கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி

கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைகளின் போக்குகளை கண்காணிப்பதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் கணனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. வன்பொருள், இரும்புக் கூட்டுத்தாபனம், மட்பாண்டங்கள், காகிதம், டயர், எண்ணெய் வகைகள், கொழுப்புகள் மற்றும் தாது மணல் கூட்டுத்தாபனம் போன்ற இருபது பொதுக் கூட்டுத்தாபனங்கள் இவ்அமைச்சின் கீழ் காணப்பட்டன, அத்துடன் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மாதமொருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கணினி முறைமையானது தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனத்தில் (NIBM) நிறுவப்பட்டிருந்ததுடன் கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் மாதாந்த உற்பத்திகள் மற்றும் விற்பனைகள் தொடர்பான தரவுகள் அதில் சேமிக்கப்பட்டன. அதற்கு UNDP மற்றும் ILO ஆகிய நிறுவனங்களினால் நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கனடாவின் பில் ஸ்மித் ஆலோசகராக இருந்தார். இத் தேவைக்காக வாங்க் மினிகணினி ஒன்று டேட்டா மனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இற்கூடாக 1978 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. அந்த காலத்தில் நாட்டினுள் பாவிக்கப்பட்ட அதிகப்படியான நினைவகமாகிய 256 KB நினைவகம் ஆக காணப்பட்டதுடன் 10 MB வன்தட்டு நினைவகம் அதாவது 5 MB நிலையானதாகவும் 5 MB 2-அடி விட்டமுடைய நீக்கக்கூடிய பிளேட்ஸ் மற்றும் 8″ விட்டமுடைய டிஸ்கெட் டிரைவ், 05 ஐந்து ஊடாடும் முனையங்கள் மற்றும் நிலத்தில் வைக்கக்கூடிய மெற்றிக்ஸ் பிரிண்டர் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாட்டில் மற்ற கணினி நிறுவல்களில் பஞ்ச்காட்ஸ் இருக்கவில்லை.

கணினியானது இன்ரறக்ரிவ் புரோகிராமிங் மற்றும் பிழைதிருத்தும் வசதிகளைக் கொண்டிருந்தது, COBOL மற்றும் RPG கணினி மொழிகள், ஆன்லைன் கோப்பு வரையறை வசதிகள், தரவு உள்ளீடு, முறையீடு மற்றும் அச்சிடல், பயனர் கணக்குகள் வசதிகளைக் கொண்டிருந்தது. அது மேலும் சொல் செயலாக்க (வேட் புரோசசிங்) மென்பொருளினைக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் அந்நேரத்தில் புதுமையானவை. தனிப்பட்ட கணினி வருகைக்கு முன்பே இது நன்றாக இருந்தது. அந்நேரத்தில் மூன்று கணினி விநியோகஸ்தர்கள் காணப்பட்டனர். IBM, UK யினது ICL, மற்றும் DMS இவையுட்பட 11 கணினிகள் நாட்டினுள் காணப்பட்டன.

ஆலோசகர் கலாநிதி ஸ்மித் அவர்கள் தரவு கட்டமைப்புகள் மற்றும் நெறிமுறைகள் (டேட்டா ஸ்ரக்ஸஸ் அன்ட் அல்கோரிதம்ஸ்) பிரிவில் நிபுணராக இருந்தார். அத்துடன் கூட்டுறவுத் தரவுகள் உள்ளீட்டிற்கான நிரல்கள் (புரோகிராம்), ஆன்லைன் தரவு விசாரணை மற்றும் வெளியீட்டு அறிக்கைகளை அச்சிடுதல் ஆகியவற்றினை வடிவமைத்திருந்தார். கூட்டுத்தாபனங்களில் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தரவு முகாமைத்துவ முறைமைகளில் உள்ள சிரேஸ்ட நிபுணர்களால் சிஸ்டம் அனேலிஸிஸ், COBOL மற்றும் RPG மொழிகளில் நிரலாக்கம், கணினி முறைமையைச் செயற்படுத்துதல் மற்றும் அதன் வசதிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிரலாக்க வடிவமைப்பு மற்றும் பரீட்சிக்கும் செயற்பாடுகளை ஆலோசகர் அவர்கள் நெறிப்படுத்தினார்.

கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சித் திட்டம் பின்னர் பொதுமக்களுக்காகவும் வழங்கப்பட்டதன் மூலம் விரிவாக்கப்பட்டது அத்துடன் பயிற்சியை பூர்த்தி செய்தோருக்கு கணினி முறைமை வடிவமைப்பு எனும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்டது. அக் கற்கைநெறி ஆலோசகரால் வடிவமைக்கப்பட்டது, அது பகுதிகளாய் பிரிக்கப்பட்டு ஒரு பாடம் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு கற்பிக்கப்பட்டது, அதன் பின் மற்றைய பாடம் என தொடரப்பட்டது அதனால் ஒரு பயிற்சியாளர் அப்பாடத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி பகுதியின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆர்வத்துடன் கற்கக் கூடியதாயிருந்தது.

பாடசாலை மற்றும் ஏனைய நிறுவனங்களில் இல்லாதவாறு கற்கை நெறிகள் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை கற்றனர், மேலும் ஒரு மணி நேரம் என ஒரு “பாட இடைவெளி” பிரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக மக்கள் ஒரு கட்டிடத்தினைக் கட்டும் போது அல்லது பயிரிடும் போது, ஒரு புரோக்கிராமை வடிவமைக்கும் போது அல்லது ஏனைய வேலைகளின் போதோ ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு வேலையைச் செய்கின்றனர் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக செய்வதில்லை என கலாநிதி ஸ்மித் அவர்கள் இதனை விளக்கினார். உயர்மட்ட திறமை மற்றும் அறிவினை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பாடத்திலும் சித்தியடைய 66% புள்ளிகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு 02 இல் உள்ள கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கும், கொழும்பு கோட்டையிலுள்ள திறைசேரியின் பொதுத்துறைப் பிரிவினருக்கும் தரவுகளை வழங்குவதற்கான வசதிகளை வழங்கவேண்டியது அவசியமாக இருந்தது. அத்துடன் கொழும்பு 07 இல் உள்ள NIBMஇலிருந்து தரவு தொடர்பாடல் தொடர்பான இணைப்புகள் அவ்விரு நிறுவனங்களுக்கும் தேவையென தொலைத் தொடர்புத் திணைக்களத்திலிருந்து கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. அந்நேரத்தில் தொலைத் தொடர்புத் திணைக்களமானது தரவு தொடர்பாடலில் சிறப்புற இயங்கவில்லை. தொலைபேசி இணைப்புகளில் கூட சிறிது கசிவு இருந்தது. கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இரு 4800kbps இணைப்புக்கள் பாரிய முன்னெடுப்புகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன, இருந்தபோதும் தரவு பரிமாற்ற பிழைகளின் விகிதங்கள் உயர்வாக இருந்ததால் முறைமையின் பதிலானதுமிகக்குறைவாகக் காணப்பட்டது. அவை இந்நாட்டினது முதல் தரவுத் தொடர்பாடல் இணைப்பாகக் காணப்பட்டது.

இப்பயிற்சியானது முக்கியமாகத் தேவையென ஆலோசகர் அவர்கள் இனங்கண்டு கொண்டார் அத்துடன் அதன் வெற்றியானது முறைமையினைப் பயன்படுத்தும் ஊழியர்களில் தங்கியிருந்தது. அவரது முயற்சியின் மூலம் அமைச்சினது செயற்பாட்டு அதிகாரிகள், பொதுத்துறைப் பிரிவு மற்றும் கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் ஆகியன கணினி முறைமை மற்றும் தரவு வங்கிகளைப் பயன்படுத்துவதற்கு NIBMஇல் பயிற்சியளிக்கப்பட்டனர்.

கலாநிதி ஸ்மித் அவர்கள் அக்காலப்பகுதியில் சற்றும் செயற்பாடற்றுக் காணப்பட்ட இலங்கை கணினிச் சமூகத்துடன் (CSSL) சேர்ந்து “தேசிய கணினி மாநாடு” ஒன்றினை ஒழுங்கமைத்தார். அதில் கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், பொதுத்துறைப் பிரிவு, கைத்தொழில் அமைச்சு, இலங்கை கணினிச் சமூகத்தின் அங்கத்தவர்கள், நாட்டிலுள்ள முக்கிய கணினி பயனாளிகள் மற்றும் DMS, IBM மற்றும் ICL ஆகியவற்றின் விநியோகஸ்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் (பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சொசைட்டி) தலைவர் சிறப்புரையை ஆற்றியிருந்தார்.

தேசிய கணினி மாநாடு ஆனது NIBMஇல் தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் நடைபெற்றதுடன் பின்னர் இலங்கை கணினிச் சமூகத்தினால் (CSSL) பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது INFOTELஇல் வருடாவருடம் நடைபெறுகின்றது.

என்.டபிள்யூ.என். ஜெயசிறி