திரு.எஸ்.ரி. நந்தசாரா

திரு.எஸ்.ரி.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார் அத்துடன் UCSC இல் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார். திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு, ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். மேலும் இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் “புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம்” இல் ஒரு கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளை நிறைவேற்றுவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக தேர்தல் ஆணையாளருக்கு உதவியது திரு. நந்தசாராவின் தொழில் வாழ்க்கையின் முக்கிய மைல்கல் ஆகும். “1982 ம் ஆண்டு தேசிய வாக்கெடுப்பு முடிவுகள் கணினி ரீதியிலான நேரடி ஒளிபரப்பு” மற்றும் “இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கான கணினி ரீதியிலான நேரடி ஒளிபரப்பு” ஆகியவற்றினை முதன் முதலில் செயலாக்கி வழங்குவதில் திரு.நந்தசாரா முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

திரு.நந்தசாரா உள்ளூர் மொழி கணினியியல் அரங்கில் சிறந்த பங்களிப்பினைக் கொண்டிருக்கின்றார்; இவர் மூம்மொழியிலான சொல் செயலாக்கி ‘வாசன் தாரவ (වදන් තරුව) யினை வடிவமைத்தார் மற்றும் 1994 ஆம் ஆண்டின் பின்பகுதியில் வென்ச்சுரா வெளியீட்டாளருக்காக மும்மொழியிலும் இணக்கமான டைப்செட்டிங் மென்பொருள் ‘அத்வாலா’ (අත්වැල) யினை வடிவமைத்தார். ICT யில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னைய உயர் கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC), கணினி தொழினுட்பத்தில் சிங்களம் மற்றும் தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டின் தரநிலைகளைப் பரிந்துரை செய்கின்ற பணிக்குழுவினது ஒரு உறுப்பினராக இவர் இருந்தார். 1997 ல் கிரீஸிலுள்ள க்ரீட்டில் நடைபெற்ற யுனிகோட் கன்சார்டியத்தின் முக்கியமான கூட்டத்தில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு பிரதிநிதியாக இவர் இருந்தார். அந்தக் கூட்டத்தில், கடுமையான விவாதங்களுக்குப் பின்னர், சிங்கள குறியீட்டுக்கான முன்மொழிவு சில சிறிய திருத்தங்களுடன் இலங்கை பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

மேலும் பேராசிரியர் வி.கே.சமரநாயக்கவின் நிறுவன அபிவிருத்தியில் திரு. நந்தசாரா உதவினார்; இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி தொழினுட்ப நிறுவனத்தினை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். இதன் பொருட்டு, 1988 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு அவர் உதவினார். மேலும் இவர் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தினை அமைப்பதில் ஈடுபட்டுள்ளார், அதில் அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியினை (UCSC) உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார், இது விஞ்ஞான பீடம் மற்றும் கணினி தொழினுட்ப நிறுவனத்தின் கீழ் கணினி விஞ்ஞான துறையினை உள்ளடக்கியிருந்தது. கணினியியலில் 50 வருட பூர்த்தியினை UCSC 2017 ஆம் ஆண்டு கொண்டாடியது அதில் பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

திரு.எஸ்.ரி.நந்தசாரா அவர்கள் ஒரு விரிவுரையாளராகவும் அத்துடன் கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியின் (UCSC) உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார்.

