திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ

திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ கொழும்பு கொட்டஹேனவில் உள்ள சென்.பெனடிக்ட் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார், அத்துடன் இலங்கை பேராதனை சிலோன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பல்கலைக்கழக படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் 1967 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் மாணவனாகப் பயிலும் போது அனெலொக் கணினியைப் பயன்படுத்தி ஒரு அசைன்மெண்ட் இனை செய்யும் போது அவருக்கு கணினியில்  ஆர்வம் உண்டானது.

இவர் 1979/80 காலப்பகுதியில் பெல்ஜியம் அரசாங்கத்தின் புலமைப்பரிசிலினூடாக தாய்லாந்து நாட்டின் ஆசியன் தொழினுட்ப நிறுவனத்தில் கணினியின் பயன்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் எனும் பிரிவில் முதுகலைமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவரது இறுதியாண்டு முதுகலைமானி ஆய்வினை “இலங்கையில் கணினி பயன்பாடுகளுக்கான வளங்கள் பற்றிய ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் முன்னெடுத்திருந்தார். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் IBM உலக வர்த்தகக் கூட்டுத்தாபனம் ஆகியன இவரது கள வேலைகளுக்கான நிதியினை வழங்கின. திரு.பெர்னான்டோ தனது பட்டமளிப்பின் பின்னர் 1980 ஆம் ஆண்டு இலங்கை IBM இல்  இணைந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு வரை IBM இல் பணியாற்றியுள்ளதுடன், இந்தியா, கொங்கோங், சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் IBM ற்காக வெவ்வேறுபதவிகளில் 32 வருடங்கள் பணியாற்றியுள்ளதுடன், இறுதி நான்கு ஆண்டுகளில் IBM ஊழியர்களை உள்வாரியாகப் பயிற்றுவிப்பதற்காக உலகளாவிய ரீதியிலான ஒரு வளமாக கருதப்பட்டார்.

1968 இலிருந்து இலங்கையில் ICL சிலோன் நிறுவனம் ICL கணினிகள்மற்றும் DMS வாங் (Wang) மினி கணினிகளையும் அதன் பின்னர் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் IBM கணினிகளை நிறுவ ஆரம்பித்ததமை வரையான இலங்கையின் கணினி வரலாற்றுடன் சமாந்தரமாக அவரது வாழ்க்கை இருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார். 

திரு.பெர்னான்டோ அவர்கள் ஆரம்பத்தில் ஒரு கணினி பொறியியல் பயிலுனராக 1967 இலிருந்து 1973 வரை பணியாற்றினார். அதன் பின்னர் கணினி பொறியிலாளர், மற்றும் ICL சிலோன் நிறுவனத்தில் சிரேஸ்ட கணினி பொறியியலாளராகவும் அதன் பின்னர் 1973 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இந்தோனேசியாவில் ICL சிலோன் நிறுவனத்தில் கணினி பொறியியல் முகாமையாளராகவும் பணியாற்றிள்ளார். பின்னர், இலங்கை IBM உலக வர்த்தக கூட்டுத்தாபனத்தில் கணக்காளர் பயிலுனர் பிரதிநிதியகவும் (சொலுஸன்ஸ் ஆர்கிடெக்); 1980 முதல் 1985 வரையான காலப்பகுதியில் சந்தைப்படுத்தல் முகாமையாளராகவும், 1988 முதல் 1990 வரையான காலப்பகுதியில் வாடிக்கையாளர் செயற்பாட்டு முகாமையாளராகவும், 1995 முதல் 1998 வரையான காலப்பகுதியில் நாட்டிற்கான பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் 1986 முதல் 1988 வரையான காலப்பகுதியில் IBM தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான வணிக திட்டமிடல் முகாமையாளருக்கான செயற்பாடுகளை உள்ளடக்கி இலங்கைக்கு பொறுப்பாக வெளிநாட்டு வேலைகளை முன்னெடுத்ததுடன், 1993 முதல் 1995 வரையான காலப்பகுதியில் IBM ASEAN – AS/400 ற்கு வியாபார குறி முகாமையாளரகவும், 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் IBM ஆசிய பசுபிக் தெற்குக்கான பிராண்ட் வழக்கறிஞராகவும் மற்றும் IBM Worldwide- 2009 முதல் 2012 வரையான காலப்பகுதியில் விற்பனை கற்கைக்கு உதவுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தில் (SLIIT) IT பிரிவில் முதுமானிப் பட்டப்படிப்பு கற்கைகளுக்கு வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் இலங்கை கணினிச் சமூகத்தின் ஸ்தாபக பணிப்பாளராகவும் அதன் பேரவையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தொழில் ரீதியாக ஒரு பட்டயப் பொறியியலாளர் ஆவார். இவர் கணினிச் சமூகம் மற்றும் சிங்கப்பூர் இன்சிடியூட் ஒஃப் ஆவிரேற்றஸ் ஆகியவற்றின் சக உறுப்பினரும் ஆவார். இவர் ACS ஆல் சான்றிதலளிக்கப்பட்ட SFIA IT திறன்கள் மதிப்பீட்டாளர் ஆவார். இவர் 08 நாடுகளில் தங்கி பணிபுரிந்தமையால் அவரை ஒரு உலக குடிமகனாகக் கருதுகின்றார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு.ஜோன் என்.எல்.சி. பெர்னான்டோ அவர்கள் 1967 ஆம் ஆண்டு இலங்கை பேராதனையிலுள்ள சிலோன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் மாணவனாகப் பயிலும் போது அனலொக் கணினியைப் பயன்படுத்தி ஒரு வேலைத்திட்டத்தினைச் செய்யும் போது முதன் முதலாக கணினியில் ஆர்வம் ஏற்பட்டமை இதன் ஆரம்பப் புள்ளியாக இருந்தது. திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ கொழும்பு கொட்டஹேனவில் உள்ள சென்.பெனடிக்ட் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார், அத்துடன் இலங்கை, பேராதனை, சிலோன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பல்கலைக்கழக படிப்பினை பூர்த்தி செய்தார். அவரது தந்தையார் திரு.பி.சி.பெர்னான்டோ அவர்கள் இலங்கை மற்றும் இங்கிலாந்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் முன்னோடியாக இருந்தமை தன்னை ஒன்பதாம் தரத்தில் கணிதப்பிரிவினை தெரிவு செய்வதற்கு உந்துசக்தியாக இருந்ததுடன் அதன் மூலம் பொறியியல் பட்டத்தினைப் பெறுவதற்கு வழிவகுத்ததாகவும் திரு. பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார்.

அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொறியியல் பட்டத்தினைப் பெற்றுக் கொள்வது ஒரு தேவையாக இருந்தது. எனவே பெர்னாண்டோ அவர்கள் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற பொறியியல் நிறுவனமாக இருந்த வாக்கர் சன்ஸ் & கம்பனி இல் கணக்காளராக பணியாற்றிய ஒரு நண்பரான திரு. அன்டன் சமரசிங்க அவர்களை அணுகினார். இதனால் திரு.பெர்னான்டோ அவர்களை UK இன் ICL ற்கான இலங்கை விற்பனை முகவரான ஒபிஸ் இகியூப்மென்ட் விமிடெட் [OEL] இல் இணையுமாறு திரு.சமரசிங்க வழிப்படுத்தினார். பொறியியல் பயிலுனர்களுக்காக வார்கர்ஸ் சப்ஸிடயறி கொம்பியூட்டர் சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆனது ICL கணினி மற்றும் OEL ஆகியவற்றினைக் கொள்வனவு செய்ய உத்தரவிட்டது. ICL UK இனால் நடாத்தப்பட்ட உளச்சார்புத் தேர்வில் உலகளாவிய ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்றதனால் திரு.பெர்னான்டோ அவர்கள் கணினி பொறியிலாளர் பயிலுனர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஐசிஎல் சிலோன் (ICL CEYLON)

இவர் இங்கிலாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டு பின்னர் 1968 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார். இவர் சிரேஸ்ட பொறியிலாளர் திரு. பிர்யான் பித்தவெல அவர்களுடன் சேர்ந்து அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தில் ICL 1901S கணினி முறைமையினையும், CSL / வாக்கர்ஸ் இல் மற்றைய ICL 1901 கணினி முறைமையினையும் பராமரித்தார். அத்துடன் கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் இருந்த ஃபோர்டு ரோட்ஸ் அசோசியேட் AMS டேட்டா சர்வீஸ் லிமிடெட் [AMS] கணினிகள் நிறுவனத்தில் ICL 1901A கணினியையும் நிறுவினார்.

