திரு. ரோஹன் மனமுதலி

திரு. ரோஹன் மனமுதலி, சயின்ஸ் லேண்ட் கோர்ப்பரேஷன் (பிறைவேட்) லிமிடெட்டினை, திரு. சம்பத் கோடமுன்னே உடன் இணைந்து, 1994 ஆம் ஆண்டில் நிறுவினார். இது உள்ளூர் மொழிக்கான கணினிச் செயற்பாட்டில் மட்டுமே, தம்மை அர்ப்பணித்த ஒரு நிறுவனமாகும். திரு. மனமுதலி மற்றும் திரு. சம்பத் கோடமுன்னே ஆகியோர் மும்மொழியிலான சொற்செயலி “திபஸ்”இனை உருவாக்குவதில் இணை-மேம்பாட்டாளர்களாக இருந்தனர். இது இலங்கையில் உள்ளூர் மொழிக்கான கணினிச் செயன்முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்திராததால் பலர் கணினிகளைப் பயன்படுத்தத் தயங்கிய காலம் அது. இலங்கையில் மக்கள் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு பெரிய தடையாக இருந்தது. “திபஸ்” இந்த இடைவெளியை நிரப்பியது, மேலும் மக்கள் சிங்கள மொழியில் சொற்செயலிகளைப் பயன்படுத்த முடிந்தது. ரோஹன் மனமுதலி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

ரோஹன் மனமுதலியின் கணினிகள் பற்றிய முதல் அறிமுகமானது, அவர் ஒரு பள்ளி மாணவனாக இருந்தபோது ஏற்பட்டது, அவர் முதலில் சின்க்ளேர் கணினியை தனது பாடசாலையான ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் பார்த்தார். 1987 ஆம் ஆண்டில், எப்போது மீளத் திறக்கப்படும் என்பது தெரியாதவாறு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன, மேலும் 1987 ஆம் ஆண்டில் ரோஹன் திட்டமிட்டபடி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியவில்லை. ரோஹன் மனமுதலி மற்றும் நண்பர்களான தம்மிகா விஜெரத்னே, சம்பத் கோடாமுனே மற்றும் பின்னர் விபுலா ஜெயம்பதி ஆகியோர் உள்ளூர் மொழிக்கான கணினிச் செயன்முறையில் பணிபுரிந்தனர், ஒரு கணினியை ஒன்று சேர்த்து, சிங்களத்தில் கணினியை இயங்கச் செய்ய முயன்றனர். புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொண்டனர்.

1995 ஆம் ஆண்டில், சயின்ஸ் லேண்ட் ஒரு விசைப்பலகை இயக்கியை உருவாக்கியது. இது விண்டோஸ் மற்றும் பல சிங்கள மற்றும் தமிழ் எழுத்துருக்களில் வேலை செய்தது. 1997 ஆம் ஆண்டில் அவர்கள் சிங்கள எழுத்துப்பிழை சரிபார்ப்பு மற்றும் வரிசையாக்க முறையை உருவாக்கினர். அதனை 2000 ஆம் ஆண்டில், அவர்கள் உருவாக்கியதாகக் திரு. ரோஹன் மனமுதலி கூறுகிறார், அதனை முதல் சிங்கள மின்னணு அகராதி என்று அவர் நம்புகிறார்.  இது “திபஸ் சொல் மொழிபெயர்ப்பாளர்” என்று அழைக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர்ச் சந்தைக்கான சிங்கள மென்பொருளை உருவாக்கினர். இந்தக் குழு 2006/2007 ஆம் ஆண்டில் மொபைல் சாதனங்களுக்கான சிங்கள குறுஞ்செய்தி மென்பொருளையும், மொபைல்களுக்கான சிங்கள / தமிழ் அகராதி மென்பொருளையும் உருவாக்கியது.

2005 ஆம் ஆண்டு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனம் (ICTA) சர்வதேசத் தரநிலையான யுனிகோட்டினைப் பின்பற்றுவதனை ஊக்குவித்தது. அதனால் திபஸ் தொகுப்பினை யுனிகோட் முறைக்கு அவர்கள் மாற்றினர்.

