திரு.யாஸா ருணாரெத்ன

திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Honors) பட்டத்தினைப் பெற்றார் அத்துடன் அங்கு பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளில் இரு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கையில் முதன் முதலில் கணினி நிறுவப்பட்ட அரச சேவை நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார், அத்துடன் அங்குதான் அவர் கணினி செய்முறையில் தனது தொழிலை தொடங்கினார்.

திரு.கருணாரெத்ன அவர்கள் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் 1970 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டுத் திட்டத்தினை முன்னெடுக்கும் முழுப்பொறுப்பினையும் வகித்தார். 1972 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் சிஸ்டம் அனேலிஸ்ட் ஆக இணைந்தார் பின்னர் அவ் நிறுவனத்தினது தரவு செயல்முறை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலோரடா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கைக்கான ஜக்கிய நாடுகள் ஃபெல்லோஷிப்பினைப் பெற்றதுடன் அங்கு 1980 ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானத்தில் முதுமானிக் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். அங்கே இருக்கும் போது, அமெரிக்க விவசாயத்துறையின் ஒரு ஆலோசனை திட்டமான வீதி வடிவமைப்பு முறைமையினை டிஜிட்டல் ஒருமைப்பாடு ஆக்குவதற்கான திட்டத்தில் ஒரு தகவல் நிபுணராக பணியாற்றினார். இவர் 1981 ஆம் ஆண்டு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு திரும்பியதுடன் 1983 ஆம் ஆண்டு ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் (ETF) சபையில் இணைந்தார், அங்கு 2001 ஆம் ஆண்டு வரை கணினி சேவைகைளுக்கான பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றினார். ETF சபையில் அவரது நியமனம் அவரை பல நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்ற அனுமதித்தது. அத்துடன் இலங்கை வங்கியில் முதல் நடைமுறைக் கணக்கு முறைமையின் ஆலோசகராக இருந்தார். இவர் இலங்கை மற்றும் பல சர்வதேச நிறுவனங்களில் மற்றும் பல அரச முகவர்களிடமும் மரியாதைக்குரிய ஆலோசகராக இருந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் தேசிய ஆலோசகராக இருந்தார். இவர் தகவல் தொழினுட்ப அபிவிருத்திக்கு பல பிரிவுகளில் பங்களிப்புச் செய்துள்ளார்.

திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கணினிச் சமூகத்தின் (CSSL) முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராக மற்றும் ஒரு முன்னோடியாக இருந்தார். இவர் CSSL இன் பேரவையில் மூன்று தசாப்தங்களாகச் வேவையாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரை CSSL இன் தலைவராகப் பணியாற்றினார். இவர் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பல இலக்குகளை வெற்றிகண்டார். அவற்றில், இலங்கைப் பாடசாலை மாணவர்களை வெளிநாடுகளில் நடைபெற்ற மென்பொருள் போட்டிகளுக்கு அனுப்பியமை ஒரு புதுமையான துணிகரச் செயலாகக் கருதப்படுகின்றது. பல தடைகளைக் கடந்து, 1990 இல் இந்த யோசனையை செயற்பாடாக முன்னெடுத்தார். அவரது இத்துணிகர முயற்சியின் காரணமாக 1995 ஆம் ஆண்டு சர்வதேச மென்பொருள் போட்டியில் இப்பிராந்தியத்தின் பல நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய இலங்கைக் குழுவினர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டனர். CSSL க்கான அரச கலைக் கட்டிடத்தினை பாதுகாத்தது அவரடைந்த இன்னுமொரு இலக்காகும், இது முன்னர் OPA (நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பு) கட்டிடத்தில் ஒரு அறையில் செயற்பட்டு வந்தது, இதற்காக தனி ஒருவராகத் திட்டமிட்டு அதற்கு முன்னோடியாகவும் செயற்பட்டிருந்தார்.

CSSL ற்கு ஆற்றிய சேவையை அங்கீகரிப்பதற்காக திரு. கருணாரெத்ன அவர்கட்கு CSSL இன் புகழ்மிக்க மரியாதைக்குரிய உறுப்பினர் என 2001 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது. திரு. கருணாரெத்ன அவர்கள் 1989 ஆம் ஆண்டிலிருந்து OPA இல் கணினி விஞ்ஞானத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருக்கின்றார்.