பாரிய மற்றும் முக்கியமான செயல்முறைகள்:

இவ் ஆரம்பகால கணினிகள் மூலம் பாரிய மற்றும் முக்கிமான தரவு தொகுதிகள் செயல்முறைப்படுத்தப்பட்டன.

 “சத்திரசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” என ஒரு வைத்தியர் சொல்வதைப் போல் இல்லாமல், ஒரு கணினி பொறியிலாளர், கணினி முறைமைகளைப் பேண வேண்டும், இல்லையெனில் சம்பளப்பட்டியலை அச்சிட முடியாது போகும் அத்துடன் ஊழியர் போராட்டமொன்று முன்னெடுக்கப்படலாம்; அல்லது, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட முடியாமையால் ஒரு குழப்பநிலை உண்டாகலாம், அல்லது, தேயிலை ஏற்றமதி ஆவணங்கள் அச்சிடப்பட முடியாமையால் ஒரு பொருளாதாரச் சிக்கல் உண்டாகலாம் என திரு.பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார். இதனை விளக்குவதற்காக இவர் இரு சம்பவங்களை நினைவு கூர்கின்றார். SEC இல் சம்பளப்பட்டியல் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்ததப்பட்ட லைன் பிறின்ரர் நிரம்பி இருந்தது, அத்துடன் அதற்கான காரணம் மினியேச்சர் கியர்பாக்ஸ் செயலிழப்பு என கண்டறியப்பட்டது. திரு. பெர்னான்டோ அவர்கள் மருதானை டீன்ஸ் வீதியில் இருந்த நிறுவனத்திற்குச் சென்று உடனடியாக அதனைத் திருத்தினார். பின்னர் சம்பளப்பட்டியல் அச்சிடப்பட்டது, ஆயிரத்திற்கு மேற்பட்ட SEC ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளப்பட்டியல் வழங்கப்பட்டது. AMS ICL இன் 1901A சிஸ்டத்தில் நிறுவப்பட்ட பிரதான நினைவகம் (ஃபெரைட் கோர் ஸ்டோர்) செயலிழந்ததாகக் (கொண்டுவரப்பட்டபோதே செயலிழந்திருந்தது) கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ICL UK இனால் மாற்று நினைவகம் ஒன்று வான்வழியாக கொண்டுவரப்பட்டதுடன் நிறுவுவதற்கு உத்தரவாதமும் இலவச சேவையும் வழங்கப்பட்டது. ஆனால் சுங்க நோக்கங்களுக்காக நான்காயிரம் பவுண்ட்ஸ் அறவிடப்படவேண்டும் என அதனுடன் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ் நினைவக ஸ்ரோர் ஒரு மேஸிடிஸ் வென்ஸ் காரின் பெறுமதியைக் காட்டிலும் அதிகமாயிருப்பதால் அதற்கு விசேடமான இறக்குமதி அனுமதிப்பத்திரம் தேவையென இலங்கை சுங்கப்பிரிவு கருதியதால் ஆரம்பத்தில் அதனை வழங்க மறுத்தது. பின்னர் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இது வெளிநாட்டு செலாவணியில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாது எனக் கருதப்பட்டு நினைவக ஸ்ரோர் விடுவிக்கப்பட்டது அத்துடன் வெற்றிகரமாக சிஸ்டத்தில் நிறுவப்பட்டது.

இந்தோனேசியாவில் ஐசிஎல் சிலோன் (ICL CEYLON in INDONESIA)

1977ற்கு முன்னதான முயற்சிக் காலத்தில் ஐசிஎல் சிலோன் (ICL CEYLON) ஆனது இலங்கையில் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித முறைப்பாடுகளும் இன்றி வெற்றிகரமாக கணினிகளைப் பராமரித்து வளம்மிக்கதாக இருந்ததாக இனங்காணப்பட்டது. அவர்கள் ஜகார்த்தாவில் மத்திய புள்ளிவிபரவியல் மையத்தில் பாரிய ICL கணினிகளை நிறுவி பராமரிப்பினை வழங்கினர். இது 100 மில்லியன் சனத்தொகையை மதிப்பீடு செய்து கொள்வதற்கு உயர் கொள்ளளவுடைய ஆன்லைன் ஆவண ரீடர்களை (ஆன்லைன் டொகுமென்ற் ரீடர்)   கொண்டிருந்தது. பின்னாளில் ஐசிஎல் சிலோன் இன் சிரேஸ்ர கணினி பொறியியலாளராக இருந்த திரு. பெர்னான்டோ அவர்கள் இங்கிலாந்தில் ICL உடன் மீள்பயிற்சி பெறுவதற்காக 1973 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டார். அத்துடன் 1974-1976 வரையான காலப்பகுதியில் இந்தோனேசியாவில் கணினி பொறியியல் முகாமையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதன் மூலம் சில ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையினது கணினி தொடர்பான முன்னேற்றத்தினை அடையாளப்படுத்துகின்றது.

தரவு முகாமைத்துவ முறைமைகள் லிமிடெட் (DMS)

DMS ஆனது வாங் மினி கணினிகளுக்கான அனுமதிபெற்ற இலங்கை விற்பனை முகவராக இருந்தது. இவர் DMS இன் பிரதான ஸ்தாபக முகாமையாளராக இருந்தார். அத்துடன் இலங்கையில் முதல் கணினியை (இன்ரரெக்டிவ் கம்பியூட்டர்) விற்பனை செய்வதற்கும் நிறுவுவதற்கும் பொறுப்பாக இருந்தார்- வாராந்த தேயிலை ஏலத்திற்கான ஆவணங்களை செயற்முறைப்படுத்துவதற்காக ஜாஃப்பர்ஜி பிரதர்ஸ் க்கு வாங் 2200T கணினி வாங்கப்பட்டது. இதற்காக கொங்கோங்கில் வாங் கணினிகள் (Wang Computers) தொடர்பான பயிற்சியினையும் பெற்றுக் கொண்டார்.

மூன்றாம் நிலை கல்வி– AIT

இவர் 1979/80 காலப்பகுதியில் பெல்ஜியம் அரசாங்கத்தின் புலமைப்பரிசிலினூடாக தாய்லாந்து நாட்டின் ஆசியன் தொழினுட்ப நிறுவனத்தில் கணினியின் பயன்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் எனும் பிரிவில் முதுகலைமானிப் பட்டப்படிப்பினைப் பெறுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். இவரது இறுதியாண்டு முதுகலைமானி ஆய்வினை “இலங்கையில் கணினி பயன்பாடுகளுக்கான வளங்கள் பற்றிய ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் முன்னெடுத்திருந்தார். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் IBM உலக வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் இலங்கைக் கிளை ஆகியன இவரது கள வேலைகளுக்கான நிதியுதவியினை வழங்கின. இலங்கையில் ஆரம்ப வருடகால கணினிகள் பற்றிய நினைவூட்டல்கள் அந்த ஆய்வின் அடிப்படையாக அமைந்திருந்தது.

