பேராசிரியர் வி.கே.சமரனாயக்க

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 வருடங்கள் சேவையாற்றிய பின் மிக நீண்ட கால புகழ்மிக்க சேவையாற்றிய ஒருவராக கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகப் பேரவை மற்றும் செனட் இனால் கணினி விஞ்ஞானத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராக முன்னர் கொளரவப் படுத்தப்பட்டிருந்தார்.

வன்னியாராச்சிகே கித்சிறி சமரனாயக்க அவர்கள் திரு. மற்றும் திருமதி. சமரனாக்க ஆகியோருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். இவரது தந்தையார் ராஜகிரிய கேவவிதாரண வித்தியாலயவில் அதிபராகவும், இவரது தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்தனர். கித்சிறி சமரனாயக்க அவர்கள் அதே பாடசாலையில் ஆரம்பக் கல்வியினைக் கற்றார் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஆனந்தாக் கல்லூரியில் இணைந்தார். போட்டிப் பரீட்சை ஒன்றிற்குத் தோற்றியதன் மூலம் 1950 ஆம் ஆண்டு ரோயல் கல்லூரியில் சேர்ந்தார். இவர் தமது வாழ்நாள் முழுவதும் பாடசாலை சூழலில் அதாவது அதிபருக்காக ஒதுக்கப்பட்ட விடுதியில் வாழ்ந்தமையால் பாடசாலைச் செயற்பாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் விரும்பிச் செயற்பட்டார் அதுவே அவரது வாழ்வில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உந்துசக்தியாக அமைந்தது.

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் 1956 ஆம் ஆண்டு விஞ்ஞானத்துறையில் பட்டம் பயில்வதற்காக சிலோன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானதுடன் பின்னர் கணிதப்பிரிவில் விசேட பட்டம் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் கல்வி நடவடிக்கைகளில் திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக முதல் வகுப்பு ஹானர்ஸ்ட் பட்டத்துடன் 1961 ஆம் ஆண்டு தனது பட்டத்தினைப் பூர்த்தி செய்ததுடன் அதன் பின்னர் உதவி விரிவுரையாளராக பணிபுரிய நியமனம் பெற்றார். இதன்மூலம் ஒரு நீண்ட மற்றும் சிறப்புமிக்க பல்கலைக்கழக வாழ்க்கைப்பயணம் தொடங்கியதுடன், தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்பேற்படுத்தப்பட்டது.

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களுக்கு 1956 ஆம் ஆண்டு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பினை தொடர்வதற்கான புலமைப்பரிசில் கிடைத்தது. பின்னர் 1966 ஆம் ஆண்டு தான் வீடு திரும்புவதற்கு முன்னர் இலண்டன் யூனிவர்சிற்றி கொலேஜ்ஜிற்கு PhD படிப்பதற்காக சென்றார். இவருக்குக் கிடைத்த புலமைப்பரிசிலின் அங்கீகாரத்தின் காரணமாக அவரது 35 வது வயதிலேயே உயர்ந்த கல்வி நிலையாகிய கணிதப் பேராசிரியர் பதவியை கொழும்பு பல்கலைக்கழகம் 1974 ஆம் ஆண்டு வழங்கியது. தொடர்ச்சியாக 1984 ஆம் ஆண்டு கணிதப்பிரிவில் சிரேஸ்ர பேராசிரியராக நியமனம் பெற்றதுடன், 1996 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கணினி விஞ்ஞானப்பிரிவிற்கு தலைவராக நியமிக்கப்பட்ட முதல் சிரேஸ்ர பேராசிரியராக இருந்தார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியராக 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய வளங்கள், வலுவூட்டல் மற்றும் அறிவியல் ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய கணினிக் கொள்கை வழிகாட்டல்கள் (COMPOL) இன் அங்கத்தவரானார். இதற்கு பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்கள் தலைவராக இருந்ததுடன், கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க, கலாநிதி என்.டபிள்யூ.ஜெயசிறி, பேராசிரியர் கருணாரெட்ண மற்றும் கலாநிதி அஜித் கனகசுந்தரம் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர். இதன் விளைவாக கொள்கையின் ஆவணமானது 1983 ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இவ் ஆரம்பத்தின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் முதற் கட்டமைப்பான இலங்கை கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பேரவை (CINTEC) ஸ்தாபிக்கப்பட்டது.

