இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு

கலாநிதி கவன் ரட்ணதுங்க

    கலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட...
Read More

பேராசிரியர் ரோஹன் சமரஜீவா

பேராசிரியர் ரோஹன் சமரஜீவ அவர்கள் 1998-99 காலப்பகுதியில் இலங்கையில் தொலைத்தொடர்புகள் திணைக்களத்தின் பிரதான பணிப்பாளராக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பினார். உரிமம் பெற்ற பின்னர் இரண்டு புதிய நிலையான ஆபரேட்டர்களான சன்டெல் மற்றும் லங்கா பெல் மற்றும் சிறீலங்கா டெலிகாம் ஆகியன தனியார்மயமாக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம், ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் திணைக்களமானது சிறீலங்கா டெலிகாம் (SLT) எனப்படும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது. 1996 இல் இயற்றப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு...
Read More

திரு. சிறீ சமரக்கோடி

திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். இவர் மின்னணுவியல் மீதான ஆர்வத்தை இங்கு தான் முதலில் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கு மொபைல் தொலைபேசி முறையினை கொண்டுவருவதில் முன்னோடியாக இருந்தார். இவர் செல்டெல் லங்கா (Celltel Lanka) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் ஆரம்ப உரிமப் பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஈடுபட்டார். மேலும், லங்கா இன்டர்நெட்டை அமைப்பதிலும் அவர் ஈடுபட்டார், இது...
Read More

திரு.லால் டயஸ்

திரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார். திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார்...
Read More

பேராசிரியர் கிஹான் டயஸ்

பேராசிரியர் கிஹான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார். பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்க...
Read More

பேராசிரியர் அபய இந்துருவ

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “...
Read More