கல்வி:
திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு 1975 ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் புள்ளிவிபரவியலில் விசேட பட்டத்தினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டார், இக் கற்கைநெறி விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறையினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. பட்டமளிப்பின் பின் பட்டதாரிகள் தகவல் தொழினுட்ப தொழில்துறையில் உடனடியாக வேலைவாய்ப்பினை பெறக்கூடியவாறு இக் கற்கைநெறியானது வடிவமைக்கப்பட்டிருந்தது. இவர் முதலாம் ஆண்டில் பயிலும் போது இவருக்கு பேராசிரியர் வி.கே.சமரனாயக்க புள்ளிவிபரவியல் மற்றும் கணினி நிரலாக்க பாடநெறிகளில் விரிவுரையாளராக இருந்தார். இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் புலத்தில் பல ஆய்வுகள் நடத்த வேண்டும், தரவுகளை சேகரித்து புள்ளிவிவர பகுப்பாய்வு செய்ய வேண்டும். அந்தக் காலகட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் எந்தவித கணினி வசதிகளும் இருக்கவில்லை. ஆனால் நான்காம் வருட மாணவர்களுக்கு ஆய்வுகளுக்காக ஒரு கணினி தேவைப்பட்டது. ஆகவே, குடிசனமதிப்பீடு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்திலிருந்த IBM கணினியை தரவு செயலாக்கத்திற்காக மாணவர்கள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

கணினியியலில் அறிமுகம்:
கணிதத்துறையில் ஒரு சிறிய பஞ்ச் காட் மெஸின் காணப்பட்டது அத்துடன் தரவு மற்றும் கணினி நிரல்களை பஞ்ச் காட்டின் மீது மாணவர்கள் படிப்படியாக உள்ளீடு செய்தனர். அதன்பின்னர், பஞ்ச் அட்டைகள் (காட்ஸ்) குடிசனமதிப்பீடு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு திரு.நந்தசாரா அவர்கள் கணினியியலை தொடங்கினார். எனினும், அக் கற்கைநெறியில் அவருக்கு FORTRAN நிரலாக்கத்தினை கற்க வாய்ப்புக் கிடைத்தது.

1978 ஆம் ஆண்டு, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு FORTRAN 1V கம்பைலருடனான (compiler) ஒரு HP கணினியைப் பெற்றுக் கொண்டது. அதனால் திரு.நந்தசாரா அவர்கள் FORTRAN கணினி நிரல்களை அதில் தட்டச்சு செய்ய முடிந்தது அத்துடன் அங்கு காணப்பட்ட தேமல் பிரிண்டரில் அவற்றினை அச்சிடவும் முடிந்தது. அந்தக் கணினி ஒரு ஒற்றை-வரி காட்சித்திரையினை மட்டும் கெண்டிருந்தது. கலாநிதி கெவின் செனவிரத்தன அவர்கள் திரு.நந்தசேரவிற்கு பயிற்றுனராக இருந்தார், அவர் திரு.நந்தசாராவிற்கு கணினியின் பயன்பாடுகளைப் பயிற்றுவித்தார். திரு. நந்தசாரா இறுதி ஆண்டில் கற்றபோது, பல்வேறு சமூகங்களின் வீட்டுவசதி நிலைமைகள் பற்றிய ஆய்வொன்றினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அது நிறைய தரவுகளை உள்ளடக்கியிருந்ததனால், அவர் தினமும் கணினியைப் பாவிக்க வேண்டியேற்பட்டது.