IBM உலக வர்த்தகக் கூட்டுத்தாபனம்

திரு.பெர்னான்டோ தனது பட்டமளிப்பின் பின்னர் இலங்கை IBM இல் 1980 ஆம் ஆண்டின் பின்பகுதியில் இணைந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு வரை IBM இல் பணியாற்றியுள்ளதுடன், இந்தியா, கொங்கோங், சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் IBM ற்காக வெவ்வேறு பதவிகளில் 32 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

தொழில்வாழ்க்கையின் சிறப்பம்சங்கள்

இலங்கையில் ICL சிலோன் ICL கணினிகள் மற்றும் DMS வாங் மினி கணினிகளையும் அதன் பின்னர் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் IBM உலக வர்த்தக கூட்டுத்தாபனங்களை நிறுவ ஆரம்பித்தது வரையான இலங்கையின் கணினி வரலாற்றுடன் சமாந்தரமாக அவரது வாழ்க்கை இருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார்.

திரு.பெர்னான்டோ அவர்கள் DMS-வாங் மினி கணினிகள் நிறுவனத்திற்கு ஸ்தாபக பொது முகாமையாளராக 1977-8 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார்.

ICL சிலோன்: கணினி பொறியிலாளர் பயிலுனர்; கணினி பொறியிலாளர், சிரேஸ்ர கணினி பொறியிலாளர் 1967-73

இந்தோனேசியாவில் ICL சிலோன்:கணினி பொறியியல் முகாமையாளர் 1973-76

AIT முதுமானி புலமைப்பரிசில் பெறுநர்: “இலங்கையில் கணினி பயன்பாடுகளுக்கான வளங்கள் பற்றிய ஓர் ஆய்வு” 1979-80

IBM WTC SL: கணக்காளர் பயிலுனர் பிரதிநிதி [Solutions Architect]; கணக்காளர் பிரதிநிதி [Solutions Architect]; சந்தைப்படுத்தல் முகாமையாளர்; 1980-85

வாடிக்கையாளர் செயற்பாடுகள் முகாமையாளர்; 1988-90

நாட்டுப் பணிப்பாளர்: {CGM] 1995-98

IBM

இலங்கைக்கான பொறுப்புக்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு வேலைகள்

IBM தென்கிழக்காசிய பிராந்தியம் – வணிக திட்டமிடல் முகாமையாளர் 1986-88

IBM ASEAN – AS/400 பிராண்ட் முகாமையாளர் 1993-95

IBM ஆசிய பசுபிக் தெற்கு, பொது வணிகம் – பிராண்ட் வழக்கறிஞர் 1998-2008

IBM உலகளாவிய ரீதியில் – விற்பனை பயிற்சி வழங்குனர் 2009-12

SLIIT –சிரேஸ்ர வருகைதரு விரிவுரையாளர், IT பிரிவில் முதுமானிக் கற்கைகள் 2004 முதல் தற்போது வரை

CSSL – ஸ்தாபக பணிப்பாளர் மற்றும் முன்னாள் பேரவை உறுப்பினர்

CSSL – ACS அங்கீகாரம் பெற்ற SFIA மதிப்பீட்டாளர்

இலங்கையுடன் தொடர்பில்லாத ஏனைய பதவிகள்

IBM இந்தியா அயல்நாட்டு கணக்கு முகாமையாளர் – IBM இந்தியாவுக்கு திரும்பியபின் முன்னெடுக்கப்பட்ட இரகசிய செயற்திட்ட குழு. 1991

IBM சிங்கப்பூர்– AS/400 பிராண்ட் முகாமையாளர் – 1992

ICT 558 – ஆரம்பம்

வார்க்கர் மற்றும் சன்ஸ் (Walker and Sons) இல் சம்பளப்பட்டியல் மற்றும் சரக்குக் கட்டுப்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு ICT 558- முதல் இலத்திரனியல் கணினி முறைமையினை நிறுவியதனை திரு.பெர்னான்டோ அவர்கள் நினைவு கூர்கிறார். இது முதல் இலத்திரனியல் கணினி முறைமை என்பதுடன் கணக்கியலுக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. இது, சிரேஸ்ட நிதிப்பிரிவு அதிகாரியும் ஒரு பிரிட்டிஸ் குடிமகனுமாகிய திரு. கெய்ஷேஸ்ட் FCWA மற்றும் கணக்காளர் திரு.அன்ரன் சமரசிங்க ஆகியோரின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.  ICT 558 ஆனது தரவு மற்றும் புரோகிராம்களுக்காக வால்வுகள் மற்றும் திரான்சிஸ்ரர்கள் மற்றும் நினைவக ஸ்ரோர்களையும் கொண்டிருந்தது. இது 40 புரோகிராம் காட்ஸ் உள்ளீடு மற்றும் வெளியீடுகளை கொண்டிருந்ததுடன், செயற்படுத்தப்பட்ட பெறுபேறுகளை அச்சிடுவதற்கு ஆஃப்லைன் பிரின்டர் ஒன்றையும் பயன்படுத்தியது. இவ் இயந்திரமானது முன்னாள் காவல்துறை ரேடியோ பிரிவு பொறியியலாளரான திரு.ரங்கநாதன் அவர்களால் பராமரிக்கப்பட்டது. ஒபிஸ் இக்கூப்மென்ட் லிமிடெட் (OEL) இன் இலங்கையின் முதல் கணினி வன்பொருள் பொறியிலாளராக திரு.ரங்கநாதன் கருதப்பட்டார்.

ICL 1901 – 2 வது தலைமுறை

இரண்டாவதாக, முதல் 2ஆம் தலைமுறை கணினியாக, அறிவியல் செயல்பாடு வன்பொருள் அக்சலேரட்டர் ஆக ICL 1901S ஒன்று அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது திரான்சிஸ்டர் தர்க்கச் சுற்றுக்கள், ஆன்லைன் வரிசையாக்கத்திற்கான காந்த நாடா டிரைவ்கள் மற்றும் அதிக பரிமாணமுள்ள அச்சுப்பொறிகளுக்கான அதிவேக லைன் பிறின்ரர் ஆகியவற்றினைக் கொண்டிருந்தது. இது பொறியியல் தொழில் நிபுணர் குழுவின் தலைவரான கலாநிதி ஏ.என்.எஸ்.எஸ். குலசிங்க அத்துடன் தரவு செயல்முறை முகாமையாளரான பேராசிரியர் சாம் கருணாரெத்ன அவர்களின் சிந்தனையில் உதித்தது. இந்த கணினியானது திட்ட அஸ்ஸம்ப்லெரைப் பயன்படுத்தி கணக்கிடுதல், PERT இனைப் பயன்படுத்தி செயற்திட்ட கட்டுப்பாடு மற்றும் FORTRAN யைப் பயன்படுத்தி பொறியியல் வடிவமைப்பு போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. முழுமையான கணினிக் குழுவில் சிரேஸ்ர விஞ்ஞான ஆய்வு நிரலாளராக திரு.நிமல் அமரசிங்கவும், ஆய்வு நிரலாளர்களாக கலாநிதி ஆர்.வி.ஏக்கநாயக்க, திரு.ரஞ்சன் பெரேரா, திரு.விஜே மற்றும் திரு.எஃப்.ஜே.டி சில்வா ஆகியோரும் இருந்தனர். அவர்கள் இலங்கையில் கணினி நிபுணர்களின் அடித்தளமாக மாறினர். கணினியின் கொள்ளளவு மற்றும் கணினிப்பிரிவில் திறமைகள் மற்றும் தேர்ச்சிகள் உடைய ஊழியர்கள் அதிகமான அளவில் கிடைத்ததனால் SEC ஆனது மற்றைய அரச நிறுவனங்களுக்கான செயற்திட்டங்களையும் செயற்படுத்தியது.  இதில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் செயற்பாடுகளை 1968 முதல் முன்னெடுப்பதுடன், பல அரச முகவர்களுக்கு பல திட்டங்களையும் செயற்படுத்திவருகின்றது.

