தொழில்துறை

திரு. நிரஞ்சன் டி சில்வா

திரு. நிரஞ்சன் டி சில்வா அவர்கள் மெற்றோபொலிட்டன் கணினிகள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். திரு. நிரஞ்சன் டி சில்வா தனது முதல் பட்டப்படிப்பினை மின்னணுப் பொறியியல் துறையில் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுகலை முகாமை நிறுவனத்திலிருந்து (PIM) ஒரு MBA பட்டத்தினைப் பெற்றார். நிரஞ்சன் மெற்றோபொலிட்டன் குழுவில் 1981 ஆம் ஆண்டு ஒரு பொறியியலாளராக இணைந்தார். நிரஞ்சன் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, வங்கி உபகரணங்களில் ஏகபோக விநியோகஸ்தராக மெட்ரோபொலிட்டன் காணப்பட்டது. உதாரணமாக லெட்ஜர் அட்டைகள் மற்றும் அச்சுப்பொறிகள் ஆகியவற்றைக் கூறல...
Read More

திரு.லால் சந்திரநாத்

திரு. லால் சந்திரநாத் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் DMS சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் இன் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இன் ஸ்தாபகக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், ஜூன் 2017 வரை அதன் பணிப்பாளராகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டில் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஸ்தாபகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அங்கு அவர் ஜூன் 2017 வரை பணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டில், DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளராக திரு. சந்திரநாத் நியமிக்கப்பட்டார், மேலும் Oracle கோர்...
Read More

திரு.சந்தன வீரசிங்க

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் DMS எலக்ரோனிக்ஸ் (பிறைவெற்) லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் நாலந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சந்தன அவர்கள் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, கணினித் தொகுதிகளின் மீதான தனது முதல் ஆர்வத்தினை வெளிக்காட்டினார். அதிலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவில் முதல்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றார். இவர் பட்டப்படிப்பின் பின்னர் தரவு நிர்வாக அமைப்புகள் (DMS) நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக 1984 இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய...
Read More

திரு.யாஸா ருணாரெத்ன

திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Honors) பட்டத்தினைப் பெற்றார் அத்துடன் அங்கு பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளில் இரு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கையில் முதன் முதலில் கணினி நிறுவப்பட்ட அரச சேவை நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார், அத்துடன் அங்குதான் அவர் கணினி செய்முறையில் தனது தொழிலை தொடங்கினார். திரு.கருணாரெத்ன அவர்கள் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் 1970 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டுத் திட்...
Read More

திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி

திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளராக இருக்கிறார், பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் உறுப்பினர் மற்றும் IBM இல் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராக 1979 ஆம் ஆண்டு இணைந்தார் அத்துடன் கணக்கியல் மற்றும் பாதீடுகளில் பங்கேற்றுள்ளார், மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் பின்னர் சந்தைப்படுத்தல் பிரிவில் இணைந்ததுடன் அதனைத் தொடர்ந்து இலங்கை IBM இல் நாட்டு முகாமையாளரானார்.       (மேலும்…)
Read More

திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ

திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ கொழும்பு கொட்டஹேனவில் உள்ள சென்.பெனடிக்ட் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார், அத்துடன் இலங்கை பேராதனை சிலோன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பல்கலைக்கழக படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் 1967 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் மாணவனாகப் பயிலும் போது அனெலொக் கணினியைப் பயன்படுத்தி ஒரு அசைன்மெண்ட் இனை செய்யும் போது அவருக்கு கணினியில்  ஆர்வம் உண்டானது. இவர் 1979/80 காலப்பகுதியில் பெல்ஜியம் அரசாங்கத்தின் புலமைப்பரிசிலினூடாக தாய்லாந்து நாட்டின் ஆசியன் தொழினுட்ப நிறுவனத்தில் கணினியின் பயன்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் எனும் பிரிவில் ...
Read More

திரு.அபய அமரதாச

திரு.அபய அமரதாச அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார், அத்துடன் அசோசியேற்றட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் (ANCL) இன் பொது முகாமையாளரும் ஆவார். இவர் பாடசாலையில் கல்வி பயிலும் போது அச்சிடக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனைப் பின்புலமாகக் கொண்டு ANCL இல் வேலைக்கு விண்ணப்பித்தார். இவர் ANCL இல் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். திரு.அமரதாச கிறபிக் ஆட் மற்றும் பிரின்ரிங் தொழினுட்பத்தில் தொழிலைப் பெற்றுக் கொண்டார். இவர் கவரிங் ஓஃப் செற் லிதோகிராப் அச்சிடும் தொழினுட்பம், அச்சிடுவதற்காக வடிவமைத்தல், செலவு மற்றும் மதிப்பீடு மற்றும் கிராஃபிக் ரெப்ரோ போட்டோகிராபி ஆகிய ...
Read More

திரு.ஜெகத் ரணவக்க

திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் இளமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் தனது சொந்தக் கம்பனியான ஜெகத் ரொபாட்டிக்ஸ் பிறைவெற் லிமிட்டெட்டினை 1985 ஆம் ஆண்டு ஸ்தாபித்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், கணினி வன்பொருள் விற்பனை, உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியன உள்ளடங்கலாக நிறுவன முகாமைத்துவத்தில் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார். இவர் மேம்படுத்தல், பரீட்சித்தல், நடைமுறைப்படுத்தல், ஆவணப்படுத்தல், தேவைகளை இனங்காணல், பகுப்பாய்வு &a...
Read More