பேராசிரியர் அபய இந்துருவ

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார்.

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “லங்கா எக்ஸ்பெரிமென்ரல் அகடெமிக் அன்ட் ரிசேச் நெட்வேர்க்” யினை உருவாக்கியதைக் குறிப்பிடலாம் மற்றும் மிகக்குறைந்த வளங்களை ஒன்றிணைத்து LEARNmail -இலங்கையில் உள்ள கல்விசார் மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கான முதல் இணைய மின்னஞ்சல் சேவையினை 1990 ஆண்டு ஸ்தாபித்தார். இலங்கையின் கன்ரிகோட் டொப் லெவல் டொமைன் பதிவகமான .LK யினால் LEARNmail அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு இயற்கையான முன்னேற்றமாக இருந்தது. இதில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் தொழினுட்பப் பிரிவிலும் அபய இந்துருவ அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கும் பொறுப்பாக இருந்தனர்.

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் இலங்கை கணினி மற்றும் தகவல் தொழினுட்ப பேரவையின் (CINTEC) முதல் சபையினது உறுப்பினராக இருந்ததுடன் CINTEC சபையில் 1998 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளார்.
இவர் ஆற்றிய சேவைகள் அனைத்தும் இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினை அறிமுகப்படுத்துவது சார்ந்தவையாக இருந்தது, அத்துடன் அவரடைந்த முக்கிய இலக்குகளின் விளைவுகளை தற்போது இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினைப் பயன்படுத்தும் அனைவ ராலும் உணரமுடியும். இதற்காக இவருக்கு இணையச் சமூகத்தினால் (இன்ரநெட் சொசைற்றி) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது – பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 2014 அம் ஆண்டு இன்ரநெட் கோல் ஓஃப் பேம் இனுள் சேர்க்கப்பட்டார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி இலங்கை கணினி சமூகத்தினால் (CSSL) நடத்தப்பட்ட 34 வது தேசிய தகவல் தொழினுட்ப மாநாட்டில் பல கல்வியலாளர்கள், தகவல் தொழினுட்ப தொழில்துறை நிபுணர்கள் மற்றும் IBM மற்றும் ICL போன்ற கணினி விநியோகஸ்தர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டார்.

CSSL ஆனது தகவல் தொழினுட்ப நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் அது இலங்கையில் தகவல் தொழினுட்பத்தினை (IT) தரமுயர்த்திக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சாதனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பேராசிரியர் இந்துருவவின் வாழ்க்கையின் பல மைல்கற்களில்/இலக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் இப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளமானிப் பட்டப்படிப்பு மாணவனாக இருக்கும் போது இலங்கையில் முதல் தரவு செயல்முறை முகாமையாளராக இருந்த பேராசிரியர் சாம் கருணாரெத்ன அவர்களால் FORTRAN புரோகிராமிங் தொடர்பான அறிமுகத்தினைப் பெற்றார். அக்காலத்தில் அதனை “எங்களது புரோகிராம்களை இயக்குவதற்காக நாங்கள் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு (SEC) செல்லவேண்டி இருந்தது, அங்கு ஒரு ICL 1903 கணினி காணப்பட்டது” என பேராசிரியர் இந்துருவ அவர்கள் நினைவுபடுத்துகின்றார். காலஞ்சென்ற கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க அவர்கள் CSSL இன் முதல் தலைவரானார், இவர் அப்போது SEC யினது DPM ஆக இருந்தார்.