பேராசிரியர் சமரனாயக்க அவர்களின் மகத்தான அனுபவத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 1986 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் CINTEC இன் தலைவராக நியமனம் கிடைத்தது. இலங்கையின் அதியுயர் IT கொள்கையினை உருவாக்கும் அமைப்பின் தலைவராக 12 வருட காலங்கள் பணியாற்றிபோது வழங்கிய பங்களிப்புக்கள் மற்றும் எண்ணக்கருக்கள், இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது பின்பற்றப்படும் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலங்கை ICT திட்டவரைவு ஆகியவற்றில் ஒரு கருவியாக இருக்கின்றன. மேலும் இக்காலப்பகுதியில் ஜனாதிபதி செயலணியின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் R & D ஒருங்கிணைப்பு 1997-2000, இலங்கை தேசிய Y2K செயலணி 1998-2000 ஆகியவற்றிலும் தலைவராகச் செயற்பட்டார்.

இவர் CINTEC இன் தலைவராக கல்வி, பொதுச் சேவை கணணிமயமாக்கம், உள்ளூர் மொழி கணினியியல் மற்றும் தொடர்பாடல் அத்துடன் சட்டம் மற்றும் கணினிகள் ஆகிய துறைகளில் பணிகளை ஆரம்பித்து வைத்தார். CINTEC இனால் நாட்டின் சட்ட அமைப்பிற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை உருவாக்கும் வகையிலும் ஒன்றிணைக்கும் வகையிலும் கணினிகள் மற்றும் IT தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க 1986 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சட்டம் மற்றும் கணினிகள் குழுவின் தலைவராக பேராசிரியர் சமரனாயக்க அவர்கள் செயற்பட்டதுடன் அதன் மூலம் பரந்த பயன்பாட்டினையும் வளர்ச்சியையும் பெறுவதற்கு ஊக்கமளித்தார். சட்ட சீர்திருத்தத்தில் பல முன்னெடுப்புகளை இந்த குழு முன்வைத்தது. இவ்வாறான முன்னெடுப்பின் விளைவாக இலங்கையில் சாட்சி பற்றிய சட்டத்தின் ஆய்வு மற்றும் சீர்திருத்தத்தினால் சாட்சிச் சட்டம் (விசேட விதிகள்) இல 14 ஆனது 1995 இல் இயற்றப்பட்டது. கணினிக் குற்றங்கள் மற்றும் இ-பரிமாற்றங்கள் தொடர்பாக சட்டங்களிற்கு பரிந்துரைகளை CINTEC ஆரம்பித்ததுடன் பின்னர் அச் செயற்பாடுகளை ICTA தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சமரநாயக்க சர்வதேச கூட்டிணைப்புகளையும் உருவாக்கியுள்ளார். CINTEC ஆனது இலங்கையில் அரசாங்கங்களிற்கு இடையிலான தகவலியல் திட்டத்தினை அதாவது யுனெஸ்கோ திட்டத்தினை உருவாக்க மையப்புள்ளியாகச் செயற்பட்டது. மேலும் பேராசிரியர். வி.கே.சமரநாயக்க அவர்கள் மின்னணு தரவு பரிமாற்றத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்ததார். அவர் இலங்கையினை மையப்புள்ளியாகக் கொண்ட ஆசிய பசிபிக் கவுன்சிலின் வர்த்தக உதவிகள் மற்றும் மின்னணு வணிகத்திற்கான (AFACT) குழுவான தேசிய EDI/EC குழுவினை (மின்னணு தரவு பரிமாற்றம் / மின்னணு வர்த்தகம்) இலங்கையில் நிறுவ ஒரு கருவியாகச் செயற்பட்டதுடன், இக்கட்டமைப்பு ஆனது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் EDI, EC மற்றும் மின்னணு வர்த்தகம் என தரமுயர்த்தப்பட்டது.

