திரு.அபய அமரதாச

திரு.அபய அமரதாச அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார், அத்துடன் அசோசியேற்றட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் (ANCL) இன் பொது முகாமையாளரும் ஆவார். இவர் பாடசாலையில் கல்வி பயிலும் போது அச்சிடக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனைப் பின்புலமாகக் கொண்டு ANCL இல் வேலைக்கு விண்ணப்பித்தார். இவர்

ANCL இல் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். திரு.அமரதாச கிறபிக் ஆட் மற்றும் பிரின்ரிங் தொழினுட்பத்தில் தொழிலைப் பெற்றுக் கொண்டார். இவர் கவரிங் ஓஃப் செற் லிதோகிராப் அச்சிடும் தொழினுட்பம், அச்சிடுவதற்காக வடிவமைத்தல், செலவு மற்றும் மதிப்பீடு மற்றும் கிராஃபிக் ரெப்ரோ போட்டோகிராபி ஆகிய மூன்றாம் நிலைக் கற்கை நெறிகளில் முதல் தரத்தில் தங்க விருதுகளைப் பெற்றார். இவர் அச்சிடல் தொழினுட்பத்திற்கான உயர் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்வு மற்றும் வெள்ளி விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரு. அமரதாசவின் பதவிக்காலத்தில், தமிழ் மற்றும் சிங்கள மொழியில் செய்தித்தாள்களை வரிசைப்படுத்துகின்ற ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பர அமைப்பினை ANCL அறிமுகப்படுத்தியது.  இது இலங்கையில் செய்தித்தாள்களை வரிசைப்படுத்துவதற்காக ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பர அமைப்பு முறைமையை அறிமுகப்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும்.

ANCL செய்தித்தாள்கள் 1995 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 04 ஆம் திகதி லங்கா இணையத்தளத்தின் மூலம் டெய்லி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகியவற்றினை ஆன்லைனில் முதன்முதலில் பிரசுரித்தது. இது தெற்காசியாவில் செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரிசுரித்த முதல் சந்தர்ப்பமாகும். இதன் பின்னர் ANCL ஆனது தொடர்ச்சியாக செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரசுரித்தது. சிங்கள யுனிகோட் எழுத்துருவான தினமின ANCL இனால் உருவாக்கப்பட்டதுடன் அது ICTA மூலம் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு.அபய அமரதாச அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார், அத்துடன் “லேக்ஹவுஸ்” என இலங்கை முழுவதும் அறியப்பட்ட அசோசியேற்றட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் (ANCL) இன் பொது முகாமையாளரும் ஆவார். ANCL ஆனது 1926 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையின் மிகப்பழைய வெளியீட்டு நிறுவனம் ஆகும். திரு. அமரதாசவிற்கு பாடசாலை காலத்திலேயே அச்சிடுவதில் ஆர்வம் இருந்தது. இவர் பெரிய நிறுவனங்களில் அச்சிடும் இந்திரங்களைக் காணும்போது அவற்றில் அதிக ஆர்வத்தினை வளர்த்துக் கொள்வதுடன், அதில் பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றினை அச்சிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பார். இவற்றின் மூலம் அச்சிடும் தொழில்துறைக்குள் நுழைவதற்கு தீர்மானித்தார். இவர் பாடசாலையில் கல்வி பயிலும் போது அச்சிடக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்ததால் அதனைப் பின்பலமாகக் கொண்டு ANCL இல் வேலைக்கு விண்ணப்பித்தார். இவர் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ANCL இல் இணைந்தார். இந்தக் காலத்தில் ANCL ஆனது கிறபிக் ரெப்ரோ போட்டோகிராபியினை அறிமுகப்படுத்தியது. வெளிநாட்டிற்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட பயிலுனர்களில் முதல் குழாமில் திரு. அமரதாச உள்ளடக்கப்பட்டிருந்தார். இவர் கவரிங் ஓஃப் செற் லிதோகிராப் அச்சிடும் தொழினுட்பம், அச்சிடுவதற்காக வடிவமைத்தல், செலவு மற்றும் மதிப்பீடு மற்றும் கிராஃபிக் ரெப்ரோ போட்டோகிராபி ஆகிய மூன்றாம் நிலைக் கற்கை நெறிகளில் முதல் தரத்தில் தங்க விருதுகளைப் பெற்றார். இவர் அச்சிடல் தொழினுட்பத்திற்கான உயர் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்வு மற்றும் வெள்ளி விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மேலும், அச்சிடும் தொழினுட்பத்திற்கான உயர் டிப்ளோமா கற்கை நெறியில் டிஜிட்டல் ரெப்போகிராபிக்ஸ் இனை கற்பிக்க வருகைதரு விரிவுரையாளராக சேவையாற்றினார்.