இவர், அதன் பின்னர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் தொடர்வதற்காக இலண்டன் சென்றார். இவர் ஆரம்பத்தில் பஞ்ச் காட்ஸ் யினையும் மற்றும் பின்னர் ரிமோட் ஜொப் என்ரி யினையும் அங்கிருந்த ஒரு CDC7600 மெயின்பிறேம் கணினியில் பயன்படுத்தியதை நினைவு கூர்கின்றார்.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கணினியியல்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 1974 ஆம் ஆண்டு ஒரு IBM 1130 கணினி நிறுவப்பட்டிருந்தது [இணைப்பு 2], அதனை பிரதானமாகக் கொண்டு இயங்கிய அப் பல்கலைக்கழகத்தின் கணினி மையத்திற்கு பொறுப்பாக பேராசிரியர் இந்துருவ அவர்கள் 1980 ஆண்டு செயற்பட்டார். இவரது தலைமைத்துவத்தின் கீழ், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் சம்பளப்பட்டியல் முறைமை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான பல்கலைக்கழக சேமலாப நிதியம் (UGC) ஆகியவற்றினை அங்குள்ள ஊழியர்கள் மூலமாக கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதற்காக சிஸ்டம் அனேலிஸ்ட் மற்றும் புரோகிராமர்ஸ் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் அத்துடன் RPG II புரோகிராமிங் மொழியும் பயன்படுத்தப்பட்டது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இரண்டாவது சகாப்தமாக ஒரு கணினி நூலகம் மற்றும் ஒரு கணினி ஆய்வுகூடம் ஆகியன 1984 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டன [இணைப்புகள் 3a-3d]. இதன் மூலம் சின்க்ளேர் ZX ஸ்பெக்ட்ரம் கணினிகளை மாணவர்களுக்கு வழங்க முடிந்தது – நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தினை இரவல் வாங்குவது போல – பின்னர், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும், ஆய்வாளர்கள் மற்றும் கற்பிக்கும் ஊழியர்களின் புரோகிராமிங் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சிறந்த சக்திவாய்ந்த மைக்ரோ கணினிகள் பொருத்தப்பட்டன. மேலும் கற்பித்தல் நடவடிக்கைகள் BASIC மற்றும் Pascal போன்ற நவீன புரோகிராமிங் மொழிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந் நிகழ்வுகளை அடையாளப்படுத்த ஒரு மாநாடும் ஒரு கண்காட்சியும் நடைபெற்றன.
[இணைப்புகள் 4a-4b].

அதனைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களில் கணினி விஞ்ஞான துறைகளை நிறுவுவதற்கான UGC இன் ஒப்புதலுக்கமைய மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையானது 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் ஆரம்ப தலைவராக பேராசிரியர் இந்துருவ அவர்கள் நியமிக்கப்பட்டார், மேலும் இத்துறைக்காக முதல் மாணவர்கள் குழு 1986 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டனர். தொழில்துறையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக Xenix இல் இயங்கக்கூடிய TRS80 (16 bit) மற்றும் Unix இல் இயங்கக்கூடிய SORD (32 bit) போன்ற பல-பயனர் கணினி அமைப்புகள் அங்கு இணைக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு TRS 80 கணினியை ஒரு ரிமோட் கணினியால் இணைப்பதன் மூலம் லோக்கின் செய்வது எப்படி என மொறட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து அதே போன்ற ஒரு கணினி, தொலைபேசி இணைப்பினூடாக இணைக்கப்பட்ட மொடம்ஸ்களுடன் 300 baud (bits per second) வேகத்தில் UUCP யைப் பயன்படுத்தி அதனை விளக்குவதற்கான சாத்தியம் காணப்பட்டது. இதனை “இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் ஆனால் அந்நேரத்தில் இந் நிகழ்வானது இலங்கையில் கணினி இணைய சகாப்தத்தின் ஆரம்பமாக அடையாளப்படுத்தப்பட்டதனை நாங்கள் சிறிதளவு உணர்ந்திருந்தோம்” என பேராசிரியர் இந்துருவ அவர்கள் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு கணினி வலையமைப்பு மற்றும் தரவு தொடர்பாடல்கள் மத்திய புள்ளியாக உருவாகுவதற்கு பேராசிரியர் இந்துருவ அவர்கள் ஒரு கருவியாக இருந்தது மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி கொள்கையில் முக்கியமான தருணமாகும்.

அக் கொள்கையினைப் பின்பற்றி, இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் முதல் Ethernet Local Area Network (LAN) இணைப்பாக 50 தனிப்பட்ட கணினிகளை Ultrix-32 பல-பயனர் இயங்குதளத்தினைக் கொண்ட ஒரு MicroVAX 3600 மினி கணினி முறைமையினுடன் இணைக்கின்றவாறு மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 1988-89 காலப்பகுதியில் நிறுவப்பட்டது.