மேலும் பேராசிரியர். வி.கே.சமரநாயக்க அவர்கள் பல விழிப்புணர்வுத் திட்டங்களையும் முன்னெடுத்தார். 1995 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகள், அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களை சில தினசரி அல்லது வார பத்திரிகைகளின்
ஒரு பக்கத்தில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளும் CINTEC இனால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இணையத்திலுள்ள தகவல் தொடர்பாடல் சார்பான விடயங்கள் மற்றும் ஏனைய தகவல்களை வெளியிடுவதற்கு வானொலி நிகழ்ச்சியொன்றும் CINTEC இனால் வாரத்திலொருமுறை ஒலிபரப்பப்பட்டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறவேண்டும் குறிப்பாக கஸ்ரப்பிரதேச மக்கள் பயனடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் இணையத்தினைப் பயன்படுத்தி IT திறனை அதிகரிக்க வேண்டும் எனும் பிரதான நோக்கித்தினை இந்நிகழ்ச்சித் திட்டம் கொண்டிருந்தது. இவர் மேலும் IT முயற்சிகள் உச்சக்கட்டத்தினை அடைய CINTEC இன் “மொபைல் கம்ப்யூட்டர் யூனிட்” மூலமும், கணினி வள நிலையங்களினூடாகவும் IT கற்கைகள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறப்புற எவ்வாறு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.

அந்த கலவரமான காலத்திலும், பேராசிரியர் சமரனாயக்க அவர்கள் தேசிய கல்வி முறைமையில் பொதுவாகவும், பல்கலைக்கழக முறைமையில் குறிப்பாகவும் அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மிக முக்கியமாகவும் தனது பங்களிப்பினை மிகவும் ஆர்வத்துடன் தொடர்ச்சியாக வழங்கினார். கணினி நிரலாக்கத்தில் உச்சத்தை அடைய முடியும் என்று நம்பி இலங்கைப் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய 4 குழுவினரை CINTEC இன் நிதியுதவியுடன் சர்வதேச தகவலியலுக்கான ஒலிம்பியாட் போட்டிக்கு இவர் அனுப்பி வைத்தது 1992 ஆம் ஆண்டில் மிகவும் விமர்சிக்கப்பட வேண்டும் எனக் கருதப்பட்ட ஒன்றாக “குருட்டு நம்பிக்கை” இருந்தது. ஆயினும் இவரது இவ் ஆற்றல்மிகு செயற்பாட்டினால் இலங்கையானது தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை தொடர்ச்சியான சர்வதேச தகவலியலுக்கான ஒலிம்பியாட் போட்டிகளில் பெற்றுக் கொண்டது. 1995 ஆம் ஆண்டு, இலங்கையில் இணையச் சேவைகளை ஆரம்பிப்பதற்காக சிறீலங்கா ரெலிகோம் நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாக இவர் செயற்பட்டார். LEARN ற்காக வேகமான இணைய இணைப்பினை ஸ்தாபிப்பதற்காக CINTEC உதவியதுடன் அதன் ஒரு வருடத்திற்கான செலவு முழுவதனையும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவர் மேலும் ICT யினை சிங்கள மொழியில் பயன்படுத்துவதற்காக யுனிகோட் சிங்கள குறியீட்டு அட்டவணையையும் இலங்கை தரநிர்ணயம் SLSI 1134 ஆகிய குறியீட்டுத் தரநிலைகளையும் நிறுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தார். மேலும் இந் நேரத்தில், பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையினை ஒழுங்குபடுத்துவதற்காகவும் கணினி விற்பனையாளர்கள் (SLCVA), மென்பொருள் தொழிற்துறை (SLASI), அத்துடன் கணினி பயிற்சி நிறுவனங்கள் (ACTOS) ஆகியவற்றிற்கான சங்கங்களை ஆரம்பிப்பதற்கு மிகவும் உதவினார். மேலும் இச் சங்கங்களை ஒரே குடையின் கீழ் நிர்வகிப்பதற்காக IT தொழில்துறை சங்கங்கள் கூட்டமைப்பு (FITIS) இனை முன்கூட்டியே உருவாக்கினார். இவ் நிறுவனம் அண்மையில் மாபெரும் ICT நிகழ்வான ASOCIO ICT உச்சி மாநாட்டினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அக்காலத்தில் நன்கு அறியப்பட்ட ICT வர்த்தக கண்காட்சி அமைப்பான INFOTEL உடன் இணைந்து செயற்பட்டதுடன், 1997 ஆம் ஆண்டிலிருந்து அதற்குத் தலைமை தாங்கினார். INFOTEL ஆனது ICT துறையில் பல நிறுவனங்களுக்கு நிதிவழங்கும் மற்றும் மனிதவள அபிவிருத்தி முயற்சிகளை உள்ளெடுக்கின்ற அமைப்பாக இருந்து வருகின்றது. பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து அவர் காலஞ்சென்ற ஆண்டான 2007 ஆம் ஆண்டு வரை ICTA இனது தலைவராகப் பணிபுரிந்தார்.