மூன்றாவது கணினியான ICL 1901 கணினி முறைமை 1968 ஆம் ஆண்டு CSL / வாக்கர்ஸ் இல் நிறுவப்பட்டது. இவ் 2ஆம் தலைமுறைக் கணினியானது திரான்சிஸ்டர் தருக்கச் சுற்றுக்களைக் கொண்டிருந்ததுடன் பேப்பர் ரேப் இனை உள்ளீட்டு ஊடகமாக கொண்டிருந்தது. இதன்மூலம் CSL இன் வாடிக்கையாளர்களால் பேப்பர் ரேப்பினைக் கொண்டிருந்த ரெலெக்ஸ் இனைப் பயன்படுத்தி CSL இற்கு தரவு அனுப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. CSL ஒரு தரவு செயலாக்க பணியகமாக இருந்தது. இது மேலும் பழைய ICT 558 இலிருந்து வார்க்கஸின் வேலைச் செயற்பாடுகளின் சுமைகளை குறைப்பதற்கும் பயன்பட்டது.

நான்காவது கணினியான ICL 1901A ஆனது கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்த AMS தரவு சேவைகள் லிமிடெட் (AMS) இல் இருந்தது. பட்டயக் கணக்காளராகவிருந்த திரு.டி.சி.விஜேயசேகர அவர்கள் ஃபோர்டு ரோட்ஸ் பார்ட்னர் ற்குப் பொறுப்பாகவிருந்தார். இது ஒருங்கிணைக்கப்பட்ட தருக்கச் சுற்றுக்களை [ICs] கொண்ட 2 ஆம் தலைமுறைக் கணினியாகும் அத்துடன் மாற்றத்தக்க காந்த டிஸ்க் ட்ரைவ்களைக் கொண்ட முதல் கணினியாகும். AMS ஒரு சேவை மையமாக இருந்தது, அத்துடன் அக்கம்பனியானது கணக்கியல் திட்டங்கள், தேயிலை ஏலங்கள் தொடர்பான வேலைகள், மேலும் பல செயற்பாடுகளையும் முன்னெடுத்தது. வாக்கர்ஸ் இறுதியில் ஓய்வு பெற்றதில் ICT 558 உடனான ஆரம்ப கணினி நிறுவுதல்கள் இவை என திரு.என்.எல்.சி.பெர்னான்டோ அவர்கள் நினைவு கூர்கின்றார்.

மூன்றாம் தலைமுறைக் கணினிகள்

1969 இலிருந்து அடுத்த கட்டத்தில், மூன்றாம் தலைமுறை IBM 360 மெயின்பிறேம் கணினிகள் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் [திரு.எல்.எஸ்.ஏ.பெர்னான்டோ மற்றும் திரு.எல்.வி.ஏக்கனாயக்க], பெற்றோலியக் கூட்டுத்தாபனம் [திரு. யாஸா கருணாரெத்ன மற்றும் திரு.பண்டு ரணசிங்க], பின்னர் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் [திரு. விதானகே மற்றும் திரு.ஏ.அத்தனாயக்க], இலங்கை மத்திய வங்கி (இங்கு ஊழியர் சேமலாப நிதியினை கையாள கணினிகள் பயன்படுத்தப்பட்டன) [திரு. அஜித் கனகசுந்தரம் மற்றும் திரு. டியூடர் சுறவீர] ஆகிவற்றில் நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பரீட்சைத் திணைக்களத்தினால் க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை செயல்முறைப்படுத்துவதற்காக ஒரு IBM 360 மெயின்பிறேம் கணினி குத்தகைக்கு எடுக்கப்பட்டது. [திரு. நாணயக்கார அவர்கள் ஆய்வு நிரலாளரான (அனேலிஸ்ட் புரோகிராமர்) திரு. பண்டு ரணசிங்க அவர்களுடன் இதற்குப் பொறுப்பாகவிருந்தார்].

அறிவியல் கணினிகள் (சயன்ரிபிக் கம்பியூட்டர்ஸ்)

பின்னைய காலத்தில் கலாநிதி குணவர்த்தன அவர்களின் கீழ் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் கலாநிதி அபய இந்துருவ அவர்களின் கீழ் மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடம் ஆகியவை IBM 1130s இன் புதிய கணினிகளைக் கொண்டிருந்ததாக   திரு.ஜோன் என்.எல்.சி. பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார். மூன்று HP சயன்ரிபிக் டெக்ஸ்ரோப் கணினிகள் FORTRAN நிரலாக்கத்திற்கும் புள்ளிவிபரவியல் வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் விவசாய பட்டப்பின் படிப்புகள் நிறுவனம் மற்றும் விவசாய ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி நிறுவனம் (ARTI) ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு ஒரு கணினியை கொள்வனவு செய்தார் என திரு.பெர்னான்டோ நினைவு கூர்கின்றார்

இலங்கையில் தரவு செயலாக்க சகாப்தங்கள்

சகாப்தம் -1: கணினியை அடிப்படையாக கொண்டிராத தரவு 1946-1964 பவர் சமாஸ் & ஹோலரித்

சகாப்தம் -2 இலத்திரனியல் கணினி முறைமை: 1964-1967 ICT 558

சகாப்தம் -3 இரண்டாம் தலைமுறை டிஜிட்டல் கணினிகள்: 1967-1968 ICL 1901

சகாப்தம் -4 மூன்றாம் தலைமுறை டிஜிட்டல் கணினிகள்:  1969-1970 IBM 360

சகாப்தம் -5 கணினி தலைமுறை இழப்பு: 1970-1977 IBM 1130

சகாப்தம் -6 1977 இலிருந்து – டெஸ்க்டாப், சிறு வணிக மற்றும் மெயின்ஃபிரேம் கம்பியூட்டர்கள் மற்றும் ஆரம்பகால PC களின் ஒருங்கிணைப்பு

DG; HP9825A; IBM5110; IBM S/34; IBM4331; ICL1501; ICL1503; ICL2903; ரேடியோ ஷேக்; வாங் (WANG)2200; வாங் (WANG) PCS

சகாப்தம்-7 1981 இலிருந்து:

Era-7 1981 onwards – IBM கெம்பாற்றிபிள் PC கள், விசேடமாக 1982 ஆம் ஆண்டின் பின்னர் உலகளாவிய ரீதியில் சார்லி சாப்ளின் உடனான IBM PC.

விளம்பர பிரச்சாரம்; IBM S/36; IBM AS/400; IBM4361; IBM4381; NIXDORF; UNISYS

எனவே, 1964 முதல் 1967 வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே ஒரு கணினி காணப்பட்டதாகவும், 1967 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மேலதிகமாக மூன்று ICL கணினிகள் காணப்பட்டதாகவும் திரு.பெர்னான்டோ நினைவு கூர்கின்றார். 1969 முதல் 1970 வரையான காலப்பகுதியில் மேலும் நான்கு IBM கணினி முறைமைகள் நிறுவப்பட்டதன் விளைவாக 1970 ஆம் ஆண்டு மொத்தமாக 08 கணினிகள் இலங்கையில் நிறுவப்பட்டிருந்தது.

1970 முதல் 1977 வரையான காலப்பகுதியில் அந்நியச் செலாவணி குறைவாக வழங்கப்பட்டதனால் இலங்கையில் கணனி இறக்குமதி மந்தமாகக் காணப்பட்டது என அவர் கூறுகின்றார். பல்கலைக்கழகங்களுக்கென இரண்டு கணினிகள் மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை இலங்கையில் கணினி தலைமுறை இழப்பு என இவர் கருதுகின்றார்.