1992 ஆம் ஆண்டு, கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்போரெல் 1992 மாநாடு மற்றும் கண்காட்சியினை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுமாறு திரு.கருணாரெத்ன அவர்கட்கு அழைப்பு விடுத்தார். அதற்கான பிரதான ஒழுங்கமைப்புக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் இன்போரெல் மாநாட்டிற்கு தலைவராகவும் நியமிக்கப்ட்டார். அது ஒரு வெற்றிகரமான மாநாடாக இருந்தது.

CSSL இல் திரு.கருணாரெத்ன அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளில் இலங்கையின் முதல் சர்வதேச IT மாநாடு – SEARCC’95 இன் தென் கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பு ஆனது மிகவும் முக்கியமானதாகும்.  SEARCC’95 ஒழுங்கமைப்புக் குழுவில் தலைவராக திரு.கருணாரெத்ன அவர்கள் செயற்பட்டது இலங்கையின் புகழை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்ல வழியமைத்தது. தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பில் அங்கம் வகித்த 13 ஆசிய பசுபிக் நாடுகளில் அதன் தலைமைத்துவத்தினைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமை திரு.கருணாரெத்ன அவர்களுக்கு கிடைத்தது.

2002 ஆம் ஆண்டில் தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு திரு.கருணாரெத்ன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதிவியிலிருந்து கொண்டு செயலகத்தினை இயக்குவதற்கும் மற்றும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருந்தார். திரு.கருணாரெத்ன அவர்கள் தகவல் செயலாக்கத்திற்கான சர்வதேச கூட்டமைப்பில் (IFIP) SEARCC இனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார்.  இவ் நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றியதன் காரணமாக பல சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் நடைபெற்ற மாநாடுகளுக்கு மற்றும் இலங்கையிலுள்ள நிபுணர்கள் பயனடைவதற்காக பல செயலமர்வுகளை நடாத்துவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுவதற்கான சாத்தியம் ஏற்பட்டது. இப் பிராந்தியத்திற்கு திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் வழங்கிய அளப்பெரும் பங்களிப்பிளை அங்கீகரிப்பதற்காக அவருக்கு “தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் மதிப்பிற்குரிய உறுப்பினர்” எனும் விருது வழங்கப்பட்டது. இவ் மதிப்புக்குரிய விருது பெற்ற ஒரே நபர் இவராவார்.

2013 ஆம் ஆண்டு நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பு நடத்திய விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான தேசிய உயரிய விருதினைப் பெற்றார்.

திரு.கருணாரெத்ன அவர்கள் இலங்கையில் ICT கொள்கையில் உயர் தீர்மானங்களை எடுக்கும் முன்னைய கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையில் (CINTEC) 1993 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை உறுப்பினராக இருந்தார். இவர் இலங்கையின் ICT தொழில்துறை, தொலைத் தொடர்பாடல் வழங்குனர்கள் மற்றும் இணையத்தள சேவை வழங்குனர்களைப் பிரதிநிதித்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப சங்கத்தின் (SLICTA) ஆரம்பத் தலைவராக இருந்தார்.

எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு, கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற பல தொழிற்துறைகளில் மனித ஊழியர்களுக்குப் பதிலாக தொழினுட்பம் மற்றும் ரோபோக்கள் பதிலீடு செய்யப்படும் என திரு.கருணாரெத்ன அவர்கள் கூறுகின்றார். எனவே, இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் ஆராய்வது நிபுணர்களுக்கான சவாலாக அமைந்தது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். அவர் ஆனந்தா கல்லூரியில் ஆங்கில இலக்கிய சங்கத்தின் தலைவராகவும் மாணவர் செயற்பாடுகளில் தலைமைத்துவத்தினையும் வகித்தார்.  அதனைத் தொடர்ந்து சிலோன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானதுடன் அங்கு 1967 ஆம் ஆண்டு சிறப்புப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னரேஅங்கு ஊழியராக நியமிக்கப்பட்டதுடன் பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளிலும் சேவையாற்றியுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில், திரு.கருணாரெத்ன அவர்கள் கணினி மீது ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டார். இலங்கையில் முதன் முதலில் கணினியை நிறுவிய நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட விளம்பரம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய விண்ணப்பித்த 400 விண்ணப்பதாரிகளில் ஒருவரான இவர் சிஸ்டம் அனேலிஸ்ட்/புரோகிராமர் பயிலுனர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு ICT பிரிவில் முன்னோடிகளான திரு.ஆர்.வி.ஏக்கனாக்க, திரு.ரஞ்சன் பெரேரா, திரு.நிமல் அமரசிங்க மற்றும் பலருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் 16K நினைவகம் மற்றும் டேப் இயங்குதளத்துடனான மிகப்பெரிய கணினி காணப்பட்டதாக திரு.கருணாரெத்ன அவர்கள் கூறுகின்றார். மேலும் தற்போது பயன்படுத்தும் மொபைல் சாதனங்கள் அந்த கணினியை விட மில்லியன் மடங்கு அதிகமான நினைவகத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை அவர் அவதானித்துள்ளார். இக் கூட்டுத்தாபனமானது ஏனைய நிறுவனங்களது பணிகளையும் முன்னெடுத்தது அதற்கு உதாரணமாக 1969 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் இக்கூட்டுத்தாபனத்தால் செயல்முறைப்படுத்தப்பட்டதனைக் குறிப்பிடலாம்.