திரு.நந்தசாரா அவர்கள் 1979 ஆம் ஆண்டு தனது இளநிலைக் கற்கைநெறியினைப் பூர்த்தி செய்தார் அத்துடன் வேலை தேடிக்கொண்டிருந்தார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சென்று, அங்கு ஒரு WHO திட்டத்தில் ஈடுபட்டிருந்த, பார்மகாலஜி (மருந்தியல்) பேராசிரியர் என்.டி.டபிள்யு லியனலைச் சந்திக்கும்படி பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக, திரு. நந்தசாரா மருந்தியல் திணைக்களத்தில் மிகவும் சுவாரசியமான ஓரு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொழும்பில் உள்ள பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளின் பரிந்துரைகளிலிருந்து தரவுகளை ஆய்வு செய்வதே பேராசிரியர் லியனலின் நோக்கமாக இருந்தது, இது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய மருந்துகளின் எண்ணிக்கையை குறிக்கும். அதனால் நிறையத் தரவுகளைச் செயற்படுத்தவேண்டியிருந்ததனால், திரு. நந்தசாராவிற்கு ஒரு கணினி தேவைப்பட்டது. விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை கொழும்புத் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பெற்ற ஒரு மானியத்தின் மூலம் 1981 இல் ஒரு டேரா ஜெனரல் நோவா/4 மினிகம்பியூட்டரினை பெற்றது அதுவரை இவர் பன்ஞ் காட் மெஸினையே பயன்படுத்தியிருந்தார். இவ் பல்-பயனர் கணினியானது 16 டேர்மினல்ஸ் உடன் ஒரு கோபோல் (COBOL) கெம்பைலர், ஒரு போற்றான் பைல் (FORTRAN) கெம்பைலர் மற்றும் ஒரு RPG II கெம்பைலர் ஆகியவற்றினைக் கொண்டிருந்தது. ஆகவே திரு.நந்தசாரா இந்த கணினியை செயலாக்கத்திற்காகப் பயன்படுத்தினார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பேராசிரியர் லியோனெல் காலமானார், திரு. நந்தசாரா முதலில் ஆராய்ச்சி உதவியாளராகவும், பின்னர் ஒரு புள்ளிவிபரவியல் அலுவலராகவும் பேராசிரியர் சமரநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரவியல் பிரிவினது தரவுப் பொது கணினியைக் கையாளும் முக்கிய நபராக இருந்தார். பின்னர், கலைப்பீடத்தில் புள்ளிவிவரவியல் மற்றும் கணினி நிரலாக்கம் ஆகிய விரிவுரைகளை சிங்கள மொழியில் நடத்துமாறு பேராசிரியர் சமரநாயக்க இவரை கேட்டுக் கொண்டார்.

அந்த நேரத்தில் மல்டிமீடியா ப்ரொஜக்டர் எதுவும் காணப்படவில்லை என திரு.நந்தசாரா நினைவு கூர்கின்றார் அத்துடன் அவர் வெளிப்படையான தாள்களில் உருவாக்கப்பட்ட ஸ்லைடுகளுடன் மேல்நிலை ப்ரொஜெக்டர்களைப் பயன்படுத்தினார்.

கணினிகளின் மூலம் தேசிய தேர்தல் முடிவுகளை செயலாக்குதல்:
1982 ஆம் ஆண்டு முக்கியமான இலக்கு ஒன்று அடையப்பட்டது. தேர்தல் முடிவுகளை செயலாக்க கணினிகளைப் பயன்படுத்தலாமென பேராசிரியர் வி.கே.சமரனாயக்க யோசனையை முன்வைத்தார், விசேடமாக 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை செயலாக்குவதற்கு விரும்பினார். 1982 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஜர் ஸ்டெர்ன், 32 K நினைவகம், வன்தட்டு இல்லாத மற்றும் நெகிழ் வட்டுகளைப் பயன்படுத்திய, ஆனால் வண்ண திறன்களைக் கொண்ட ஒரு BBC கணினியுடன் இலங்கைக்கு வந்தார். இந்தக் கணினியைப் பயன்படுத்தி ரூபவாகினி தொலைக்காட்சி ஊடாக தேர்தல் முடிவுகளை காட்சிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை செயலாக்குவதற்கு இந்தக் கணினியைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையாளருக்கு உதவியது. திரு. நந்தசாரா மற்றும் கணிதத்துறையின் பணியாளர்கள், முடிவுகளை ஒளிபரப்பு செய்வதற்காக முடிவுத் திரையினை வடிவமைத்து நிரலாக்கம் செய்யும் பொறுப்புகளை வகித்தனர்.

இதனால், முதல் ” கணினி-உதவியுடனான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நேரடி ஒளிபரப்பு ” மற்றும் ” கணினி-உதவியுடனான 1982 ஆம் ஆண்டு தேசிய வாக்கெடுப்பு முடிவுகளின் நேரடி ஒளிபரப்பையும்” வழங்குவதில் திரு. நந்தசாரா முக்கிய பங்களிப்பை கொண்டிருந்தார். தேர்தல் முடிவுகள் தேசிய தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகளை செயலாக்குவதில் கணிப்பொறிகளைப் பயன்படுத்த முடியும் என்பதுடன் மற்றும் முடிவுகளை கிராஃபிக் டிஸ்ப்ளேக்களாக ஒளிபரப்பு செய்யலாமெனவும் நாடு அறிந்திருந்தது.