அறிவியல் சமூகத்தின் மீதான பேராசிரியர் சமரநாயக்கவின் ஈடுபாட்டால் அறிவியல் முன்னேற்றத்திற்கான இலங்கைச் சங்கத்தின் தலைவராக (SLAAS) 1994 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார், பின் இலங்கை தேசிய அறிவியல் கழகத்தின் சக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் உப தலைவர் மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவராகவும் 1998-99 காலப்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக்கிடைத்தது.

ICT மனித வளங்கள் தொடர்பாக திறனை வளர்ப்பதற்கான இவரது தேடல்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ICT பிரிவில் இவரது தனிப்பட்ட பங்களிப்புகளில் மிகவும் தெளிவாக காண முடியும் – இலங்கையிலும் அதற்கும் அப்பால் உள்ள பல்கலைக்கழக முறைமைகளில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ICT பிரிவில் மனிதவள அபிவிருத்தியை மேற்கொள்வது பல பாரிய சிக்கல்களை உள்ளடக்கியது. பேராசிரியர் சமரநாயக்கவின் பரந்துபட்ட தூரநோக்கு மற்றும் காரணமற்ற நம்பிக்கை ஆகியவற்றினை அப்பல்கலைக்கழகத்தின் பயிற்சிப்பீடத்தினைப் பார்ப்பதன் மூலம் உணரக்கூடியதாக இருக்கும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் ICT மனிதவள அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனம் செலுத்திய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நன்கொடையாளர்களால் அற்ப நிதி வழங்கும் வளங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், அவ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளை கொழும்பு பல்கலைக்கழக ICT மனிதவள அபிவிருத்தி திணைக்களத்திற்கு கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை பேராசிரியர் சமரநாயக்க முன்னெடுத்தார்.
1984 ஆம் ஆண்டு அப்போதய துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஸ்ரேன்லி விஜேயசுந்தர மற்றும் பின்னாள் வேந்தர் கலாநிதி பி.ஆர்.அந்தோனிஸ் அவர்களினதும் முழுமையான ஆதரவில் ஜப்பான் அரசாங்கத்தின் JICA அனுசரணை கிடைத்தது அவருக்கு கிடைத்த முதல் முக்கிய திருப்புமுனையாகும். அதே நேரத்தில் UNDP ஆனது தேவையான சில ஆராய்ச்சி நிதிகளை வழங்கியதால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கான கணினி விஞ்ஞான பீடத்தினை கட்டுவதற்கு அவ் நிதி உதவியது. கணிதத்துறையினுள் புள்ளிவிபரவியல் பிரிவு, புள்ளிவிபர கணினியியல் மற்றும் தரவு செயலாக்கம் ஆகியவற்றினை ஆரம்பிப்பதற்காக, 1985 ஆம் ஆண்டு பேராசிரியர் சமரனாயக்க அவர்கள் முதலில் கணினி விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையினை நிறுவ வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார். இவ் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் பல்கலைக்கழக முறைமையில் முதல் கல்லூரியாக 2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி (UCSC) நிறுவப்பட்டது.

2000 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பேராசிரியர் சமரநாயக்க அவர்கள் இலங்கையில் ICT HRD யில் தனியார் துறையை ஒருங்கிணைக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப இளமானிப்பட்டத்தினை (BIT) வெளிவாரிப் பட்டமாக வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்தார்- அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வேறு எந்த ஒரு பட்டப்படிப்பும் மாணவர்களுக்கு இவ்வாறான ஒரு வாய்ப்பினை வழங்கவில்லையாதலால் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அத்துடன் BIT கற்கைநெறியானது, வணிகரீதியாக கல்வித் தரத்தை அச்சுறுத்தும் ஒரு சகாப்தத்தில் ICT கல்வியின் தரநிலையை மறைமுகமாகவும் மிகவும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியது.

