திரு. புஸ்பானந்த ஏக்கநாயக்க

திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க சிங்கள கையெழுத்துப் படிவங்களின் எழுத்துக்களை வடிவமைத்து வருகிறார். அவர் சிறுவயதில் இருந்தே வெவ்வேறு வடிவங்களில் இதனை மேற்கொண்டு வருகிறார். திரு. ஏக்கநாயக்க வடிவமைத்த முதல் சிங்கள எழுத்துரு மாலிதி ஆகும். திரு. ஏக்கநாயக்க, 1998 ஆம் ஆண்டில் 10 எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டார், ஆனால் அவை உரை தட்டச்சு எழுத்துருக்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அப்போது உரை எழுத்துருவுக்கான தேவை காணப்பட்டது. அதன் விளைவாக, திரு. ஏக்கநாயக்க மிகவும் பிரபலமான சிங்கள ஆஸ்கி(ASCII) எழுத்துரு எஃப்.எம் அபயா இனை வடிவமைத்தார். அதன்பிறகு, வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மாதிரிகளில் சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவர் வெவ்வேறு வடிவமைப்புகளில்12 சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்கினார்.

திரு.ஏக்கநாயக்க பின்னர் சர்வதேசக் குறியாக்கத் தரநிலையான யுனிகோடிற்கு இணக்கமான எழுத்துருக்களை உருவாக்கினார். அவர் வடிவமைத்த அத்தகைய எழுத்துரு மாலிதிவெப் ஆகும், இது ஒரு மெல்லிய எழுத்துரு. முக்கியமாக வலைத்தளங்களில் பயன்படுத்தக்கூடியது. திரு.ஏக்கநாயக்க இந்த எழுத்துருவை ஐ.சி.டி.ஏ-இன் பயனர்களுக்கு இலவசமாக வழங்கினார். திரு.ஏக்கநாயக்க “தி ஃபாண்ட்மாஸ்டர்” என்ற நிறுவனத்தை அமைத்தார். இதன் மூலம் அவர் சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்கினார். சிங்களத்தை முழுமையாக ஆதரிக்காத மென்பொருளை வெளியிடுவது ஒரு தடையாக இருக்கிறது என விளக்கும் திரு. ஏக்கநாயக்க, குறிப்பாக யுனிகோட் தரத்தைக் கடைபிடிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க அவர்கள் சிறு வயதிலிருந்தே வெவ்வேறு வடிவங்களில் சிங்கள கையெழுத்துப் படிவங்களின் எழுத்துக்களை வடிவமைத்து வருகிறார். அவரது பெற்றோரின் கையெழுத்து அழகாகவும் மற்றும் கலையுணர்வுடன் மகிழ்வளிக்கக்கூடியதாயும் இருந்தது. திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க அவர்கள் பாடசாலை மாணவனாக இருந்தபோதே சிங்கள எழுத்துக்களை சுவரொட்டிகள், வரைபடங்கள் மற்றும் பிற ஆவணங்களில் வடிவமைத்தார். திரு. புஷ்பானந்த ஏக்கநாயக்க அவர்கள் 1981 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஒரு விளம்பர நிறுவனமான பீனிக்ஸ் நிறுவனத்தில் வேலையைத் தொடங்கியபோது, அவர் முக்கியமாக கையெழுத்து அலங்கரிப்பில் ஈடுபட்டார். அதன்பிறகு, 1982 ஆம் ஆண்டில், அவர் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இணைந்தார். அங்கு அவரது முக்கிய பணியானது, சிங்கள எழுத்துருக்களை வடிவமைப்பதாக இருந்தது. 1990 களில் இலங்கையில் கணினிகள் நடைமுறைக்கு வந்தன. இந்தக் கட்டத்தில் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட சிங்கள எழுத்துக்களில் குறைபாடுகள் இருந்தன என்றும், இவை அழகியல் ரீதியாக பொருத்தமானவை அல்ல என்றும், சிங்கள எழுத்துக்கள் முக்கியமாகத் தொழில்நுட்ப நபர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளனவேயன்றி வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்று திரு.ஏக்கநாயக்க கூறுகிறார். எனவே, 1994 ஆம் ஆண்டில், திரு. ஏக்கநாயக்க ஒரு கணினி வாங்க முடிவு செய்து, எழுத்துருக்களை வடிவமைக்கத் தொடங்கினார்.