ஆரம்பகால கணினிகளின் பயன்பாடுகள் (கணினி ஆப்ளிகேசன்ஸ்):

 • 7 M சனத்தொகை மதிப்பீடு; 2,2M வீட்டுப் பாவனைகள்
 • 0M ஊழிர்களின் தேசிய சேமலாப நிதி
 • 350K பரீட்சாத்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள்
 • 300K வாரண்ட்ஸ் – வாரண்ட் பில்லிங்
 • 200K காப்புறுதியாளர்களின் காப்புறுதிகள்
 • 175K வாடிக்கையாளர்களின் மின் கட்டணப் பட்டியல்கள்
 • 35K சந்தாதாரர்களின் தொலைபேசிக் கட்டணப்பட்டியல்கள்
 • SEC இல் 20K பொருட்களின்38 MRs/ CWE 50K Items Rs.154 MRs பங்கு கட்டுப்பாடு
 • 12K ஊழியர்களின் சம்பளப்பட்டியல்
 • 600 கணக்குகள்/3 BRs பட்ஜெட் கட்டுப்பாடு
 • PERT SEC செயற்திட்டங்கள்
 • பொறியியல் வடிவமைப்பு
 • பொறியியல் கற்கைகள்
 • ஏற்றுமதி அல்லது இறக்குமதி அறிக்கைகள்
 • சேவை மைய செயற்பாடுகள்

கணினிகள் மற்றும் GDP

ஒரு நாட்டினது GDP வளர்ச்சி மற்றும் கணினி ஊடுருவலுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளதாக திரு.பெர்னான்டோ அவர்கள் விளக்குகின்றார். 1977 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதார முறைமையினை ஆரம்பித்ததுடன், கணினி உட்பட மூலதன உபகரணங்களை வாங்குவதற்கு நியாயமான சுங்கவரி அறவிடுவதற்காக ஒரு வரிவிலக்கு காணப்பட்டது, அதனால் செயற்திறனையும் விளைவுகளையும் மெருகூட்டுவதற்கு இலங்கையில் தனியார் துறையிடமிருந்து கணினிகளை வாங்குவதற்கு மற்றும் குத்தகைக்கு எடுப்பதற்கு ஒரு குழப்பநிலை காணப்பட்டது.  1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கணினிகளின் எண்ணிக்கை வார்க்கஸ் இன் இரு ஆரம்ப கணினிகள்மற்றும் CSL இன் துணைநிறுவனத்தின் ஒன்றுடன் 33 ஆக உயர்ந்தது.

தேயிலை ஏற்றுமதிச் செயல்முறை

திரு.பெர்னான்டோ அவர்கள் ஸ்தாபக பொது முகாமையாளராக இருந்தபோது DMS ஆனது அமெரிக்காவின் வாங் மினி கம்பியூட்டர்களின் விற்பனை முகவராக இருந்தது, மேலும் தேயிலையானது பாரிய ஏற்றுமதி வருவாயைத் தந்த 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தேயிலை ஏலவிற்பனை தொடர்பான தரவுகளை செயல்முறைப்படுத்துவதற்காக, ஜாபர்ஜீ பிரதர்ஸ் விமிடெட் இல் முதல் கணினியாக ஒரு வாங் 2200 T கணினி நிறுவப்பட்டது. பின்னர் இவ் முக்கிய ஏற்றுமதித் துறையின் வினைத்திறனை மெருகூட்டுவதற்காக திரு.ருவான் ரட்னதுங்க மற்றும் குழுவினர் ஏனைய தேயிலை ஏற்றுமதி பிரிவுகளுடன் சேர்ந்து மேலும் பல வாங் கணினிகளை நிறுவினர்.

பொருளாதாரத்தில் கணினிகள் மற்றைய முக்கிய பிரிவாக இருந்தது.

மஹாவலி அபிவிருத்தி திட்டம்

ஆறு திசைதிருப்புத் திட்டம். 37 BRs [2.3 BUSD]. 30 வருடங்கள் அசல் நேர மதிப்பீடு 5 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும்.

125,000 ha பாசன நிலம்; 1M மக்களை குடியமர்த்துதல். 400 MW வலு உற்பத்தி.

 • மகாவலி அதிகாரசபையில் நில அளவைக் கணிப்புகளுக்காக நில அளவைத் திணைக்களத்தினால் ICL 2903 கணினிகள் பயன்படுத்தப்பட்டன; வடிவமைப்பு; ERIM ரிமோட் சென்சிங் தொகுப்பு
 • மகாவலி அதிகாரசபையின் பிரதான நிபுணர்களாக இருந்த CECB இனரால் வடிவமைப்பு கணிப்புகளை மேற்கொள்ள வாங் 220T கணினி பயன்படுத்தப்பட்டது.
 • FORTRAN மொழியுடனான IBM 4331 மெயின்பிறேம் கணினி: CIDA அங்கீகாரம் பெற்றிருந்தது. நீர்த்தேக்க தேர்வுமுறைக்காக FORTRAN புரோகிராம்ஸ் இயங்கியது.
 • ஜே.வி பால்பர் பீட்டி ஒப்பந்ததாரர் இனால் IBM S/34 பயன்படுத்தப்பட்டது – விக்டோரியா அணைப் பகுதியில் உள்ள Nuttal இல் இரட்டை வளைவு அணையின் வெவ்வேறு இடங்களில் நிகழ்நேரத்தில் கான்கிரீட் தேவைகளை கணக்கிடல்.

வர்த்தகத்தில் கணினி

வர்த்தக நிறுவனங்களின் ஆரம்பகால கணினி நுகர்வுகள்:

Chemanex [CIC/ICI] IBM S/34 கணக்கியல்;

டி சில்வா, அபவர்த்தன மற்றும் பீரிஸ் Peiris ICL 1501 தேயிலை இடைத்தரகு;

ஃபிறீ லங்கா வர்த்தகக் கம்பனி IBM S/34 கணக்கியல்;

Hebtulabhoy WANG 2200 T தேயிலை ஏலவிற்பனை;

ஜெய் கேய் கணினிகள் IBM S/34 ஜோன் கீல்ஸ் இன் தேயிலை இடைத்தரகு மற்றும் கணக்கியல்;

KG இன்டஸ்ரீஸ் IBM 5110 கணக்கியல், APL நிரலாக்க மொழி (புரோகிராமிங் மொழிகள்);

லீவர் பிரதர்ஸ் யூனிலீவர் IBM S/34 கணக்கியல்;

பியோர் வெவரேஜஸ்IBM S/34 கணக்கியல்;

சிறீ கிருஸ்ணா கூட்டுத்தாபனம் IBM S/34 கணக்கியல்;

சென் அந்தோனிஸ் இன்டஸ்ரீஸ் IBM S/34 கணக்கியல்;

ஸ்ரபோட் மோட்டர்ஸ் – கொன்டா வாங் PCS II வாடிக்கையாளர் ஓடர் கண்காணிப்பு;

ஏனைய ஆரம்ப பயனாளிகள்

ஏனைய ஆரம்ப கணினிகளில் நுகர்வுகள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றது:

குடும்ப சுகாதார மையம் – ICL 1503

வைத்திய பீடம், கொழும்பு பல்கலைக்கழகம் – ICL 1503

டர்குவாண்ட், யங் & கோ உடன் இணைந்த MSL கம்பியூட்டர்ஸ் விமிடெட்  பின்னர் எர்ன்ஸ்ட் யங்] – IBM S/34 சேவைகள் மையம்