உள்நாட்டு மொழி கணினியியல்:
இந்தக் கணினியில் ஆங்கில எழுத்துக்களை மட்டுமே கையாள முடியும். சிங்கள எழுத்துக்களை வடிவமைப்பதன் மூலம் இந்த கணினியினைப் பன்படுத்துவது குறித்து கலாநிதி கெவின் செனவிரட்ன யோசனையை முன்வைத்தார். இதனால் ஊழியர்கள் சிங்கள எழுத்துக்களின் தொகுதி ஒன்றினை உருவாக்கினர் அத்துடன் ஐ.ரி.என் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல் சிங்களத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் டேட்டா ஜெனரல் கார்ப்பரேஷனில் சிஸ்ரம் என்ஜினியர் வேலையினை திரு.நந்தசாராபெற்றார். இதனைப்பற்றி பேராசிரியர் சமரனாயக்க அவர்களிடம் கலந்துரையாடியபோது அவர் திரு.நந்தசாராவினை இலங்கைக்கு திரும்ப வருமாறு ஆலோசனை வழங்கினார். பேராசிரியர் சமரனாயக்கவின் ஆலோசனைக்கு மதிப்பளித்த திரு.நந்தசாரா தான் அந்த நியமனத்தினை எடுத்துக் கொள்ளவில்லை என அவரது முதலாளிக்கு தெரிவித்திருந்தார். அதன்பின்னர் திரு.நந்தசாரா தனது உயர்கல்விக்காக ஜக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டார். இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். இது அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகும். அந்நேரத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானக் கற்கைநெறி கற்பிக்கப்படவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார். அந்நேரத்தில் IBM தனிநபர் கணினிகளான IBM PC XT மற்றும் IBM PC AT ஆகியவற்றினை வெளியிட்டிருந்தது. பேராசிரியர் சமரனாயக்கவின் அறிவுறுத்தல்களுக்கமைய சிங்களத்தில் ICT யினை வடிவமைக்கும் பணிகளை திரு.நந்தசாராஆரம்பித்தார், விசேடமாக IBM PC களின் அடிப்படை உள்ளீட்டு/வெளியீட்டு முறைமையினை (BIOS) மீள் கணினி நிரலாக்கம் செய்தார். காட்சித்திரையினை ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவது அவரது விருப்பமாக இருந்தது. தாய்லாந்தில் தாம்மாசட் பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி தவேகக் கோணங்காகுல் ICT யினை தாய் (Thai) மொழியில் பயன்படுத்துவதற்கான வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தார். சிங்கள மொழி தொடர்பில் இதேபோன்ற அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான நோக்கத்துடன் தாம்மாசட் பல்கலைக்கழகத்தில் ICT மற்றும் உள்ளூர் மொழிகளின் அபிவிருத்தி பற்றி திரு. நந்தசாரா படித்தார். ஒரு டெஸ்க்டாப் IBM PC XT இல் தாய் மொழி எப்படி பயன்படுத்தப்படுகின்றது என இவர் கற்றார், பின் இலங்கைக்குத் திரும்பினார் அத்துடன் வடிவமைப்பினை ஆரம்பித்தார். IBM PC XT சிங்களத்திற்கு போதுமான ரிசோலுஸனினைக் கொண்டிருக்காதது ஒரு பிரச்சினையாக இருந்தது. IBM மிக உயர் ரிசோலுஸனுடனான வீடியோ கிராபிக்ஸ் அரே காட் VGA யினை வெளியிட்டது. அதன்பின்னர் சிங்கள எழுத்துக்களை பூரணமாகக் காட்சிப்படுத்துவது சாத்தியமானது. இவர் தாம்மாசட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட்டார் (இலங்கையை அடிப்படையாகக் கொண்டு) அத்துடன் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டினையும் கையாளக்கூடியவாறு முழு VGA காட்டினையும் மீள் நிரலாக்கம் செய்தார். இது 1989 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