திரு. ஏக்கநாயக்க வடிவமைத்த முதல்எழுத்துரு மாலதி ஆகும். சிங்கள எழுத்துக்களில் உள்ளார்ந்த சரியான வட்ட வடிவத்தை உறுதிப்படுத்த அவர் இந்த எழுத்துருவில் உன்னிப்பாகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில், திரு ஏக்கநாயக்க அவர் உருவாக்கிய 10 எழுத்துருக்களை வெளியிட்டார். ஆனால் அதில் உரை தட்டச்சு எழுத்துரு இல்லை. அதாவது: பெரிய ஆவணங்களுக்காக விரும்பத்தக்கதும் எளிதாகப் படிக்கக்கூடியதுமான எழுத்துரு – இந்த எழுத்துருக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு லத்தீன் எழுத்துரு டைம்ஸ் நியூ ரோமன் என்பது ஓர் உதாரணமாகும். திரு. புஷ்பானந்த ஏக்கநாயக்க அவர்கள் ஓர் உரை எழுத்துருவின் அவசியம் இருப்பதை உணர்ந்து அதற்காக எழுத்துரு ஒன்றை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 1990கள் வரை, முன்னணி அச்சிடும் பெரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, பல ஆண்டுகளாக உருவான பல சிங்கள எழுத்துருக்களை அவர் ஆய்வு செய்தார். மேலும் பொருத்தமான எழுத்துருவை வடிவமைக்க அவர் முடிவு செய்தார். இந்த முயற்சியின் விளைவாக மிகவும் பிரபலமான சிங்கள ஆஸ்கி(ASCII) எழுத்துரு எஃப்.எம்அபயா உருவானது.இது இறுதியில் அரசதுறை நிறுவனங்களிலும், வெளியீட்டுத் துறையிலும், இளமானிப் பட்டதாரிகளின் ஆய்வுகளிலும் பயன்படுத்தப்பட்ட உண்மையான நிலையான எழுத்துருவாக மாறியது.

அதன்பிறகு, பல்வேறு குணாதிசயங்கள் மற்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆளுமைகளுடன் பல்வேறு மாதிரிகளில் சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவாக, திரு. புஷ்பானந்த ஏக்கநாயக்க வெவ்வேறு வடிவமைப்புகளில் 12 சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்கினார். – உதாரணமாக, ஒரு பழைய ஓலை (சிவாலா) ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிங்கள எழுத்துக்களை ஒத்த ஓர் எழுத்துரு, மற்றொன்று பெரிய, திடமான தோற்றத்தைக் குறிக்கிறது. மற்றோர் எழுத்துரு கலைப்பண்புள்ள வேலைக்குப் பயன்படுத்தக்கூடியது.

இந்த வளர்ச்சியின் மூலம், வெவ்வேறு நோக்கங்களுக்காகவும் வெவ்வேறு தலைப்புகளுக்காகவும் பயன்படுத்தக்கூடிய சிங்கள எழுத்துருக்கள் காணப்பட்டன. ஆனால் இவை போதுமானதாக இல்லை என்று திரு. ஏக்கநாயக்க கூறுகிறார். எனவே, அவர் தொடர்ந்து வெவ்வேறு மாதிரிகளில் சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து வருகிறார். எழுத்துருக்களின் உலகளாவிய வகைப்பாடுகளில் உடல் நகலுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் செரிஃப் எழுத்துருக்கள் அடர்த்தியாகவும், முக்கிய வரியுடன் சிறிய கோடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் விளக்குகிறார். சான்ஸ் செரிஃப் டைப்ஃபேஸ்கள் மிகவும் நவீனமானவை. முழுவதும் ஒரே ஒரு கோடு மற்றும் ஒப்பீட்டளவில் வெற்றுத் தோற்றத்தைக் கொண்டுள்ளன. அபயா எழுத்துரு ஒரு செரிஃப் எழுத்துரு என்றும், அழகிய எழுத்துரு பிந்துமதி ஒரு செரிஃப் எழுத்துரு என்றும், ஒப்பீட்டளவில் மெல்லிய கோடுகள் என்றும் சமந்தா எழுத்துரு இந்த எழுத்துருவில் சற்று தடிப்பான பதிப்பாகும் எனவும் அவர் மேலும் விளக்குகிறார். கங்கனி மற்றும் பசுரு எழுத்துருக்கள் சான்ஸ் செரிஃப் எழுத்துருக்களாகும். ஓலை ஆவணங்களில் இருந்த சிங்கள எழுத்துக்களை அவை ஒத்திருந்தன. ஒரு வன்பொருள் கடையின் பெயர்ப் பலகைக்கான எழுத்துருக்கள், திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களுக்குப் பயன்படுத்தக்கூடிய எழுத்துருக்கள் மற்றும் குருலுகோமி போன்ற பல பகட்டான எழுத்துருக்களும் காணப்பட்டன. திரு.ஏக்கநாயக்க கெமுனு போன்ற எழுத்துருவை சதுர வடிவங்களுடன் எழுத்துருக்களாக வடிவமைத்தார். பின்னர் அவர் ஏன் இதைச் செய்தார் என்ற கேள்விகள் இருந்தன. ஏனெனில் சிங்கள எழுத்துக்கள் வட்ட வடிவங்களைக் கொண்டுள்ளன. பின்னர், இதே போன்ற எழுத்துரு தவாசா (දවස) மிகவும் பிரபலமானது. சதுர எழுத்துருக்களைக் கொண்டு, சிறிய இடத்தில் அதிக எழுத்துக்களை வைத்திருப்பது சாத்தியமாகிறது என்று அவர் விளக்குகிறார்.