இலங்கை போக்குவரத்துச் சபை 6000 பஸ்களை செயற்படுத்துகின்றது, IBM S/34 ஆனது 60K ஊழியர்களின் சேமலாப நிதியினை கையாள்கிறது; சரக்குக் கட்டுப்பாடு 26 MRs நகராத பொருட்கள் 20 MRs. 2000 ஊழியர்களின் சம்பளப்பட்டியல்

கணினிமயமாக்கலில் பின்னைய முயற்சிகள்

வங்கியியல் துறையில் கணினிமயமாக்கம்

1980 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வங்கிப்பிரிவு கணினிமயமாக்க வரலாற்றினைக் கொண்டிருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் நினைவு கூர்கின்றார்; மக்கள் வங்கியானது கடன் செயல்முறைகளுக்காக சிறிய வணிக கணினிகளை கொண்டிருந்தது; இலங்கை வங்கியானது தமது பெருநகர கிளையில் NRFC கணக்குகளை மேற்கொள்வதற்காக  IBMS/34 இனை ஆரம்பித்தது. அது ஆரம்பத்தில் மூன்று வங்கிக் கிளைகளை கணினிமயமாக்கும் பொருட்டு முழு வங்கி நடவடிக்கைகளுக்கும் IBM 4331 மெயின்பிறேம் கணினிகளை கொள்வனவு செய்தது. ரெல்கோ நிறுவனத்திலிருந்து குத்தகைக்கு விடப்பட்ட எந்தவொரு தொலைபேசி இணைப்புகளும் இருக்கவில்லை, BOC மற்றும் ஏனைய வாடிக்கையாளர்கள், பல தொழினுட்பத்திறன்களைக் கொண்டிருந்த பேராதனை பல்கலைக்கழக பொறியிலாளராகவும் “எலக்ரோரெக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.வி.ஏ.சி.அபயவர்த்தன அவர்களின் உதவியுடன் சொந்த தனியார் ரேடியோ இணைப்புக்களை உருவாக்கினர். பின்னர், BOC ஆனது இந்த வசதிகளை பத்து கிளைகளுக்கு விரிவாக்கம் செய்தது.

வங்கிப்பிரிவில் ஆரம்ப கணினிமயமாக்கத்திற்கு திரு.ஜானக்க டி சில்வா மற்றும் கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க ஆகியோர் பொறுப்பானவர்களாக உள்ளடக்கப்பட்டிருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் நினைவு கூர்கின்றார், இது BOC இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சம்பத் வங்கியிலும் ஆரம்பிக்கப்பட்டது. சம்பத் வங்கியானது அதன் பொது முகாமையாளர்களான திரு.ஜானக்க டி சில்வா மற்றும் கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க ஆகியோரை DGM தரவு செயல்முறைக்கு பொறுப்பாக நியமித்திருந்தது இச்செயற்பாடு அவ்வங்கிக்கு உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாகஅமைந்தது – சம்பத் வங்கியின் தத்துவமாக “ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியினது வாடிக்கையாளராக இருக்கிறார்,  ஒரு கிளையினது அல்ல” என இருந்தது. ஆகவே ஒரு வாடிக்கையாளர் சம்பத் வங்கியினது எந்தவொரு கிளைக்கும் செல்லமுடியும் அத்துடன் வணிகப்பரிமாற்றம் செய்யமுடியும் என வங்கி நம்பியது. ஆரம்பத்தில் சம்பத் வங்கியானது தனியார் ரேடியோ இணைப்புகளுக்கூடாக ஏனைய கிளைகளை இணைத்து ஒரு IBM S/36 கணினியினை நிறுவியது, பின்னர் IBM 4381 மெயின்பிறேம் கணினி, பாதுகாப்பான முழு வங்கி நடவடிக்கைகளுக்கு ஆப்ளிகேசன் பிறேம்வேக் மற்றும் VSE இயங்குதளத்தினையும் கொண்டு தரமுயர்த்தப்பட்டது.  வங்கிக் கிளைகளை இணைப்பதற்காக IBM மொடம் களுடன் தனியார் ரேடியோ இணைப்புக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் இணைப்பின் வேகம் 1200bps மற்றும் பின்னர் 2400bps, 4800bps ஆகத் தரமுயர்த்தப்பட்டதுடன் இறுதியாக 9600bps, வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்தமையால்இணைப்புகளின் டேட்டா டிராஃபிக் இன் கொள்ளளவும் மிக அதிகமானது. கலாநிதி ஆர்.வி.ஏக்கனாயக்க அவர்களின் கீழ் ஒரு பெரிய IT நிபுணர்கள் குழுவினால் அனைத்து ஆப்ளிகேசன் புரோகிராமிங் செயற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிளை இணைப்புகளின் ஊடாக ATM இயந்திரங்களும் நிறுவப்பட்டன. சம்பத் வங்கியானது வங்கிப்பிரிவு கணினிமயமாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தது, அத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட வங்கிகளின் செலவில் அதிகப்படியான சந்தைப் பங்குகளை மிக விரைவில் பெற்றுக் கொண்டது. இது போட்டித்திறன் நன்மைக்காக கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருந்தது. இதனை அவதானித்த ஏனைய  வங்கிகளும் தமது வங்கி நடவடிக்கைகளை உடனடியாக கணினிமயமாக்க ஆரம்பித்தன. ஆரம்பத்தில் கணினிமயமாக்கப்பட்ட வங்கிகளாக இலங்கை வங்கி [IBM, Nixdorf & Unisys], கொமர்ஸியல் வங்கி [IBM], மக்கள் வங்கி [IBM & Burroughs] மற்றும் ஹட்டன் நேஸனல் வங்கி (NCR & IBM] ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.

எயார் லங்கா /சிறீலங்கன் எயார்லைன்ஸ்

சிறிய வணிக கணினியான IBM சிஸ்டம்/34 ஒன்று சிறீலங்கன் எயார்லைன்ஸில் நிறுவப்பட்டது, பின்னர் அது எயார் லங்கா என அழைக்கப்பட்டது. எயார்லைன்ஸ் கட்டுநாயக்காவிற்கு இடமாற்றப்பட்டதன் பின்னர், IBM 4361 மெயின்பிறேம் கணினி மற்றும் VM/VSE இயங்குதளத்துடன் நிறுவப்பட்டு, லேண்டிங் கியர் மற்றும் கியர் பாக்ஸ் மற்றும் என்ஜின்கள் போன்ற தொடர் வரிசைப்படுத்தப்பட்ட பாகங்கள் சுழற்றக்கூடிய கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு முறைமைகள் போன்ற அதிகமான செயற்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டன. அத்துடன் தரம் மற்றும் பாதுகாப்பு ஆவணங்கள் பராமரிப்பு ஆகியன PROFS ஊடாக இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் நடவடிக்கைகள் அனைத்தும் திரு.ஏ.அத்தநாயக்க அவர்களால் முன்னெடுக்கப்பட்டன.

துறைமுக அதிகாரசபை

இலங்கை துறைமுக அதிகார சபையில் வணிக நடவடிக்கைகளை கணினிமயமாக்குவதற்காக அங்கு சிரேஸ்ர பொறியியலாளராகவும் சிரேஸ்ர கணக்காளராகவும் இருந்த திரு.பிரசன்ன வீரசிங்கவின் கீழ்

ஒரு IBM மெயின்பிறேம் IBM 4361 கணினி பயன்படுத்தப்பட்டது. இது துறைமுகத்தின் முழு கொள்கலன்களையும் கையாளும்  செயல்பாடுகளையும் நிகழ்நேர தரவை அனுப்பும் உணரிகளுடன் (சென்சர்) தன்னியக்கப்படுத்துவதற்காக ஒரு IBM RS6000 யுனிக்ஸ் கணினியைக்கொண்டு தரமுயர்த்தப்பட்டது. அந்நேரத்தில் தெற்காசியாவிலேயே அனைத்துச் செயற்பாடுகளையும் உயர் கணினி பயன்பாட்டினூடாக மேற்கொண்ட ஒரு துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் காணப்பட்டது.