சிங்களம் மற்றும் தமிழில் முதல் அடிப்படை உள்ளீடு / வெளியீடு முறைமையைப் பெற முடிந்தது, அங்கு சிங்களத்தை கட்டளை வரியில் (command prompt) தட்டச்சு செய்து, control மற்றும் shift விசைச் சேர்க்கையைப் பயன்படுத்தி கணினியில் மொழியை மாற்ற முடியும், ஏனென்றால் அந்த நேரத்தில் விசைப்பலகையில் Alt விசை (கீ) காணப்படவில்லை. தற்போது, கணினிகளில் மொழியினை மாற்றுவதற்கு Altshift விசைகள் பயன்படுத்தப்படுகின்றது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைப் பயன்படுத்துவதற்கு கணினி இயங்குதளம் மீள்நிரலாக்கம் செய்யப்பட்டது அத்துடன் சிங்கள மொழிக்காக அது S-BIOS எனவும் மற்றும் தமிழ் மொழிக்காக அது T-BIOS எனவும் பெயரிடப்பட்டது. அதன்பின்னர் C கணினி நிரலாக்க மொழியினைப் பயன்படுத்தி மும்மொழியிலுமான சொல் செயலாக்கி ‘வதன் தாரவ’ (වදන් තරුව) யினை திரு.நந்தசாராவடிவமைத்தார். இந்த பெயர் பேராசிரியர் சமரனாயக்க அவர்களினால் வழங்கப்பட்டது. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், CBA பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபெண்டன்ஸ் கம்ப்யூட்டர்ஸ் போன்ற நிறுவனங்களால் இந்த தயாரிப்பு விற்பனை செய்யப்பட்டது.

1994 ஆம் ஆண்டு, மும்மொழியிலும் இணக்கமான (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) டைப்செட்டிங் மென்பொருள் ‘அத்வாலா’ (අත්වැල) யினை வென்ச்சுரா வெளியீட்டாளருடன் சேர்ந்து திரு.நந்தசாரா வடிவமைத்தார், இது ஒரு ஆரம்ப டெஸ்க்டாப் வெளியீட்டு தொகுப்பாகும். இந்த மென்பொருள் கொழும்பு பல்கலைக்கழக கணினி தொழினுட்ப நிறுவனத்தின் கணினி சேவைகள் மையத்தினால் சந்தைப்படுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி சிக்கலான ஆவணங்களை உருவாக்குவது சாத்தியமானது. பின்னர், 1995 ஆம் ஆண்டில், திரு. நந்தசாரா விண்டோஸ் 95/98 க்கான ‘சரசாவி’ (සරසවි) தொகுப்புகளை உருவாக்கினார் அதன்பின்னர் ஒரு யுனிகோட் இணக்கமான பதிப்பு “வின்மாஸ் சரசாவி” யினை உருவாக்கினார்.
மும்மொழியிலுமான தேசிய இணையத்தளமான www.lk யினை உருவாக்குவதற்கு திரு.நந்தசாரா ஒரு கருவியாகத் தொழிற்பட்டார், இது 1996 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ICT யில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னைய உயர் கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC) (இது ICTA இன் முன்னோடி ஆகும்), கணினி தொழினுட்பத்தில் சிங்களம் மற்றும் தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டின் தரநிலைகளைப் பரிந்துரை செய்கின்ற பணிக்குழுவினது ஒரு உறுப்பினராக இவர் இருந்தார். அப்போது, அக்குழு தகவல் தொழினுட்பத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு சிங்கள எழுத்துக்களின் தொகுப்பினை உருவாக்குவதில் ஈடுபட்டது. இதற்காகத் உருவாக்கப்பட்ட வரைவானது பணிக்குழுவின் ஆலோசனையில் CINTEC பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. தரநிலை சிங்கள குறியாக்கம் SLASCII, (தகவல் பரிமாற்றத்திற்கான சிறீலங்கா சிங்கள தரநிலை குறியீடு), இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (SLSI) இலங்கை தரநிலை 1134 (SLS 1134: 1996) என அங்கீகரிக்கப்பட்டது. SLASCII தரநிலையானது பின்னர் 1998 இல் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள யுனிகோட்டிலிருந்து பல்வேறு அம்சங்களில் வேறுபட்டிருந்தது. திரு. நந்தசாராவின் பணி SLASCII தரத்திற்கு இணங்க இருந்தது. சிங்கள குறியீட்டு தரநிலைகளை அபிவிருத்தி செய்வதில் திரு. நந்தசாரா தொடர்ந்து ஈடுபட்டார். இவர் SLSI யின் தகவல் தொழினுட்பப்பிரிவு குழுவினது ஒரு உறுப்பினராக இருந்தார், அத்துடன் யுனிகோட் கன்சார்ட்டியத்தால் (கூட்டமைப்பு) மேற்கொள்ளப்பட்ட வேலைகளுடன் நெருக்கமாக பணிபுரிந்தார். 1997 ல் கிரீஸிலுள்ள க்ரீட்டில் நடைபெற்ற யுனிகோட் கன்சார்டியத்தின் முக்கியமான கூட்டத்திற்கு பேராசிரியர் ஜே.வீ.திசானாயக்கவுடன் சேர்ந்து கலந்து கொண்டார். திரு. மைக்கேல் எவர்சன் யுனிகோட் கன்சார்ட்டியத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். இந்தச் சந்திப்பின் போது சிங்கள குறியீட்டு பக்கம் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஆழ்ந்த விவாதங்களுக்குப் பின்னர், இலங்கை பிரதிநிதிகளால் ஒரு சில சிறிய திருத்தங்களுடன் திட்டம் முன்மொழியப்பட்டது.