திரு. புஷ்பானந்த ஏக்கநாயக்க அவர்கள் கணினிகளில் பயன்படுத்த எழுத்துருக்களை உருவாக்கத் தொடங்கியபோது, அவர் எழுத்துரு எடிட்டர் ஃபோன்டோகிராஃபர், பதிப்பு 3.0 ஐப் பயன்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் இறுவெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. மென்பொருள் நெகிழ் வட்டுகளில் கிடைத்தது. தற்போது எழுத்துரு திருத்தி FontLab கிடைக்கிறது. முந்தைய காலங்களில் அவர் ஆஸ்கி (ASCII) எழுத்துருக்களை உருவாக்கினார். ஆனால் பின்னர் அவர் சர்வதேசக் குறியாக்கத் தரநிலையான யுனிகோடிற்கு இணங்க எழுத்துருக்களை உருவாக்கினார் என்று திரு. ஏக்கநாயக்க மேலும் கூறுகிறார். அவர் வடிவமைத்த அத்தகைய எழுத்துரு மாலிதிவெப் ஆகும். இது ஒரு மெல்லிய எழுத்துருவாகும். இது முக்கியமாக இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடியது. பேராசிரியர் கிஹான் டயஸ், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.சி.டி.ஏ.) நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளராக இருந்தபோது, இந்த எழுத்துருவுக்கான விதிகளை உருவாக்கினார். இதன் விளைவாக, ஐ.சி.டி.ஏ. தனது வலைத்தளமான www.icta.lk இல் இதனை கிடைக்கத்தக்கதாக ஆக்கியது. இது தற்போது எல்.கே(lk) டொமைன் பதிவேட்டில் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் உள்ளூர் மொழிகளின் தளமான www.language.lk இல் கிடைக்கிறது. திரு.ஏக்கநாயக்க “தி ஃபாண்ட்மாஸ்டர்” என்ற நிறுவனத்தை அமைத்தார். இதன் மூலம் அவர் சிங்கள எழுத்துருக்களை வடிவமைத்து உருவாக்கினார்.

சிங்களத்தை முழுமையாக ஆதரிக்காத மென்பொருளை வெளியிடுவது ஒரு தடையாக இருக்கிறது எனவும், குறிப்பாக யுனிகோட் தரத்தைக் கடைபிடிப்பதை திரு. ஏக்கநாயக்க விளக்குகிறார். லேக்ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்ர்ஸ் சிலோன் லிமிடெட்) இந்தப் பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வைக் கண்டறிந்தது. எனவே, திரு.புஷ்பானந்த லேக்ஹவுஸிற்காக 12 யுனிகோட் சிங்கள எழுத்துருக்களை உருவாக்கினார். அவர் மேலும் கூகிள் இற்கான ஐந்து யுனிகோட் ஓப்பன் சோர்ஸ் சிங்கள எழுத்துருக்கள் அபயாலிப்ரே (அபயாலிப்ரே போல்ட், அபயாலிப்ரே எக்ஸ்ட்ரா போல்ட் போன்றவை) எழுத்துருக்களாக அசல் எழுத்துரு அபயாவை உருவாக்கினார். இணையத்தில் பகட்டான எழுத்துருக்கள் மிகவும் தேவையில்லை. ஏனென்றால் வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள், குறிப்பாக மொபைல் சாதனங்கள் மூலம் அணுகும்போது, வாசிப்பிற்காகவே முக்கியமாகத் தேவைப்படுகின்றன.

தற்போது சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும், அவர் யுனிகோட் சிங்கள எழுத்துருக்களை உருவாக்கி வருகிறார் எனவும், மேலும் இந்தத் துறையில் அவர் சிறந்து விளங்க முயற்சிக்கிறார் எனவும் திரு. புஷ்பானந்த ஏக்கநாயக்க கூறுகிறார்.