திரு.கருணாரெத்ன அவர்கள் 1970 ஆண்டு சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்திருந்தார், மேற்குறிப்பிடப்பட்டதனைப் போன்று ஒரு தெரிவுச் செயன்முறையின் மூலம் புரோகிராமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அத் திணைக்களத்தில் 24 K நினைவகத்தினைக் கொண்ட ஒரு பெரிய IBM 360, 25 மாதிரி  கணினிகள் இருந்தன. அந்தக் கணினி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நிறுவப்பட்டிருந்ததுடன் முதல் தளத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் கணினியைப் பார்வையிடுவதற்காக ஒரு பார்வைக் கூடம் இருந்தது. 1971 ஆம் ஆண்டு இத் திணைக்களத்தில் திரு.கருணாரெத்ன அவர்கள் பணியாற்றும் போது சனத்தொகை மதிப்பீட்டிற்காக, வீடமைப்பு மற்றும் விவசாயத்திற்கு சிஸ்டங்களை வடிவமைப்பதற்கான சவாலான பணிகள் வழங்கப்பட்டிருந்தன. அவர் திட்டமிடப்பட்ட சிஸ்டத்தினை வடிவமைப்பதற்கான பணிகளை நிறைவு செய்தார் அத்துடன் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சனத்தொகை மதிப்பீடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பஞ்ச் காட்ஸ் இனைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன – புரோகிராம்ஸ் அனைத்தும் கையேடு இயந்திரங்கள் மூலம் பஞ்ச் கார்டுகளாகப் போடப்பட்டன அத்துடன் தொகுப்பதற்காக கணினியில் உள்ளீடு செய்யப்பட்டன. மேலும் இதன்போது 20 மில்லியன் பஞ்ச் காட்கள் அலுவலகத்தில் அடுக்கப்பட்டதாக திரு.கருணாரெத்ன அவர்கள் நினைவு கூர்கின்றார். 

இவர் 1972 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒரு சிஸ்டம் அனேலிஸ்ட் ஆக இணைந்தார். அங்கு நிறுவனத்தின் வேலைகளை முன்னெடுப்பதற்காக முன்னைய நிறுவனத்தில் இருந்ததைப் போன்ற ஒரு IBM 360 கணினி இருந்தது. அத்துடன் இலங்கை மின்சார சபைக் கட்டணப் பட்டியலிடும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. மின்சார கட்டணப் பட்டியல்கள் அச்சிடும் பணிகள் பொதுவாக இரவு நேரங்களிலேயே நடைபெற்றதாக அவர் நினைவு கூர்கின்றார். பெற்றோலிய கூட்டுத்தாபனமானது தொலைத் தொடர்புகள் திணைக்களத்தின் கட்டணங்களுக்கான பணிகளை முன்னெடுத்தது.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலோரடா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கைக்கான ஜக்கிய நாடுகள் ஃபெல்லோஷிப்பினைப் பெற்றதுடன் அங்கு 1980 ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானத்தில் முதுமானிக் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். அங்கே இருக்கும் போது, அமெரிக்க விவசாயத்துறையின் ஒரு ஆலோசனை திட்டமான வீதி வடிவமைப்பு முறைமையினை எண் ஒருமைப்பாடு ஆக்குவதற்கான திட்டத்தில் ஒரு தகவல் நிபுணராக பணியாற்றினார்.