கணினிக் கல்வி

ஆரம்பத்தில், கணினி கல்வி தொடர்பாக, ஒரு நிறுவனம் கணினியை கொள்வனவு செய்யும்போது, அது ஊழியர்கள் கணினியை செயற்படுத்துவதற்கு மற்றும் நிரலாக்கத்தின் மூலம் ஆப்ளிகேசன்களை நிறுவுவதற்குநம் ஒரு கணினி சேவையாளராக காணப்பட்டது. எனவே,  ஆரம்ப காலங்களில், பிரதானமாக அறிவினது பரிமாற்றம் இச் சேவையாளர்களினூடாக வழங்கப்பட்டது.

பின்னர் இக் கணினியியல் பயிற்சிகள் வணிக முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனத்தில் (NIBM) திரு.என்.டபிள்யூ.என்.ஜெயசிறி அவர்களின் தலைமையில் ஒரு வாங் 2200 VS கணினியைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் வழங்கப்பட்டது. இது மிகவும் அங்கீகரிக்கப்பட்டதாகக் காணப்பட்டதுடன், சிங்கப்பூரில் பணியாற்ற வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஒரு தகுதியாக சிங்கப்பூர் குடிவரவு பிரிவு இதனை உள்ளடக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொதுமக்களுக்கு FORTRAN மொழிப் பயிற்சியை கொழும்பு பல்கலைக்கழகம் மேற்கொண்டது. DP உதவியாளர்களுடன் BCS தனியார் துறையில் மூன்று கணினி பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கணினி பயிற்சிகளை வழங்கியது திரு.பத்மநாதன் மற்றும் அவரைப் பின்பற்றியவர்கள் IBM S/34 குளோபல் கணினிகள் மற்றும் திரு.பண்டு ரணசிங்க அவர்களின் கீழ் IBM/ACS கணினிகளுடன் IDM நிறுவனமும் காணப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடங்கள் கணினி பொறியியல் பட்டங்களை வழங்கின; முழுமையாக தகவல் தொழினுட்பத்தில் பட்டங்களை வழங்குவதற்காக இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனம் (SLIIT) ஸ்தாபிக்கப்பட்டது.

கணினி மொழிகள்

PLAN/Assembler ஆனது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட நிரலாக்க மொழியாக (புரோகிராமிங் லாங்விச்) இருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார். பின்னர் RPG ஆனது IBM சிறு வணிகக் கணினிகள் மற்றும் IBM மெயின்பிறேம்களிலும் பயன்படுத்தப்பட்டது. மேலும் COBOL மொழியும் பயன்படுத்தப்பட்டது, பல்கலைக்கழகங்களில் FORTRAN மொழி பயன்படுத்தப்பட்டது. BASIC மொழியானது WYSIWYG [நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அது நீங்கள் பெற்றது] எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது.

கணினி விற்பனையாளர்கள்

ICL, WANG-DMS மற்றும் IBM தவிர்ந்த ஏனைய கணினி விற்பனையாளர்களிடம் திரு.பெர்னான்டோ அவர்கள் பணியாற்றியது இலங்கையில் கணினியியலில் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. NCR ஆனது HNB இன் முழு வங்கி நடவடிக்கைகளுக்கு, HSBC மற்றும் கொமர்ஷல் வங்கிகளின் ATM களை செயற்படுத்துவதற்கும் தேவையான தரவு செயல்படுத்தும் சாதனங்களை வழங்கியது; Bartleets ஆனது ஆரம்பத்தில் ரேடியோ ஷேக் பின்னர் யுனிசிஸ் உடனான நிறுவல்களை இலங்கை ரெலிகோம் இல் மேற்கொண்டது; HP உடன் மெற்ரோபொலிற்றன் மற்றும்  கனொன் டெஸ்ட்ரொப் கணினிகள்; தூரநோக்குடனான தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜெர்மனியிலிருந்து Nixdorf கணினிகள் இன்போமெற்றிக்ஸ் நிறுவனத்திற்கு பெறப்பட்டது.

கணினியுடன் தொடர்புடைய ஏனையவர்கள்

இலங்கையில் கணினிகளின் வருகையின் உள்ளடக்கமானது Burroughs கணினிகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு மற்றும் ஏற்றுமதிக்காக தாய்ப்பலகைகளை தொகுத்த A-Z கணினிகள் நிறுவனத்தினையும் [கலாநிதி மாயா சிற்றம்பலம் ரெயின்போரட் மற்றும் திரு. ரெயின்போரட் உடன்] உள்ளடக்கியிருந்தது; ஜெகத் ரொபோட்டிக்ஸ் ஆனது திரு.ஜெகத் ரணவக்க விற்குச் சொந்தமாகவிருந்தது; கொம்பியூட்டர்லிங் நிறுவனமானது திரு. ரெஜி காண்டப்பாவின் [விளம்பர முகவர்கள்] மருமகனான திரு.ஸாருக் மரிக்கார் அவர்களினால் நடாத்தப்பட்டது அத்துடன், இலங்கையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் வடிவமைக்கும் நிறுவனமான EDS இன்ரனேஸ்னல்ஸ் இற்கு திரு.மொகான் விஜயகோன் அவர்கள் தலைமை வகித்தார், இலங்கையர்களின் தகவல் தொழினுட்பத் திறன்களைப் பயன்படுத்தி தென்கிழக்காசியாவின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக திரு.ஜோன் சல்மான் மற்றும் திரு.கார்லிலி எட்வேர்ட்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வங்கிகள் போன்ற பெரிய நிறுவனங்களின் கிளைகளை இணைப்பதற்கு அர்ப்பணிப்புடனான தொலைபேசி இணைப்புக்கள் எதுவும் காணப்படவில்லை, ஆனால் திரு.வி.ஏ.சி.அபயவர்த்தன அவர்களின் எல்ரோரெக்ஸ் லிமிடெட் இனால் IBM மொடம்களின் இணைப்புகளின் மூலம் தனியார் ரேடியோ இணைப்புக்கள் வழங்கப்பட்டன. கணினிகளை முறையாக shut-down செய்வதற்கு, எல்லாக் கணினி நிறுவல்களை மேற்கொள்வதற்காக மின்னழுத்த நிலைப்படுத்திகள் மற்றும் தடையில்லாத பவர் சப்ளை (UPS) முறைமைகள் வழங்கப்பட்டிருந்ததுடன் சில முக்கிய பயன்பாடுகள் ஜெனரேட்டர் பேக்கப்பையும் கொண்டிருந்தது.

