மேம்படுத்துகின்ற சுற்றுச் சூழல்

திரு. கோலித தர்மவர்தன

திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) "கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.........” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாவனையின் ஊடாக...
மேலும் வாசிக்க

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ அவர்கள் தனது பாடசாலை கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானமானி (கௌரவ) பட்டத்தையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் மில்லேனியம் ஐ.டி (MIT) நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி / நிறைவேற்று பணிப்பாளராகவும் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் ​மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை தலைவராகவும்,  பணியாற்றியுள்ளார். MIT யில் பணிபுரியும்போது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அவர் காட்டிய ஈடுபாடானது தகவல் தொடர்பாடல் தொழில்நு...
மேலும் வாசிக்க

திரு.ஜெயந்த பெர்னான்டோ

ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இலங்கையில் ICT சட்டத்தினை சீர்திருத்துவதற்கு 20 ஆண்டுக்கு மேல் முன்னோடியாகச் செயற்பட்ட ஓர் சட்டத்தரணியாவார். இவர் IT மற்றும் தொடர்பாடல் சட்டப்பிரிவில் (லண்டன் பல்கலைக்கழகத்தில்) விசேட முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளதுடன், தெற்காசியாவிலேயே முதன் முதலாக “ஜ.நா மின்னணு தொடர்பாடல்கள் உடன்படிக்கை” இல் இணைவதற்கும், “பூடபெஸ்ட் இணையக் குற்ற உடன்படிக்கை” இல் இலங்கையை இணைத்துக் கொள்வதற்காகவும் முன்னின்று செயலாற்றினார். இவரது ICT சட்ட நிபுணத்துவமானது பரந்த தலைப்புக்களை உள்ளடக்குகின்றது, அவற்றில் தகவல் தொழில்நுட்பபாதுகாப்பு அல்லது இணையவழிக் குற்றம் (இணையம் சார்ந்த குற்றங்கள...
மேலும் வாசிக்க

பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க

பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க அவர்கள் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பதில் தலைவர் மற்றும் தலைவராகவும் இருந்ததுடன் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பணியாற்றினார். பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் சிலோன் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்ததுடன் கணிதப்பிரிவில் முதலாம் தரத்தில் விசேட விஞ்ஞானமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட விஞ்ஞான புலமைப்பரிசிலைப் பெற்றதுடன் விசேட பட்டத்திற்கான இறுதிப்பரீட்சையில் விஞ்ஞான பீடம் சார்பாகவும் முதல் தகுதி பெற்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை லண்டன் இம்பீ...
மேலும் வாசிக்க

திரு. ஈரன் விக்கிரமரத்ன

திரு. ஈரன் விக்ரமசிங்க அவர்கள் ICT யில் உயர் அரசாங்க நிறுவனமான இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICTA) நிறுவனத்தின் தலைவராவார், அத்துடன் ICT தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயப்படுத்தினார். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியல் சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசகராகவும், ICTA வினை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை வரையறுப்பதற்கும் பங்காற்றினார், இவற்றிற்கு அவரது உரையாடல் திறமையே காரணமாகும். திரு. விக்கிரமசிங்க அவர்கள் உலக வங்கி...
மேலும் வாசிக்க

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 வருடங்கள் சேவையாற்றிய பின் மிக நீண்ட கால புகழ்மிக்க சேவையாற்றிய ஒருவராக கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகப் பேரவை மற்றும் செனட் இனால் கணினி விஞ்ஞானத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராக முன்னர் கொளரவப் படுத்தப்பட்டிருந்தார். வன்னியாராச்சிகே கித்சிறி சமரனாயக்க அவர்கள் திரு. மற்றும் திருமதி. சமரனாக்க ஆகியோருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். இவரது தந்தையார் ராஜகிரிய கேவவிதாரண வித்தியாலயவில் அதிபராகவும், இவரது தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்தனர். கித்சிறி சமரனாயக...
மேலும் வாசிக்க

பேராசிரியர் மொகான் முனசிங்க

பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தகவற் தொழில்நுட்பத்துறையில் தீர்மானம் எடுக்கும் உயர் கட்டமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பேரவையின் (CINTEC) ஸ்தாபகத் தலைவராக இருந்தார். இவர் CINTEC னை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன், CINTEC னால் உருவாக்கப்பட்ட கணணிக் கொள்கை (COMPOL, 1982-83) மற்றும் 1984 இல் இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 10 னை வரைய உதவினார். இவர் மேலும் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்கட்கு சிரேஸ்ர வலுவூட்டல் ஆலோசகராகவும் (1982-86), தொலைத் தொடர்புகள் கொள்கைக்கான (1984-85) ஜனாதிபதி செயற்குழுவின் அங்கத்தவராகவும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர...
மேலும் வாசிக்க

திரு. வசந்த தேசப்பிரிய

திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினது செயலாளர் ஆவார். இவர் அம்பலாங்கொடை தர்மாசோகா கல்லூரியில் மற்றும் இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். இவர் தனது முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினை இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன், கொழும்பு கணினியியல் கல்லூரியில் (UCSC) தகவல் தொழினுட்பத்தில் பட்டபின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ஒரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுச் வேவையாற்றிய அனுபவமுள்ளவர். அவர் அரசு கணினிமயமாக்கல் திட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளார். திரு. வ...
மேலும் வாசிக்க