1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம், திரு.நந்தசாரா அமெரிக்காவின், சியாட்டில், ரெட்மொன்ட் யிலுள்ள மைக்ரோசொப்ற் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தார் அத்துடன் அங்கு NT இயங்குதளத்தில் சிங்கள மொழி வளர்ச்சி தொடர்பாக சிக்கலான ஸ்கிரிப்ட்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என மைக்ரோசொப்ற் NT டெவலப்பர் குழுவுடன் கலந்துரையாடினார். இதே நேரம், லினக்ஸ் இயங்குதளத்தில் சிங்கள மொழி வடிவமைப்பிற்காக பணியாற்றிய ஜப்பானியக் குழு ஒன்று இருந்ததாக அவர் கூறுகிறார்.

CINTEC இல் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் இலங்கை ICT நிறுவனத்தில் அதன் ஆரம்பத்திலிருந்து நிகழ்ச்சிப் பணிப்பாளராகவிருந்த பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்களின் தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் திரு.நந்தசாரா நினைவு கூர்கின்றார். CINTEC இல் தொடங்கப்பட்ட கணினி தொழினுட்பத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஸ்கிரிப்டைப் பயன்படுத்துவதற்கான நியமங்களைப் பரிந்துரைக்கும் பணி குழு, ICTA வில் உள்ளூர் மொழிகள் பணிக்குழு (LLWG) எனும் பெயரில் பணிகளைத் தொடர்ந்தது.