கணினியியலில் நிபுணத்துவம்

கணினி நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இலங்கை கணினிச் சமூகம் (CSSL) உருவாக்கப்பட்டதனை ஒரு முக்கியமான தருணமாக பதிவிட விரும்புவதாக இவர் கூறுகின்றார். திரு.ஜோன்.என்.எல்சி.பெரேரா போன்ற பொறியிலாளர்கள், விஞ்ஞானப் பட்டதாரிகள் மற்றும் கணக்கியல் பிரிவில் துறை தேர்ந்தவர்கள் இணைந்து கணினி நிறுவுதல்கள் மற்றும் கணினி விற்பனையாளர்கள் போன்ற வேலைகளுக்கு முழுமையான குழுக்களை உருவாக்கினர். கணினி தொடர்பான தொழில்களில் இருந்த கலாநிதி ஆர்.வி.ஏக்கநாயக்க [SEC], திரு.நாணயக்கார [பரீட்சைகள் திணைக்களம்], திரு.விதானகே [சனத்தொகை மதிப்பீட்டுத் திணைக்களம்], திரு.ஏ.அத்தநாயக்க [சனத்தொகை மதிப்பீட்டுத் திணைக்களம்/ சிறீலங்கன் எயார்லைன்ஸ்], நயேனி பெர்னான்டோ அம்மணியார் [சனத்தொகை மதிப்பீட்டுத் திணைக்களம்/ மத்திய வங்கி], பெரேரா அம்மணியார் [சனத்தொகை மதிப்பீட்டுத் திணைக்களம்/ AMS], திரு. யாஸா கருணாரெத்ன [பெற்றோலியம் கூட்டுத்தாபனம்/ETFB], திரு.பண்டு ரணசிங்க [பெற்றோலியம் கூட்டுத்தாபனம்/ IDM], திரு.ரஞ்சன் பெரேரா [SEC/BOC/SLPA], திரு. ருவான் ரணதுங்க [AMS/DMS], திரு.கனிஸ்க சுகததாச [ANCL/மகாவலி அதிகாரசபை], கலாநிதி என்.டபிள்யூ.என்.ஜெயசிறி [NIBM] ஆகியோர் ஒன்றாக இணைந்து CSSL இனை உருவாக்கினர்.

CSSL ஆனது பலதரப்பட்ட கைத்தொழில் துறைகளிலிருந்து பங்கேற்ற கணினி நிபுணர்களின் பங்களிப்புடன் வருடாந்த தேசிய கணினி மாநாட்டினை முன்னெடுத்தது; அத்துடன் கணினி விற்பனையாளர்களின் அனுசரணையுடன் வருடாந்த கணினி கண்காட்சியினை நடத்தியது. இது கணினியின் எதிர்காலம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மேலோட்டமான அறிவினை வழங்கியது. பின்னர் CSSL ஆனது பாடசாலை மாணவர்களுக்கான கணினி மென்பொருள் போட்டியினை முன்னெடுத்தது.

இலங்கை மாணவர்களுக்கு தரமான கணினிக் கல்வி கிடைத்தமையினால் அவுஸ்ரேலியாவின் கணினிச் சமூகத்தினால் நடாத்தப்படும் பரீட்சையினை இலங்கையில் நடத்துவதற்கு திரு.பெர்னான்டோ அவர்கள் அழைப்பு விடுத்தார். இவர் கணினி பயிற்சி நிறுவனங்களை அனுமதிப்பதற்கான ACS பிரதிநிதிகள் குழுவின் கீழ் ஆய்வு செய்யப்பட்டார். பின்னர் இலங்கையில் இவ் வேலையை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாகவிருந்தார்.

CINTEC

இலங்கையில் கணினிகள் மற்றும் IT இல் அதியுயர் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்திற்கு மையப்புள்ளியாகவும் தொழிற்படுவதற்காகவும் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கணினி மற்றும் தகவல் தொழினுட்பப் பேரவை (CINTEC) ஆனது பின்னர் தகவல் தொழினுட்பப் பேரவையென பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் அவருக்கு முதல் தலைவராகவிருந்த பேராசிரியர் மொகான் முனசிங்க அவர்களிடமிருந்து CINTEC தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் மற்றைய பங்குதாரர்களுடன் சேர்ந்து பல கணினி பிரிவுகளுக்கான சங்கங்களை ஸ்தாபித்தனர். திரு.பெர்னான்டோ அவர்கள் இலங்கை கணினி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் (SLCVA), திரு.ஜித் வர்ணகுலசூர்ய அவர்கள் துணைத் தலைவராகவும் IBM சார்பாக பிரதிநிதித்துவப்படுத்தினர். SLCVA ஆனது மாதாந்தம் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை மதிய நேர இடைவெளிகளில்  5  நட்சத்திர ஹோட்டல்களில் நடாத்தியது

கடந்தகால சவால்கள்எதிர்கால வாய்ப்புக்கள்

ICT பிரிவில் ஆரம்பகால முயற்சிகள் மற்றும் மிகப்பெரிய சவால்கள் மற்றும் எவ்வளவு இடையூறுகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது என தற்போதய ICT கைத்தொழிலில் உள்ளவர்களுக்கு தெரியாது என்று திரு. பெர்னாண்டோ கருதுகிறார். இலங்கையர்களின் உயர் எழுத்தறிவு வீதம், புதிய தொழினுட்பத்தினை உள்வாங்கும் திறன் மற்றும் ஆற்றலுடையவர்களாக இருப்பது ஆகியவற்றின் காரணமாக பல சவால்களை இலகுவாக கடக்க முடிந்தது.

பாரிய தரவு மற்றும் பகுத்தறிவு (big data and analytics) ஆனது அடுத்த கட்டம் என அவர் கூறினார். இது சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கக்கூடிய மிகப்பாரிய பரந்த தரவுகளிலிருந்து நுண்ணறிவு உருவாக்கப்படக்கூடிய வழி உள்ளதாகவும் அதன் மூலம் அரசாங்கம், தனியார் துறை மற்றும் வர்த்தகத்துறையினர் தீர்மானங்களை மேற்கொள்ளவும், கொள்கைகள் உருவாக்கவும் முடியும் என அவர் கருதுகின்றார். இன்று மக்களுக்கு அவர்களது சாதாரண மற்றும் வழக்கமான வேலைகளைச் செய்ய கடினமாக உள்ளது, எனவே ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு முக்கியம் என அவர் கூறுகின்றார். கடந்த காலத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வளாகத்தில் ஒரு கணினி வைத்திருந்தபோது திறமையான IT நிபுணர்களுடன் காணப்பட்டது ஆனால் எதிர்காலமானது கணினியியலை ஒரு க்ளவுட் சேவையாகவும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சலைக் கொண்டும், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் நிபுணத்துவம் வாய்ந்த டொமைன் அறிவுடன் கூடிய நிபுணர்கள் அல்லது ஆலோசகர்கள் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும். சாதாரண பயணத்தின் போது போக்குவரத்து நெருக்கம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கும், பிள்ளைகள்வயது வந்த பெற்றோர்களைப் பார்த்து கொள்ளும் போது உருவாகும் அசௌகரிகம் போலல்லாமல், இணையம் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும்;வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள  மெய்நிகர் வகுப்புகள் பயன்படும்; எங்கள் கிராமப்புற சமுதாயத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஆலோசகர்களால் தொலைதூர மருத்துவ கண்டறிதல்கள் பயன்படுத்தப்படும். இவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய மற்றும் பயன்படுத்தப்படவேண்டிய சில பகுதிகளாகும். ICT ஆனது இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கு உறுதியளிக்கிறது அத்துடன் திரு.ஜோன் என்.எல்.சி. பெர்னாண்டோ அவர்களை அவர்களின் தினசரி வாழ்வில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதற்கான சான்றுகள்:

 1. முதுமானி ஆய்வு இலக்கம்: CA-80-6 “இலங்கையில் கணினி பயன்பாடுகளுக்கான வளங்கள் பற்றிய ஓர் ஆய்வு”, ஜோன்.என்.எல்.சி.பெர்னான்டோ, கணினி பயன்பாடுகள் பிரிவு, ஆசியா தொழினுட்ப நிறுவனம் (AIT), பாங்கோக், தாய்லாந்து, ஆகஸ்ட்
 2. பதிப்பிடப்படாத கைப்பிரதிகள் இலங்கையில் கணினியியல்”, ஜோன்.என்.எல்.சி.பெர்னான்டோ, 1980.

 

ஜோன்.என்.எல்.சி.பெர்னான்டோ,

IBM QCC

Dip Law London; BSc Eng Cey; MEng AIT

FSIArb, FCS, MACS, CEng, MIE.

 

பதிப்புரிமை ஜோன்.என்.எல்.சி.பெர்னான்டோ, vJF1.1

Gallery