ICTA இற்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கான ஆறு வழி ஒலிபெயர்ப்பு முறையையும் சயின்ஸ் லேண்ட் உருவாக்கியது. விண்டோஸ் விஸ்டா மற்றும் எம்.எஸ். ஒஃபீஸ் 2007 இன் பயனர் இடைமுகங்களை உள்ளூர்மயமாக்கவும், பின்னர் விண்டோஸ் 7 மற்றும் எம்.எஸ்.ஆஃபீஸ் 2010 இன் பயனர் இடைமுகங்களை உள்ளூர்மயமாக்கவும் ICTA உடன் சயின்ஸ் லேண்ட் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான பணிகள் சயின்ஸ் லேண்ட் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரிக்கு (UCSC) இடையேயான ஒரு இணை முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, நிதி மேலாண்மை மற்றும் அறிக்கையிடல் முறையையும் ICTA இற்காக சயின்ஸ் லேண்ட் உருவாக்கியது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

ரோஹன் மனமுதலியின் கணினிகள் பற்றிய முதல் அறிமுகமானது அவர் ஒரு பள்ளி மாணவனாக இருந்தபோது ஏற்பட்டது. அவர் முதலில் சின்க்ளேர் கணினியை தனது பாடசாலையான ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் பார்த்தார். ஆனால் அப்பாடசாலையில் கணினிச் செய்முறை பற்றிக் கற்பிப்பதற்கான வசதிகள் எதுவும் இருக்கவில்லை. ரோஹன் மனமுதலி தனது உயர்தரப் பரீட்சையினை 1986 ஆம் ஆண்டில் எழுதினார். அவர் 1987 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்க்கப்படடிருக்க வேண்டும். ஆனால் நாட்டில் அப்போதிருந்த பாதகமான சூழ்நிலை காரணமாக, பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாதவாறு மூடப்பட்டிருந்தன.

ரோஹன் மனமுதலி கணினிகளின் உட்செயல்பாடுகள் குறித்து ஆர்வமாக இருந்தார். எனவே, ஆப்பிள் வீட்டுக் கணினி வைத்திருந்த ரோஹனின் நண்பரான தம்மிகா விஜெரத்னவுடன் சேர்ந்து, கணினி உட்கட்டமைப்பு மற்றும் நுண்செயலிகளைப் பற்றி புத்தகங்களிலிருந்து அறிய முயன்றனர்.

ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்குதல்

அதன்பிறகு அவர்கள் ஒரு கட்டிடத்திற்குள் நுழையும் நபர்களைக் கண்டறிய ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முயன்றனர். அவர்கள் மென்பொருளுடன் வன்பொருள் கூறுகளை இடைமுகப்படுத்த முயற்சித்தனர். அதன் பின்னர் அகச்சிவப்பு சென்சார்களை (infrared sensors) ஒருங்கிணைக்க முயற்சித்தனர். இதைச் செய்ய அவர்கள் IBM கணினிகள் தொடர்பான வன்பொருட் கூறுகளை சேகரித்து, பின்னர் IBM இற்கு இணக்கமான கணினியை உருவாக்க அக் கூறுகளைப் பயன்படுத்த முயற்சித்தனர். தம்மிகா விஜெரத்னே எலக்ட்ரானிக்ஸ் பற்றித் தெரிந்து கொண்டார். மேலும் வேலை செய்யக்கூடிய கணினியொன்றினை ஒருங்கிணைக்க முடிந்தது.

சிங்களத்தில் இயங்கக்கூடிய கணினியைப் பெறுதல்

இந்தக் காலப்பகுதியில், ஒரு அடாரி (Atari) வீட்டுக் கணினியை வைத்திருந்த நண்பரான சம்பத் கோடமுனே, சிங்களத்தில் இயங்கக்கூடிய ஒரு கணினியைப் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். கணினியைப் பயன்படுத்தி தனது காதலிக்கு சிங்களத்தில் கடிதங்களை எழுதுவது சம்பத்தின் விருப்பமாக இருந்தது. இந்த நோக்கத்தினை நிறைவு செய்வதற்காக, DOS இல் இயங்கக்கூடிய, ஒரு IBM இணக்கமான சொற்செயலியினை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர். அந்தக் காலகட்டத்தில், கணினித்திரையில் சிங்கள எழுத்துக்களை காட்சிப்படுத்துவதற்குப் பல சிரமங்கள் காணப்பட்டன. இது தொடர்பாக DMS நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இந்தக் குழு அறிந்திருந்தது. பின்னர் அவர்கள் கிராபிக்ஸ் கார்டுகளில் பரிசோதனை செய்தனர், இறுதியாக சிங்கள எழுத்துக்களை கணினித் திரைகளிலும், அச்சிலும் கூட ஒழுங்காக வழங்க முடிந்தது. அந்நேரத்தில் பிரபல்யமான சொற் செயலாக்கியாக WordStar காணப்பட்டது. WordStar இனைப் பின்பற்றுவதன் மூலம், அவர்கள் ஒரு சிங்களச் சொற்செயலியை உருவாக்கினர், இதன் மூலம் சிங்களத்தில் திருத்த, சேமிக்க மற்றும் அச்சிட சாத்தியமானது. இந்தக் குழுவில் இணைந்து கொண்ட மற்றுமொரு நண்பர் விபுல ஜெயம்பதி. அவருடன் சேர்த்து நான்கு பேர் கொண்ட குழுவாக, அவர்கள் மாறினர்.