நிறுவன அபிவிருத்தி
நிறுவன அபிவிருத்தியில், விஞ்ஞான பீடத்தின் கீழ் கணினி விஞ்ஞான துறையினை உருவாக்குவது பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களின் ஒரு கனவாக இருந்ததனையும் அத்துடன் அது 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதனையும் திரு.நந்தசாரா நினைவு படுத்துகினறார். அதன்பிறகு, பல்கலைக்கழகத்தின் கீழ் நிதி மற்றும் நிர்வாக தன்னாட்சியுடைய ஒரு சுயாதீனமான நிறுவனத்தினை அமைப்பதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) மூலமாக ஜப்பானிய அரசாங்கத்திற்கு ஒரு முன்மொழிவை பேராசிரியர் வி.கே.சமரனாயக்க முன்வைத்தார். இதற்கான கலந்துரையாடல்களுக்காக ஜப்பானிலிருந்து பல குழுக்கள் இலங்கைக்கு வந்தன. 1986 நவம்பரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்த திட்டம் இலங்கையிலா அல்லது மலேசியாவிலா நடைமுறைப்படுத்தப்படுவது என்பதை தீர்மானிக்க வேண்டியிருந்தது. அது ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. இலங்கைக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பானிய குழுவிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அதில் இலங்கைக் குழு வெற்றி பெற்றது, இதன் விளைவாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி தொழினுட்ப நிறுவனம் (ICT) ஆனது நிறுவப்பட்டது. 1988 முதல் 1990 வரை இலங்கைக்கு விஜயம் செய்த பரஸ்பர ஆலோசனைக் குழு, தொழினுட்ப வழிகாட்டல் குழு மற்றும் திட்ட மதிப்பீட்டுக் குழு போன்ற ஜப்பானிய குழுவினர்களுக்கு திரு.நந்தசாரா உதவிகளை வழங்கினார்.

“மல்டிமீடியா தொழினுட்பப் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம்” அமைப்பதில் திரு.நந்தசாரா பணியாற்றினார். இந்தப் பணியின் விளைவாக ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு திட்ட வகை தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டமாக மேம்பட்ட டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையம் JICA ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கணினி தொழினுட்ப நிறுவனமானது தொழில்துறைக்கு தேவையான நபர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது, அத்துடன் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் குறிப்பாக கவனம் செலுத்தவில்லை. விஞ்ஞான பீடத்தின் கீழ் கணினி விஞ்ஞான துறையும் காணப்பட்டது. இரு நிறுவனங்களுக்குள்ளும் நிபுணத்துவம் காணப்பட்டது, எனவே பேராசிரியர் சமரநாயக்கவின் குறிக்கோள் இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒன்றாக இணைந்து செயல்படுவதாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி (UCSC) ஸ்தாபிக்கப்பட்டது. இதன் ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது உயர்வாக இருக்கின்றது; 50 க்கும் மேற்பட்ட கல்விசார் ஊழியர்கள் உள்ளனர் என்று திரு. நந்தசாரா குறிப்பிட்டார், மற்றும் ஆசிரியர்களின் திறன் இலங்கையில் மிகப்பெரிய ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டு UCSC கணினியிலில் தனது 50 ஆண்டுகள் பூர்த்தியைக் கொண்டாடியது அதன்போது பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் பேராசிரியர் சமரநாயக்க ஒரு குழு மாணவர்களுக்கு கணினி நிரலாக்கத்தினை கற்பிப்பதற்காக ஆரம்பிக்கையில் ஒரு மைல்கல்லை அடைந்தார் என்று அவர் குறிப்பிடுகிறார். அது ஒரு வெற்றிகரமான பயணமாக இருந்தது. முடிவாக, “அதனை அடைவதற்கு நாங்கள் ஒன்றாகப் பணியாற்றினோம், நாங்கள் பகல் மற்றும் இரவில் கடுமையாக வேலையாற்றினோம் சிலநேரங்களில் ஆய்வுகூடத்தில் தூங்கினோம், நாங்கள் அரசாங்கத்திற்காக பணியாற்றினோம் நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றினோம், நாங்கள் சர்வதேச நிகழ்வுகளைக் கையாண்டோம் அத்துடன் அந்த வேலைகள் அனைத்தும் காணக்கூடிய முடிவுகளை அளித்துள்ளது”.

Video Resources

50 Years of Computing at University of Colombo

ICT Documentary, University of Colombo

AN INVESTMENT PARADISE FOR THE IT INDUSTRY

Dr. Arthur C. Clarke – TeleFest

Wasanthaya ITN TV Programe

Apegama – Rupavahini TV Programe

SiyabasAlankaraya

Sameepa Dasuna MTV Sinhala 4