பாடசாலைகளில் கணினிகள்

1984 ஆம் ஆண்டு பாசாலைகளில் கணினிகளை அறிமுகப்படுத்த்தப்பட்டமை பேராசிரியர் இந்துருவ அவர்கள் ஆர்வத்துடன் செயற்பட்ட மற்றொரு திட்டமாகும். இதற்காக கல்வி அமைச்சு 100,000 LKR இனை அந்நேரத்தில் வழங்கியது. இத் திட்டத்தினூடாக பாடசாலைகளில் க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவிற்கென சிங்ளேயர் ZX ஸ்பெக்ரம் கணினிகளைக் கொண்ட கணினி ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டன. வன்பொருள் வளங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு BASIC புரோகிராமிங் மட்டும் கற்பிக்கப்பட்டது. மொத்தமாக 200 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டதுடன் அதில் நான்கில் ஒரு பங்கினர் பேராசிரியர் இந்துருவவின் மேற்பார்வையின் கீழ் பயிற்றப்பட்டனர். இவற்றால் எந்த பெரிய தாக்கமும் ஏற்படவில்லை என்று உணரப்பட்டது, ஆனால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், பாடசாலைகளில் இந்தக் கட்டத்தில் கணினி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இனங்காணப்பட்டது. இது ஒரு ஆரம்பமாகும் . பின்னர் ஆனந்தாக் கல்லூரி, நாலந்தா கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரி போன்ற முதன்மையான பாடசாலைகளில் மட்டுமல்லாது கஹகொல்லா மத்திய மகா வித்தியாலய, தியவத்தலாவ போன்ற பின்தங்கிய பாடசாலைகளிலும் பல சிறந்த வளங்களுடன் கூடிய வலயக் கணினி நிலையங்கள் திறக்கப்பட்டது. “நான் CINTEC இன் தலைவராக இருந்தபோது கஹகொல்லா மத்திய மகா வித்தியாலயத்தில் கணினி நிலையத்தினை திறப்பதற்காக அழைக்கப்பட்டேன். அங்கு எனது உரையில், 1954 ஆம் ஆண்டு நான் மீண்டும் பள்ளிப் படிப்பை ஆரம்பித்த பாடசாலை இது எனும் இரகசியத்தினை வெளிப்படுத்தினேன். அது அங்கிருந்த மூத்த அரசியல்வாதியான திரு. ஜே.ஜே.லோகுபந்துரா உட்பட பலருக்கும் ஆச்சரியத்தினை உண்டாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்” என பேராசிரியர் இந்துருவ அவர்கள் நினைவு கூர்கின்றார்.

நாட்டிலுள்ள கொள்கைக் கட்டமைப்பு

தேசிய கணினிக் கொள்கையானது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் அரசாங்கத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக் கொள்கைக்கான செயற்பாடுகள் பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இக் கணனி கொள்கையின் மூலம் கணினி மற்றும் தகவல் தொழினுட்ப சட்ட இலக்கம் 10 இனை 1984 ஆம் ஆண்டில் இயற்றமுடிந்தது, இதன் விளைவாக இலங்கை கணினி மற்றும் தகவல் தொழினுட்ப பேரவை (CINTEC) ஸ்தாபிக்கப்பட்டது, பின்னர் அது இலங்கை தகவல் தொழினுட்பப் பேரவை என பெயர் மாற்றப்பட்டது. இது தகவல் தொழினுட்பத்தில் உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச நிறுவனமாகக் காணப்பட்டது. பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் CINTEC இன் முதல் சபையின் உறுப்பினராக 1998 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து சேவையாற்றினார். CINTEC இன் பணிகளை முன்னெடுத்த பல சட்டரீதியான குழுக்களில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார் – பொதுத்துறை கணினிமயமாக்கக் குழு, கணினிக் கல்விக் குழு, தேசிய மொழிகள் குழு அத்துடன் தரவுத் தொடர்பாடல் குழுவில் சிறப்பாகச் செயற்பட்ட உறுப்பினராக இருந்தார். இது பின்னர் இணையக் குழுவாக மாற்றப்பட்டது.