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கண்டியில் உள்ள அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் (IFS) தலைவர் பேராசிரியர் சிரில் பொன்னம்பெருமாவுக்கு சிங்கள சொற்செயலி பற்றி, இந்தக் குழு செயல் விளக்கமளித்தது. சொற்செயலியில் தமிழைச் சேர்க்க முடியுமா என்று பேராசிரியர் பொன்னம்பேருமா விசாரித்தார்.

விசைப்பலகை தளவமைப்பு மற்றும் உள்ளீடு

சிங்கள விஜசேகர விசைப்பலகை தளவமைப்பு ஆனது, பயனர்களிடையே, அதுவும் குறிப்பாக அரசுத் துறைப் பயனர்கள் இடையே, மிகவும் பிரபலமானது என்று அக்குழு கண்டறிந்தது. இது அவர்களுக்கு ஒரு கடினமான பணியாக இருந்தது, ஆரம்பத்தில் உள்ளீட்டு முறை “A” என்ற எழுத்தைத் தட்டச்சு செய்வதன் விளைவாக, අ சிங்கள எழுத்தையும் “B” எனத் தட்டச்சு செய்வதன் விளைவாக சிங்கள எழுத்து බ ஐயும் பெற்றுக்கொள்ள முடிந்து.

ஆனால் இறுதியாக, விஜேயசேகர விசைப்பலகை தளவமைப்பினை அடிப்படையாகக் கொண்டு, விசைப்பலகை உள்ளீட்டினை அவர்கள் உருவாக்கினர்.

பேராசிரியர் பொன்னம்பெருமாவால் வழங்கப்பட்ட தமிழ் உள்ளிடுவதற்கான சவாலான செயற்பாட்டையும் இந்த அணி ஏற்றுக்கொண்டது. அவர்கள் முதலில் சொற்செயலியில் “ஒலிப்புமுறை சார்ந்த (phonetic)” விசைப்பலகை உள்ளீட்டு அமைப்பைச் சேர்த்தனர். பின்னர் ரெங்கநாதன் உள்ளீட்டு அமைப்பைச் சேர்க்க முடிந்தது. தமிழ் தட்டச்சுப்பொறி பயனர்களிடையே “ரெங்கநாதன்” விசைப்பலகை தளவமைப்பு மிகவும் பிரபலமான தளவமைப்பு என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவ்வாறு, 1989 இல், ஒரு மும்-மொழியிலான சொல்-செயலியை அவர்கள் கொண்டிருந்தனர்.

அவர்களது தயாரிப்பை மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக, அவர்கள் சொற்செயலியின் நகல்களை, நாடு முழுவதும், குறிப்பாக அரசு நிறுவனங்களுக்கு விநியோகித்தனர். மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலவசமாக முன்னெடுத்தனர். பின்னர், ஒரு நாள், யாரோ ஒருவர் ஒரு சொற்செயலியின் நகலை ரோஹனிடம் ஒப்படைத்தார், பின்னர் அது பரவலாக விநியோகிக்கப்பட்டிருப்பதனை அவர் அறிந்திருந்தார்.

அந்தக் காலத்தில், பலர் ஆங்கிலத்தில் நன்கு பரிச்சயமாகாத காரணத்தினால், கணினிகளைப் பயன்படுத்தத் தயங்கினர். இலங்கையில் மக்கள் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு பாரிய தடையாக இருந்தது. அதன்பிறகு, இந்த குழு இலங்கை வணிக மேம்பாட்டு மையத்தை பார்வையிட்டது, அங்கு அவர்கள் கலாநிதி ரோமேஷ் டயஸ் பண்டாரநாயக்கவைச் சந்தித்தனர். அவர் தம் தயாரிப்பினை ரூபாய் 17,500 பெறுமதியானதெனத் தெரிவித்து, அதற்கான பணத்தினை அவர்களிடம் செலுத்தினார். இப்படித்தான் அந்தக் குழு சொற்செயலியை விற்கத் தொடங்கியது. அவர்கள் உற்பத்தியை வணிக மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கும் அதை சந்தைப்படுத்துவதற்கும் டைனமிக்ராம் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கூட்டு வைத்திருந்தனர்.