இவர் 1981 ஆம் ஆண்டு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு திரும்பியதுடன் 1983 ஆம் ஆண்டு ஊழியர் நம்பிக்கை நிதியச் (ETF) சபையில் இணைந்தார், அங்கு 2001 ஆம் ஆண்டு வரை கணினி சேவைகளுக்கான பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றினார். ETF சபையில் அவரது நியமனம் அவரை பல நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்ற அனுமதித்தது.

ETF சபையிலிருந்த தகவல் முறைமையை மேம்படுத்தவேண்டி இருந்தது. எனவே திரு.கருணாரெத்ன அவர்கள் சிங்கப்பூருக்கு ஒரு ஆய்வு பயணத்தினை மேற்கொண்டார். சிங்கப்பூர் மத்திய சேமலாப நிதியானது உலகளாவிய ரீதியில் காணப்பட்ட மிகச்சிறந்த சேமலாப நிதி முறைமை என ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது ஊழியர்களை திறமையாக கையாள்வதுடன் பல நன்மைகளையும் வழங்குகின்றது. அவ் முறைமையில் பல சிறப்பியல்புகளைக் கற்றுக் கொண்டதன் மூலம் இலங்கையின் ETF சபையில் அவற்றினை பின்பற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து பல சிறப்பியல்புகளுடன் ஒரு புதிய முறைமை ETF சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் இலங்கை வங்கியினது முதல் நடைமுறைக்கணக்கு முறைமையிற்கான ஆலோசகராக இருந்தார். இவர் இலங்கையில் வங்கியில் இருந்த கலாநிதி ஆர்.வி.ஏக்கநாயக்க மற்றும் திரு.ஜானக்க டி சில்வா ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். இந்த திட்டமானது முன்னர் திட்டமிடப்பட்டதன் படி கொழும்பிலுள்ள கிளைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது, அத்துடன் சாதாரண முறைமைகளுக்குப் பதிலாக மினிகொம்பியூட்டர் ரேமினல்ஸ் பயன்படுத்தப்பட்டன. 1985 ஆண்டு முதல் 1987 வரையிலான காலப்பகுதியில், திரு.கருணாரெத்ன அவர்கள் லங்கா எலக்ரிசிற்றி கம்பனி பிறைவட் லிமிடெட் இற்காக இரண்டாம்நிலை நகரங்கள் மின் விநியோகம் திட்டத்தில் வீகா வோர்லி இன்ரனேஸ்னல்ஸ் ஆல்  முறைமை ஆலோசகராக ஈடுபடுத்தப்பட்டார். இத்திட்டத்தினூடாக இலங்கையின் பயன்பாட்டு கட்டண முறைமைகளுக்காக உடனடி கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது; மானிவாசிப்பாளர் மானியைவாசித்த பின்னர் கையால் எழுதப்பட்ட ஒரு கட்டணப்பட்டியலை வாடிக்கையாளருக்கு வழங்குகின்றார். இம் முறைமையானது மின்சாரம் மற்றும் நீர் நுகர்வு போன்றவற்றினைப் பட்டியலிட தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக மாதாந்தம் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதுடன் வருவாயும் விரைவில் கிடைக்கும். இந்தத் திட்டமும் திட்டமிட்டபடி பூர்த்தி செய்யப்பட்டது. முன்னர் வெளியிடப்பட்டதைப் போன்ற இன்னுமோர் கணினி முறைமையை வழங்குமாறு விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. பணியாளர்கள் மூலம் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டதுடன் தரவுகள் செயல்முறைக்கு எந்த தாமதமும் இன்றி தயாராக இருந்ததுடன் பிரதான  கோப்புக்கள் தயாரிக்கப்பட்டன. திரு. கருணாரட்ன அவர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கல்வி அமைச்சில் இரண்டாம் நிலை கல்வி நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆலோசகராகவும் இருந்தார்.