ICT பிரிவில் நாட்டிற்காக ஆற்றிய உச்ச பங்களிப்பிற்காக இவர் பல தேசிய விருதுகளுக்குத் தகுதியுடையவாரகக் காணப்பட்டதால், 1986 ஆம் ஆண்டு இலங்கையின் மிகச் சிறந்த குடிமகன் என லயன்ஸ் கழகத்தினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 1996 ஆம் ஆண்டு பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் 80 வது பிறந்ததின விழாவின் போது விஸ்வா பிரசாதினி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் பின்னர் 1998 ஆம் ஆண்டு வித்யா ஜோதி ஜனாதிபதி விருதினையும் பெற்றார்.

பேராசிரியர் சமரநாயக்க பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய ஆற்றல் உடையவரென, அவர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டது பறைசாற்றுகின்றது. அதாவது 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் காவாட் பல்கலைக்கழக “கெனடி ஸ்கூல் ஓப் கவன்மென்ட்” இன் சக உறுப்பினராகப் பெயரிடப்பட்டதுடன், அமெரிக்காவின் காவாட் பல்கலைக்கழக டிஜிட்டல் அரசாங்கத்திற்கான தேசிய மையம் அமைப்பில் ஆய்வில் ஈடுபடவும், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்ரான்போட் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் விசன் நிகழ்ச்சித் திட்டத்தில் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டது ஆகியவற்றைக் குறிப்படலாம்.

பேராசிரியர் சமரநாயக்க அவரது காலத்தில் தேசிய ரீதியில், பிராந்திய ரீதியில் மற்றும் சர்வதேச ரீதியில் பல நிகழ்வுகளையும் பல மாநாடுகளையும் ஒழுங்கமைந்திருந்தார். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப வாரத்தில் இரு சர்வதேச மாநாடுகளுக்கு ஒரே நேரத்தில் தலைமை வகித்தது இவரது சாதனையாகும், அவை மட்டும் இத்துறையில் அவரை பிராந்திய ரீதீயிலும் சர்வதேச ரீதியிலும் ஓர் உயர்ந்த மனிதனாக உருவாக்கவில்லை, ஆனால் அவை நாட்டிற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பெருமையையும் கௌரவத்தையும் உண்டாக்கியுள்ளது.

பேராசிரியர் சமரநாயக்க அவர்கள் பல மரபியல்புகளை இங்கு விட்டுச் சென்றுள்ளார், அவற்றுள் எந்தவித விதிகளையும் உடைக்காமல் கட்டுப்பாடான அரசு அமைப்பினுள் வாய்ப்புக்களை உருவாக்கும் தனித்திறமையானது தலைசிறந்ததாகும். மற்றவர்களின் திறமையைக்கு மதிப்பளித்தல், கணிக்கப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது மற்றும் எதிர்மறையான விடயங்களை நிந்தித்தல் ஆகியன இவரது மனப்பாங்காகும் – இவை அனைத்தும் பல்கலைக்கழகத்திற்கும் சமூகத்திற்கும் நன்மைகளை உண்டாக்கியதுடன், இவ்வாறான தகைமைகள் இன்றைய இலங்கையின் தனியார் துறையில் கிடைப்பதென்பது மிக அரிது.

சுருக்கமாக கூறின், பேராசிரியர் சமரனாயக்க அவர்கள் தனது அயராத சேவையினூடாக பல வழிகளிலும் பல விடயங்களை பூரணப்படுத்தியுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டுமொத்தமாக நாடே பயனடைந்திருப்பது துல்லியமாக இருக்கின்றது.

இவர் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பொதுப் பட்டமளித்தல் நிகழ்வின் போது அறிவியலில் கலாநிதிப் பட்டம், கொனோரீஸ் கோஸா வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பேராசிரியர் வி.கே. சமரனாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஏழாம் திகதி இறைபதம் அடைந்தார்.

கலாநிதி ருவான் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி
அருனி கூனதிலக அம்மணியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டது.

வளங்கள்

தொகுப்பு