திபஸ்

அவர்கள் 1994 இல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன் மற்றும் ஒரு சவாலை எதிர்கொண்டனர்; அவர்கள் தொடங்கிய உள்ளூர் மொழி கணினிச் செயல்முறை பணிகளைத் தொடரலாமா, அல்லது உயர் படிப்பைத் தொடரலாமா, இல்லையெனில் வேலை தேடலாமா என்று அவர்கள் குழம்பினர்.

இந்த குழு ஒரு நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்து, உள்ளூர் மொழி கணினிச் செயல்முறைப் பகுதியில் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்தது. கலாநிதி ரோமேஷ் டயஸ் பண்டாரநாயக்க முதலீடு செய்ய ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, அவர்கள் சயின்ஸ் லேண்ட் கோர்ப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட் இனை அமைத்தனர். இந்த நிறுவனம் உள்ளூர் மொழி கணினிச் செயல்முறையில் மட்டுமே பணியாற்றியது. 1995 ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு விசைப்பலகை இயக்கியை உருவாக்கினர். இது விண்டோஸ் மற்றும் பல சிங்கள மற்றும் தமிழ் எழுத்துருக்களில் வேலை செய்தது. 1997 ஆம் ஆண்டில் சிங்கள எழுத்துப்பிழை சரிபார்ப்பு மற்றும் வரிசையாக்க முறையை அவர்கள் உருவாக்கினர். 2000 ஆம் ஆண்டில், அதனை உருவாக்கியதாக திரு. ரோஹன் மனமுதலி கூறுகிறார், அத்துடன் அதனை முதல் சிங்கள மின்னணு அகராதி என்று அவர் நம்புகிறார். இது “திபஸ் சொல் மொழிபெயர்ப்பாளர்” என்று அழைக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் சந்தைக்கு சிங்கள மென்பொருளை உருவாக்கினர். 2006/2007 ஆம் ஆண்டில் மொபைல் சாதனங்களுக்கான சிங்களக் குறுஞ்செய்தி மென்பொருளையும், மொபைல்களுக்கான சிங்கள அகராதி மென்பொருளையும் இந்தக் குழு உருவாக்கியது.

2005 ஆம் ஆண்டு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனம் (ICTA) சர்வதேச தரநிலையான யுனிகோட்டினைப் பின்பற்றுவதனை ஊக்குவித்தது. அதனால் திபஸ் தொகுப்பினை யுனிகோட் முறைக்கு அவர்கள் மாற்றினர்.

ஒலிபெயர்ப்பு

ICTA உடனான மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் பயன்படுத்தப்படும் பெயர்களைக் கையாள்வதற்கான பயன்பாட்டு முறைகள் மற்றும் விதிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கான ஆறு வழி இயங்கக்கூடிய ஒலிபெயர்ப்பு முறையை சயின்ஸ் லேண்ட் நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தியது. இது தேவைப்பட்டது ஏனெனில், ICTA வின் மறு பொறியியல் அரசாங்க தரவுத்தளங்கள் மூன்று மொழிகளிலும் அரசு நிறுவனங்களில் அமைக்கப்பட்டன. நபர்களின் பெயர்கள் மற்றும் இடப் பெயர்களை ஒலிபெயர்க்க வேண்டிய அவசியம் இருந்தது.

பயனர் இடைமுகங்களை உள்ளூர்மயமாக்குதல்

விண்டோஸ் விஸ்டா மற்றும் எம்.எஸ். ஆஃபீஸ் 2007 இன் பயனர் இடைமுகங்களை உள்ளூர்மயமாக்கவும், பின்னர் விண்டோஸ் 7 மற்றும் எம்.எஸ்.ஆஃபீஸ் 2010 இன் பயனர் இடைமுகங்களை உள்ளூர்மயமாக்கவும் ICTA உடன் சயின்ஸ் லேண்ட் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான பணிகள் சயின்ஸ் லேண்ட் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரி (UCSC) ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு இணை முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. ICTA, மைக்ரோசாஃப்ட் கோர்ப்பரேஷனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இறுதியாக, இது உள்ளூர் மொழி கணினிச் செய்முறையில் ஒரு நீண்ட பயணமாக இருந்தது, ஆனால் திபஸ் நிச்சயமாக இலங்கையில் உள்ள உள்ளூர் மொழி பயனர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என திரு. ரோஹன் மனமுதலி நினைவுபடுத்துகின்றார்.

Gallery