லங்கா எடியுகேஷனல் அகடெமிக் அன்ட் ரிசேச் நெட்வேர்க் (LEARN)

LEARN இனை உருவாக்குவதற்கான பணிகள் தொண்ணூறாம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு முக்கிய இலக்காக இருந்தது. LEARN இன் விரிவாக்கம் “லங்கா எக்ஸ்பெரிமென்ரல் அகடமிக் அன்ற் ரிசேச் நெட்வேர்க்” ஆகும். கணினி இணையமானது ஊழியர்கள் மற்றும் மாணவர்களது கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மெருகூட்டும் முக்கிய காரணியாக இருக்கின்றது என பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் உணர்ந்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றினை ஒன்றிணைப்பதற்காக கல்வி அமைச்சிற்கு அபய இந்துருவ அவர்களால் 1989 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திட்டத்தின் விளைவாக LEARN உருவாக்கப்பட்டது.

இத் திட்டத்தினை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன எற்றுக் கொண்ட போதிலும் இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. ஆகவே, அவரால் முடிந்த வளங்களைத் திரட்டி அத்துடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவின் ஊழியர்கள் மற்றும் கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கற்கும் இலங்கை மாணவர்களின் உதவியுடனும் LEARNmail இனை பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஸ்தாபித்தார் – இலங்கையில் கல்விசார் மற்றும் ஆய்வு நிறுவனங்களிற்கான முதல் இணைய மின்னஞ்சல் இதுவாகும். இது உண்மையில் மற்றொரு மைல்கல்லாக விளங்கியது [பின்னிணைப்புகள் 5a – 5b]. அடுத்த இரு ஆண்டுகளில் LEARNmail இன் கொள்ளளவு படிப்படியாக அதிகரித்தது அத்துடன் தகவல் தொழினுட்பப் பேரவையினால் (CINTEC) 15,000 ரூபாய் நிதியுதவியளிக்கப்ட்டதனால், உலக வலைத்தளத்துடன் இணைப்பதற்காகவும் EARNmail இன் அதிகரித்துக் கொண்டிருந்த கொள்ளளவினை பரிமாற்றுவதற்கு உதவுவதற்காகவும் ஒரு உயர் வேக மொடம் கொள்வனவு செய்யப்பட்டது.

பேராசிரியர் அபய இந்துருவ அவர்களின் விடாமுயற்சியினால் அவரது LEARN உருவாக்குவதற்கான திட்டமானது இலங்கைக்குள் IP வலையமைப்பினை கொண்டதாக 1992 ஆம் ஆண்டு மீள் உருவாக்கப்பட்டது, அது ஆரம்பத்தில் மூன்று முனைகளை இணைக்குமாறு காணப்பட்டது. அவை கொழும்பு பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியனவாகும். சிறீலங்கா ரெலிகோம் ஊடாக இவ் இணைப்பினைப் பெறுவதற்காக 03 மில்லியன் ரூபாயினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஒதுக்கியது.
அப்போது பைவர் ஒப்ரிக் இணைப்புக்கள் எதுவும் காணப்படவில்லை, பின்னர் பேராசிரியர் அபய இந்துருவ மற்றும் அவரது அணியினரினால் 64 Kbps வயர்லெஸ் (ரேடியோ) இணைப்புகளை SLT ற்கு ஊடாகப் பெறக்கூடியதாக இருந்தது. இவ் இணைப்புகளின் செயற்பாடுகளுடன், LEARN ஆனது இலங்கையில் முதல் IP பரந்த பகுதி நெட்வொர்க் (WAN) ஆக காணப்பட்டது.
1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN மற்றும் LEARNmail ஆகியன அதன் பயனாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. நிரந்தரமான ஒரு இணைய இணைப்பிற்கான சரியான தருணம் அதுவென பேராசிரியர் இந்துருவ அவர்கள் கருதினார். மேலும், அந்நேரத்தில் இலங்கையில் வர்த்தக ரீதியான இணையமும் காணப்பட்டது – லங்கா இன்ரநெட் ஆனது இலங்கையில் இணைய சேவை வழங்குனர் சேவைகளை வழங்கிய முதல் நிறுவனமாக இருந்தது அத்துடன் SLT ஆனது டெடிகேடட் லீஸ்ட் லைன்களைப் பயன்படுத்தி இலங்கையினை உலகளாவிய வலையத்தளத்துடன் இணைத்தது. அதன்படி, LEARN ஆனது டெடிகேடட் இணைப்புகளைப் பயன்படுத்தி இணையத்தினைக் கொண்டிருந்தது மற்றும் இறுதியாக 1995 ஆம் ஆண்டு உலக வலைத்தளத்துடன் LEARN இணைக்கப்பட்டது. NetCon 95, இது 300 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட, LEARN இனது இணைய இணைப்பினை அடையாளப்படுத்துவதற்காகவும் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையினை ஆரம்பித்து 10 ஆண்டுகள் பூர்த்தியை நினைவு கூர்வதற்காகவும் மூன்று நாட்கள் நடைபெற்ற ஒரு மாநாடு ஆகும். [பின்னிணைப்புகள் 6a–6b–6c]. “திரு. கிளிமென்ற் அடம்ஸ், பேராசிரியர் ஜிகான் டயஸ், பேராசிரியர் லலித் கமகே மற்றும் காலஞ்சென்ற பேராசிரியர் சர்தா விஜயசோமா போன்ற மிக ஆர்வமுள்ள மாணவர்களை புதியதாக உருவாக்கப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையானது இணைத்துக் கொண்டிருப்பது எனது பேரதிஸ்டம் மற்றும் இச் சாதனைகளைப் பெறுவதற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு காணப்பட்டது” என நன்றி தெரிவிக்கும் போது பேராசிரியர் இந்துருவ அவர்கள் கூறினார்.

