திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி

திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளராக இருக்கிறார், பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் உறுப்பினர் மற்றும் IBM இல் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராக 1979 ஆம் ஆண்டு இணைந்தார் அத்துடன் கணக்கியல் மற்றும் பாதீடுகளில் பங்கேற்றுள்ளார், மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் பின்னர் சந்தைப்படுத்தல் பிரிவில் இணைந்ததுடன் அதனைத் தொடர்ந்து இலங்கை IBM இல் நாட்டு முகாமையாளரானார்.

 

 

 

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளராக இருக்கிறார், பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் உறுப்பினர் மற்றும் IBM இல் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராக 1979 ஆம் ஆண்டு இணைந்தார் அத்துடன் கணக்கியல் மற்றும் பாதீடுகளில் பங்கேற்றுள்ளார், மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் பின்னர் சந்தைப்படுத்தல் பிரிவில் இணைந்ததுடன் அதனைத் தொடர்ந்து இலங்கை IBM இல் நாட்டு முகாமையாளரானார்.

இலங்கை IBM இல் இணைவதற்கு முன்னர், திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் ஸாம்பியாவில் பதின்மூன்று விற்பனைக் கிளைகள் மற்றும் இரு தொழிற்சாலைகளுக்கு உதவக்கூடிய ஒரு முறைமையினை IBM சிஸ்டம்/ 370 மாதிரி 115 இல் நிர்வகித்து நான்கு வருடங்களுக்கு மேல் கணினி தொடர்பான பணிகளில் உள்வாங்கப்பட்டிருந்தார். இவர் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் இங்கு இன்-ஹவுஸ் கணினி இல்லையென உணர்ந்தார் – திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் IBM இல் இணைந்து இரு வருடங்களுக்குள் ஒரு கணினி கொள்வனவு செய்யப்பட்டது. இது சிஸ்டம் 360 ற்குப் பின் வெளியிடப்பட்டிருந்த மிக அடிப்படையான கணினி ஆகும். IBM ஆனது கணினியைப் பெறுவதற்கு முன்னதாக, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் (ஒரு ICT 1901 கணினி), வார்க்கஸ் இல் மற்றும் திரு.சண்டி விஜயசேகர தலைவராகவிருந்த கொழும்பு 03-அசோசியேற்றட் மனேச்மென்ற் சிஸ்டம்ஸ் (AMS) இலும் கணினிகள் காணப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் காப்புறுதி கூட்டுத்தாபனம், பெற்றோலியம் கூட்டுத்தாபனம் போன்ற பல அரச நிறுவனங்களுக்காக IBM பல கணினிகள் குத்தகைக்கு விடப்பட்டன. இலங்கையில் தொழினுட்ப வசதியினைவழங்குவதற்காக IBM ஆனது 360 எல்லையிலிருந்து 4300 ற்கு வழிகாட்டியதாக திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் கூறுகின்றார். பெரிய கணினிகளிலிருந்து தனிநபர் கணினிகளுக்கு மாறியது மற்றும் அம்மாற்றங்களுக்கு எவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்டு அவற்றினைப் பயன்படுத்தினர் என அவர் நினைவு கூர்கின்றார். கெளரவ பிரதமர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு IBM வருகை தந்தது ஓர் சுவாரசியமான நிகழ்வு என அவர் நினைவுபடுத்துகின்றார். 1962 ஆம் ஆண்டில் IBM யை அழைத்ததற்குக் காரணம், மற்ற நிறுவனங்கள் வெளியேற வேண்டியிருந்தமை ஆகம், ஏனெனில் காப்புறுதி வணிகம் தேசியமயமாக்கப்பட்டது மற்றும் காப்புறுதிக் கொள்கைகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கையாளுவது மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் இருந்தன. இதன் விளைவாக, இந்திய காப்பீட்டு நிறுவனத்தின் உதவி பெறப்பட்டது, அதன் பரிந்துரையின் படி தரவுகள் கணினி மயப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட பின்னர் முதல் படிமுறையாக தரவு உள்ளீட்டு இயந்திரங்களின் மூலம் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டன. தரவு உள்ளீட்டு இயந்திரத்தின் மூலம் தரவுகள் அட்டைகளில் (காட்ஸ்) பதிவு செய்யப்பட்டு செயல்படுத்துவதற்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன பின்னர் அங்கிருந்து பெறுபேறுகள் திரும்பக் கிடைத்தன.

திரு.லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் .LK டொமைன் பதிவகத்தின் சபையில் ஒருவராக இருந்தார், அங்கு அவர் நிதி ஆய்வு ஒன்றிலும் அதற்கான ஆலோசனையை வழங்குவதிலும் பங்களிப்புச் செய்தார். இதன்பொருட்டு கருத்துத் தெரிவித்த திரு.லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி, பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் செய்த சாதனைகள் பாரியளவில் விதிமுறைகளை விஞ்சியது எனக் கூறுகின்றார்.