மொழி தொழினுட்பம்

திரு. புஸ்பானந்த ஏக்கநாயக்க

திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க சிங்கள கையெழுத்துப் படிவங்களின் எழுத்துக்களை வடிவமைத்து வருகிறார். அவர் சிறுவயதில் இருந்தே வெவ்வேறு வடிவங்களில் இதனை மேற்கொண்டு வருகிறார். திரு. ஏக்கநாயக்க வடிவமைத்த முதல் சிங்கள எழுத்துரு மாலிதி ஆகும். திரு. ஏக்கநாயக்க, 1998 ஆம் ஆண்டில் 10 எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டார், ஆனால் அவை உரை தட்டச்சு எழுத்துருக்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அப்போது உரை எழுத்துருவுக்கான தேவை காணப்பட்டது. அதன் விளைவாக, திரு. ஏக்கநாயக்க மிகவும் பிரபலமான சிங்கள ஆஸ்கி(ASCII) எழுத்துரு எஃப்.எம் அபயா இனை வடிவமைத்தார். அதன்பிறகு, வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மாதிரிகளி...
Read More

திரு. ரோஹன் மனமுதலி

திரு. ரோஹன் மனமுதலி, சயின்ஸ் லேண்ட் கோர்ப்பரேஷன் (பிறைவேட்) லிமிடெட்டினை, திரு. சம்பத் கோடமுன்னே உடன் இணைந்து, 1994 ஆம் ஆண்டில் நிறுவினார். இது உள்ளூர் மொழிக்கான கணினிச் செயற்பாட்டில் மட்டுமே, தம்மை அர்ப்பணித்த ஒரு நிறுவனமாகும். திரு. மனமுதலி மற்றும் திரு. சம்பத் கோடமுன்னே ஆகியோர் மும்மொழியிலான சொற்செயலி “திபஸ்”இனை உருவாக்குவதில் இணை-மேம்பாட்டாளர்களாக இருந்தனர். இது இலங்கையில் உள்ளூர் மொழிக்கான கணினிச் செயன்முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்திராததால் பலர் கணினிகளைப் பயன்படுத்தத் தயங்கிய காலம் அது. இலங்கையில் மக்கள் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு பெரிய தடை...
Read More

திரு.பாலச்சந்திரன் ஞானசேகரையர்

திரு. பாலச்சந்திரன் ஞானசேகரையர் ICT அரங்கில், உள்ளூர் மொழிகளில் முக்கிய மேம்பாடுகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஓர் ஆலோசகராக, 2006 ஆம் ஆண்டில் தரநிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு தமிழ் விசைப்பலகைத் தளவமைப்பில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் தமிழ் ICT தரநிலையின் வரைவினை உருவாக்குவதில் பணியாற்றினார். அது தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் ’கீயிங்-இன்’ தொடர்வரிசைகளை உள்ளடக்கியதுடன், யுனிகோட் தரத்துடன் இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கான குறியாக்கம் மற்றும் தமிழிற்கான ஓர் அடுக்கு வரிசை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இலங்கை தரநிர்ணய நிறுவனத்த...
Read More

திரு. எஸ். சண்முகராஜா (ஷான்)

திரு. எஸ். சண்முகராஜா (ஷான்) மென்பொருள் துறையில் கடந்த 19 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மற்றும் ஓர் அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணராக இருக்கின்றார். அவர் மொபைல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர், அதில் அவர் கடந்த பத்து வருடங்களாக கவனம் செலுத்தியுள்ளார். அண்ட்ராய்டு, iOS, .NET, ஜாவா மற்றும் மிடில்வேர் ஆகியவற்றில் திறன்களைக் கொண்ட தொலைத் தொடர்பு மென்பொருள் மேம்பாட்டில் அவர் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இவர் இந்தியாவின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் இளமானிப் பொறியியல் பட்டம் பெற்றவர். அவர் தற்போது எம்.பிரைன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலை...
Read More

தினீசா எதிரிவீர அம்மணியார்

தினீசா எதிரிவீர அம்மணியார் அவர்கள் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். இவர் இலங்கை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவில் B.Sc. மற்றும் M.Sc பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஒரு கூட்டு உறுப்பினராக இருக்கின்றார் அத்துடன் இலங்கை கம்பியூட்டர் சொசைற்றியின் (CSSL) ஒரு கூட்டு உறுப்பினராகவும் இருக்கின்றார். எதிரிவீர அம்மணியார் ANCL இல் பணியாற்றும் போது, ANCL இற்காக வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மற்றும் டிஜிட்டல் விளம்பர முறைமைக்கான...
Read More

திரு.எஸ்.ரி. நந்தசாரா

திரு.எஸ்.ரி.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார் அத்துடன் UCSC இல் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார். திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு, ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். மேலும் இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் “புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணி...
Read More

திரு. ஹர்ஷா விஜயவர்தன

திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக இருக்கின்றார் அத்துடன் இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் (IoT) இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அத்துடன் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் UCSC இன் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவின் (SDU) உருவாக்கத்திலும் ஈடுபாடு காட்டினார். அவர் மற்றும் அவரது குழுவினர் SDU இல் இலங்கை அரசாங்கத்திற்கான மென...
Read More

கலாநிதி ருவான் வீரசிங்க

கலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினை இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். இவர் அரசதுறை நிறுவனங்களுக்காக சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் செயலாக்க ஆய்வுகளை ஆரம்பித்தார். இலங்கைக்கு இணையத்தினை அறிமுகப்படுத்துவதில் உந்துசக்தியாகச் செயற்பட்டு முன்னோடியாக இருந்தவர்களில் கலாநிதி ருவன...
Read More