.LK டொமைன்

இலங்கையின் கன்ரிகோட் ரொப்லெவல் டொமைன் பதிவுகள், .LK, LEARNmail இன் அறிமுகத்தில் ஒரு முன்னேற்றமாகும். இதில் மொறட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் தொழினுட்பப் பிரிவிற்கும் அபய இந்துருவ அவர்கள் நிர்வாகப் பிரிவிற்கும் பொறுப்பாகவிருந்தனர். .LK பதிவு செய்யப்பட்டதன் பின்னர், நிறுவனங்களுக்கான சாதாரண படிநிலை மின்னஞ்சல்-முகவரியிடல் திட்டம் பின்பற்றப்பட்டது. .LK ற்குக் கீழ்ப்பட்ட டொமைன் பெயர்கள் தற்போது இணையச் சமூகத்தின் (இன்ரநெட் சொசைற்றி) .LK டொமைன் பதிவகத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றது.

1992 ஆம் ஆண்டு ஜீன் மாதம், ஜப்பானில் கோப் நகரில் நடைபெற்ற இன்ரநெட் சொசைட்டியினது உயர்குழுவின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டாவது INET மாநாட்டின் போது இன்ரநெட் சொசைட்டியினது முதல் உறுப்பினர்களில் ஒருவராக பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் காணப்பட்டார்.

இலங்கை கணினிச் சமூகம் (CSSL) (இலங்கை கம்பியூட்டர் சொசைட்டி)

