில்லேனியம் ஐ.டி (MIT) நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி / நிறைவேற்று பணிப்பாளராகவும் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் ​மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை தலைவராகவும்,  பணியாற்றியுள்ளார். MIT யில் பணிபுரியும்போது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அவர் காட்டிய ஈடுபாடானது தகவல் தொடர்பாடல் தொழில்நு...
Read More

கலாநிதி ரானி ஜெயமஹா

கலாநிதி ரானி ஜெயமஹா இற்கு 1970 ஆம் ஆண்டில் பேராதனையில் அமைந்திருந்த அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கியியல் இல் முதல் பட்டம், பி.ஏ(Hons) வழங்கப்பட்டது. சிலோன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராக ஒரு வருடம் பணியாற்றிய அவர், பின்னர் 1971 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சித் துறையில் (ERD) பொருளாதார நிபுணராக இணைந்தார். அதன் பின்னர், அவர் ஓர் ஐரோப்பியப் பேரவைப் புலமைப்பரிசிலைப் பெற்றார் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து, ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு (1975-1976) முதுகலைப் பட்டம் பெற்றார்.   அவர் 1976 ஆ...
Read More

திரு. புஸ்பானந்த ஏக்கநாயக்க

திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க சிங்கள கையெழுத்துப் படிவங்களின் எழுத்துக்களை வடிவமைத்து வருகிறார். அவர் சிறுவயதில் இருந்தே வெவ்வேறு வடிவங்களில் இதனை மேற்கொண்டு வருகிறார். திரு. ஏக்கநாயக்க வடிவமைத்த முதல் சிங்கள எழுத்துரு மாலிதி ஆகும். திரு. ஏக்கநாயக்க, 1998 ஆம் ஆண்டில் 10 எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டார், ஆனால் அவை உரை தட்டச்சு எழுத்துருக்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அப்போது உரை எழுத்துருவுக்கான தேவை காணப்பட்டது. அதன் விளைவாக, திரு. ஏக்கநாயக்க மிகவும் பிரபலமான சிங்கள ஆஸ்கி(ASCII) எழுத்துரு எஃப்.எம் அபயா இனை வடிவமைத்தார். அதன்பிறகு, வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மாதிரிகளி...
Read More

கலாநிதி கவன் ரட்ணதுங்க

    கலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட...
Read More

கலாநிதி காமினி விக்ரமசிங்க

கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் மென்பொருள் தொழில்துறை மற்றும் தனியார் கல்வித் துறையில் ஒரு முன்னோடியாவார், இவர் இன்போமெற்றிக்ஸ் குழுவின் ஒரு ஸ்தாபகர் மற்றும் தலைவரும் ஆவார். இவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் பல்கலைக்கழக கல்வியினைக் கற்றார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதுடன் ஒரு கணினி கம்பனியான இன்போமெற்றிக்ஸ் இனை ஸ்தாபித்தார்.  இன்போமெற்றிக்ஸ் ஆனது ஒரு மொத்த ஆயத்த தயாரிப்பு தீர்வு கம்பனி, அதன் மூலம் வன்பொருள், மென்பொருள், பயிற்சி மற்றும் பராமரிப்பு என்பன வழங்கப்பட்டன – அதாவது முழு அளவிலான தேவைகள் வழங்கப்பட்டன. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் இரு...
Read More