இதற்கு மேலதிகமாக, வணிக முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனத்தில் வணிக நிர்வாகத்துறையில் டிப்ளோமா சான்றிதழை சிறப்புத் தகுதியுடன் பெற்றார், அத்துடன் கிறபிக் ஆட்ஸ் தொழினுட்ப முகாமைத்துவம், பொது முகாமைத்துவம் மற்றும் பெருநிறுவன திட்டமிடல் ஆகியவற்றில் பிராந்திய முகாமைத்துவ செயலமர்வுகளையும் பின்பற்றியுள்ளார். இவர் ஜெர்மனி டஸில்டோவ் இல் நடைபெறும் டெக்னோ அப்டேற் அமர்வுகளமற்றும்  அச்சிடல் தொடர்பான 08 மாநாடுகளில்  ANCL இனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1986 ஆம் ஆண்டிலிருந்து பங்கேற்று வருகின்றார். இவர் மேலும், இங்கிலாந்து பேர்மிங்காம் இல் நடைபெறும் அச்சிடல் கென்வென்சன்ஸ் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் அச்சிடல் தொடர்பான ஆறு மாநாடுகளில் ANCL இனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1988 ஆம் ஆண்டிலிருந்து பங்கேற்று வருகின்றார்.

இவரது பதவிக்காலத்தில் ANCL ஆனது அமிகஸ் அச்சுக்கோப்பு, தமிழ் மற்றும் சிங்கள செய்தித்தாள்களுக்கான வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமையினையும் அறிமுகப்படுத்தியது. அந்நேரத்தில் இந்த வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமையில் மட்டுமே வரிசைப்படுத்துவது சாத்தியமாகவிருந்தது. இந்த முறைமையின் முன்னெடுப்பின் காரணமாக பயனாளிகள் தமது தேடல்களின் விளைவுகளை அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டவாறு பெற முடிந்தது. சிங்கள செய்தித்தாள்களிலும் கூட அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டு வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை பெறமுடிந்தது. பின்னர் ANCL ஆனது JRL இலிருந்து உள்நாட்டில் தொகுக்கப்பட்ட கணினிகளை கொள்வனவு செய்து அறிமுகப்படுத்தியது.

1995 ஆம் ஆண்டில் ANCL பத்திரிகைகள் தொடர்பாக புதுமையான கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி திரு.அமரதாச அவர்கள் ஞாபகமூட்டிகின்றார். ANCL செய்தித்தாள்கள் 1995 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 04 ஆம் திகதி லங்கா இணையத்தின் மூலம் டெய்லி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகியவற்றினை ஆன்லைனில் முதன்முதலில் பிரசுரித்தது. இது லங்கா இணையச் சேவைகள் மூலம் பின்னாளில் ANCL இன் தலைவராகவிருந்த திரு. லக்ஸ்மன் ஜெயவர்த்தன அவர்களிடம் முன்மொழியப்பட்டதற்கிணங்க டெய்லி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகியவற்றினை ஆன்லைனில் வெளியிடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தெற்காசியாவில் செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரிசுரித்த முதல் சந்தர்ப்பமாகும். இதன் பின்னர் ANCL ஆனது பல புதிய பயன்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் இடைவெளியின்றி செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரசுரித்தது.

லோக்கல் ஏரியா நெட்வேர்க்கில் சிங்கள உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் எழுத்தாக்கப் பணிகளை பூர்த்தி செய்வது ஆகியன அதற்கான தேவையை உறுதிப்படுத்தியது. ஆங்கில உள்ளடக்கத்திற்கு இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதை முன்னெடுக்க, ஒரு நிலையான சிங்கள விசைப்பலகை தேவையும்  அமிகஸ் அமைப்பிலிருந்து திறந்த அமைப்புகளை நோக்கி நகர்ந்து செல்வதற்கான தேவையும் எழுந்தது. இச்சமயத்தில், திரு.அனுரா திஸ்ஸராவினால் ANCL மூலம் தகவல் தொழினுட்பப் பேரவையில் மற்றும் CINTEC இன் அடுத்த அமைப்பான இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப நிறுவனத்திலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ICT யைப் பயன்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உள்ளூர் மொழிக் கற்கைகளுக்கான முன்னெடுப்புக்கள்CINTEC இன் தலைவரான பேராசிரியர் வி.கே.சமரநாயக்க மற்றும் பின்னர் ICTA இல் பேராசிரியர் ஜிகான் டயஸ் ஆகியோரால் வழங்கப்பட்டதாக திரு.அமரதாச நினைவு கூர்ந்தார்.

கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி, மொறட்டுவை பல்கலைக்கழகம், இலங்கை தரநியமங்கள் நிறுவனம் ஆகியன ஏனையபங்குதாரர்களாக இருந்தன. ANCL, சிங்கள யூனிகோட் எழுத்துருவான தினமின இனை உருவாக்கியது பின்னர் அதனை ICTA விடம் ஒப்படைத்தது. ICTA ஆனது இதனைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்திற்கான இலங்கை தரநியம சிங்கள எழுத்து குறியீடுகளுக்கான முன்னெடுப்பின் வடிவமைப்பினை, SLSI இனால் தரநிர்ணயப்படுத்தி SLS 1134: 2004 இன் மூலம் நடைமுறைப்படுத்தியது. ANCL யின் சிங்கள பத்திரிகையான தினமின வில் தினமின எழுத்துரு பயன்படுத்தப்பட்டு பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தினமின செய்தித்தாள் முதன்முதலில் 1914 ஆம் ஆண்டில் திரு. பெரேராவால் வெளியிடப்பட்டதுடன் 1918 ஆம் ஆண்டில் ANCL இன் நிறுவனர்களால் கொள்வனவு செய்யப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் சிங்கள ஆசிரிய வேலைத்திட்டமானதுசெய்தியாளர்களிடமிருந்து உள்ளூர் கதைகள், பத்திரிகைகள் மற்றும் செய்திகளால்  அறிமுகப்படுத்தப்பட்டதுடன், செய்தி நிறுவனங்களான AFP (Agence France-Presse), ராய்ட்டர்ஸ், AP (அசோசியேட்டட் பிரஸ்) மற்றும் பி.டி.ஐ (பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா) போன்ற செய்தி முகவர்களின் சேவைகளினூடாக மாகாண நிருபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், செய்தி உதவி ஆசிரியர்கள், செய்தித் தொகுப்பாளர்கள், மற்றும் இறுதித் தொகுப்பிற்காக பிரதான தொகுப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதன் பின்னர் அந்தப் பக்கங்கள் நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு பின்னர், கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் ஊடாக இந்தக் கட்டத்தில் இருந்து தட்டுக்கு (பிளேட்டிற்கு) நேராக அனுப்பப்பட்டது.  இதனால் மூன்று படிமுறைகளைக் கொண்ட அச்சிடும் செயன்முறையானது கணினியிலிருந்து நேரடியாக பிளேட்டிற்கு அனுப்பும் ஒரு செயல்முறையாக குறைக்கப்பட்டது.

இப் பணிமுறைக்கு மேலதிகமாக, ஒரு சொத்து மேலாண்மை முறைமையுடன் ஒரு காப்பீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு புகைப்படமும், , ஒவ்வொரு கேலிச்சித்திரமும், ஒவ்வொரு படமும், ஒவ்வொரு செய்தி உருப்படியும் ஒவ்வொரு பக்கமும் தானாகவே சொத்து மேலாண்மை முறைமையினுள் இணைக்கப்பட்டது. இதன் விளைவாக எதிர்காலத்தில், ஏதாவதொரு உருப்படியை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவசியமான அனைத்தையும் தேட வேண்டும் அத்துடன் அவை ஆசிரியர் பணியாளர்களின் முனையங்களிலிருந்து மீளப்பெற முடியும்.

இந்தச் செயன்முறையானது உற்பத்திப் பிரிவில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறுகின்றது. விளம்பரப் பிரிவு மற்றும் நிதிப்பிரிவிற்கு ஒரு தனியான ERP முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விளம்பரப்படுத்தும் ERP முறைமையானது தொகுப்பாளர் பணிப்பிரிவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் நிர்வாகத்தினால் மீளாய்வு செய்வதற்கு தகவல்களை வழங்கும் தேவையின் போது உள்ளிணைக்கப்படும்.