பேராசிரியர் இந்துருவ அவர்கள் இலங்கைக் கணினிச் சமூகத்தின் (இலங்கை கம்பியூட்டர் சொசைட்டி) பேரவையில் 1990 முதல் 1996 வரையான காலப்பகுதியில் சேவையாற்றினார். இக் காலப்பகுதியில் CCSL இன் வருடாந்த மாநாடுகளில் ப்ரொசீடிங்க்ஸ் (வெளியீட்டுக் குழு) குழுவின் தலைவராக சேவையாற்றினார். 1995 ஆம் ஆண்டு CSSL யினால் கொழும்பில் நடத்தப்பட்ட SEARCC ’95 சர்வதேச மாநாட்டின் ப்ரொசீடிங்க்ஸ் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இதன்போது 51 தொழினுட்ப ஆய்வுகளுக்கான கட்டுரைகளை கொண்ட வெளியீடுகளை திருத்தி வெளியீடு செய்தார். இவ் மாநாட்டின் செயற்பாடுகளின் பகுதியாக, மருத்துவ தகவல் முறைமை சார்பான ஒரு கருத்தரங்கினை இவர் ஒழுங்கமைத்தார் அத்துடன் மருத்துவத்தில் துறைசார்ந்தவர்களுக்காக மருத்துவ தரவுத்தளங்களை ஓன்லைனில் அணுகுவது தொடர்பான செயல் விளக்கத்தினையும் வழங்கினார். {பின்னிணைப்பு 7a–7b] “கட்புல மனிதத் திட்டத்தில் இருந்த புகைப்படங்களை அவர்களுக்கு நான் காண்பித்தேன், மற்றும் WAIS மற்றும் Gopher இனைப் பயன்படுத்தி முன்னர் தகவல்களை அணுகியவர்களுக்கு நிகழ்நேரத்தில் முழு நிறத்தில் புகைப்படங்களை காட்டியதும் மற்றும் அணுகியதும், ஒரு சிறப்பான அனுபவம்”. கணினிக் கல்வி மற்றும் தகவல் தொழினுட்பத் தொழில்துறையில் இவர் ஆற்றிய சேவைகளை இனங்கண்டமைக்காக இலங்கை கணினிச் சமூகத்தின் பெருமைக்குரிய உறுப்பினர் விருது 2003 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தி இண்டர்நெட் ஹால் ஆஃப் ஃபேம்

இவர் ஆற்றிய சேவைகள் அனைத்தும் இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினை அறிமுகப்படுத்துவது சார்ந்தவையாக இருந்தது, அத்துடன் அவரடைந்த முக்கிய இலக்குகளின் விளைவுகளை தற்போது இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினைப் பயன்படுத்தும் அனைவரும் உணரமுடியும். இதற்காக இவருக்கு இணையச் சமூகத்தினால் (இன்ரநெட் சொசைற்றி) வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது – பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 2014 அம் ஆண்டு இன்ரநெட் கோல் ஓஃப் பேம் இனுள் சேர்க்கப்பட்டார்.

முடிவுரை

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முடிவாக மற்றும் சுருக்கமாக, எந்தவொரு நாட்டினதும் இணையத்தின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் இந்துருவ அவர்கள் கூறும்போது – இணையத்தில் இடையூறு செய்வது அடுத்த கட்டம் – இவை இன்ரநெட் ஓப் திங்ஸ் இனது அறிமுகமாகும் எனக் குறிப்பிட்டார். இது இலங்கை கட்டாயமாக தவறவிடக்கூடாத வாய்ப்பு, விசேடமாக இன்ரநெட் ஓப் திங்ஸ் யிற்கான தொழினுட்ப அறிமுகமானது அவ்வளவு பெறுமதியானதல்ல என இலங்கைக்கு இவர் அறிவுரை வழங்கினார். இதற்கு என்ன தேவையென இவர் கூறும்போது, இது ஒரு வர்த்தக மாதிரியாக உள்ளது மற்றும் இலங்கைக்கு வருமானத்தை கொண்டுவரும், இலங்கையர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலிருந்தும் ஒரு கோரிக்கையை எடுப்பதற்கான ஒரு தீர்வை உருவாக்குதற்கான தேவையை இனங்காணப்பதும் அபிவிருத்தி செய்வதற்கான ஒரு அவசியமான தொழிற்துறை மாதிரியை உருவாக்குதலும் அவசியமாகும் எனக் கூறினார். இதன் கருப்பொருளைக் பின்பற்றி 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற 34 வது தேசிய தகவல் தொழினுட்ப மாநாட்டில் ஒரு சிறப்புரையை பேராசிரியர் இந்துருவ அவர்கள் வழங்கினார்.
அடுத்தது என்ன? “இலங்கையில் சைபர் கிரைம் மற்றும் பாதுகாப்புக் கல்வி, பயிற்சி மற்றும் ஆய்விற்கான சிறப்பான ஒரு மையத்தை அமைப்பது எனது அடுத்த கனவு” என பேராசிரியர் இந்துருவ ஆர்வம் காட்டினார்.