இலங்கை கணினிச் சமூகம் (CSSL) (சிறீலங்கா கம்பியூட்டர் சொசைற்றி)

உலகிலுள்ள பல நாடுகள் கணினிச் சமூகங்களை உருவாக்கியதற்கமைய இலங்கையிலும் கணினி நிபுணர்களுக்கான ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என 1975 ஆம் ஆண்டு யோசனை முன்வைக்கப்பட்டது. எனவே, கணினிச் சமூகம் ஒன்று உருவாக்கப்படுவது பொருத்தமானது என இலங்கையிலுள்ள பல கணினி நிபுணர்கள் கருதினார்கள் அந்நேரத்தில் 30 தொடக்கம் 40 கணினி நிபுணர்கள் இச் சங்கத்தில் இணைந்து கொண்டனர். இவர்கள் இலங்கையில் கணினிச் சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட இடமான இலங்கை மத்திய வங்கியில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் ஸ்தாபக உறுப்பினர்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்திற்கான யாப்பொன்று வரையப்பட்டது அத்துடன் 1976 ஆம் ஆண்டு இலங்கை கணினிச் சமூகம் உருவாக்கப்பட்டது. திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் சங்கத்தினது பேரவை உறுப்பினர்களில் ஒருவராக காணப்பட்டதுடன் மூன்று தசாப்தங்கள் அதில் பணியாற்றினார். இவர் 1991 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரையான காலப்பகுதியில் CSSL இன் தலைவராக இருந்தார். இவரது பதவிக் காலத்தில் பல இலக்குகள் அடையப்பட்டன. 1990 ஆம் ஆண்டு இலங்கை பாடசாலை மாணவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்ற எண்ணக்கருவை பேரவையில் முன்வைத்தார். நிதி வழங்குதல் ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டதால் அந்த யோசனையை பேரவை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்தக் காரணத்திற்காக திரு.கருணாரெத்ன அவர்கள் அந்தயோசனையை கைவிட  விரும்பவில்லை அதனால் நிதியுதவி கிடைக்கவில்லையாயின் அதனை நான் வழங்குகின்றேன் எனக் கூறினார். எனவே அவ் முன்னெடுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது பின்னர் தேசிய ரீதியிலான போட்டியினூடாக மாணவர் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனர், வெளிநாட்டுப் பயணங்களுக்கு போதியளவு நிதியுதவியும் கிடைக்கப்பெற்றது. அன்றிலிருந்து வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றனர். போட்டிகளின் போது இலங்கை மாணவர் குழுக்களினது செயற்திறன்கள் ஆரம்பத்தில் திருப்திகரமாக இருக்கவில்லை அதனையுணர்ந்த திரு. கருணாரெத்ன அவர்கள் அந்த நிலைமையினை மெருகூட்டுவதற்காக திரு.லால் சந்திரநாத் அவர்களின் DMS எலக்ரோனிக்ஸ் இல் பாடசாலை மாணவர்களை மென்பொருள் போட்டிகள் தொடர்பாக பயிற்சியளிப்பதற்கு கோரிக்கை விடுத்தார். திரு.லால் சந்திரநாத் அவர்கள் இதனை ஆரம்பத்தில் மறுத்தார், பின்னர் திரு. கருணாரெத்ன அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு இணங்கினார். இதன் விளைவாக 1995 ஆம் ஆண்டு இப் பிராந்தியத்தின் 18 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இலங்கையணி வெற்றியீட்டியது. இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைத்ததுடன் முக்கிய பதவிகளையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இளைஞர்களுக்கு ICT துறையில் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்காக அமெரிக்க கணினிச் சமூகத்தின் (ACS) பரீட்சைகள் CSSL இனால் நடத்தப்பட்டது. ICT தொடர்பான பல பரீட்சைகள் அந்நேரத்தில் நடத்தப்பட்டது அத்துடன் அதில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக CSSL பிராந்தியத்தில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் கிடைத்தது. இப்பிராந்தியத்தில் நடைபெற்ற பல மாநாடுகளில் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றதுடன் அவ் மாநாடுகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றது என்தனையும் கணினிச் சமூகங்களினால் (சங்கங்களினால்) முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்பற்றல்கள் காரணமாக CSSL இன் மாநாடுகள் சர்வதேச தரத்தை அடைந்தன. திரு.கருணாரெத்ன அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் நிதிப்பிரிவு முன்னேற்றமடைந்தது.  அத்துடன் இவரின் தனிப்பட்ட திட்டமிடல் மற்றும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்ததன் காரணமாகவும் CSSL இன் அரச கலைக்கூடம் பாதுகாக்கப்பட்டது அவரடைந்த ஒரு இலக்காக கருதப்படுகின்றது. இவர் CSSL இல் ஆற்றிய பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 2001 ஆம் ஆண்டு CSSL இன் மதிப்புக்குரிய உறுப்பினர் எனும் கெளரவம் வழங்கப்பட்டது. இவ்வாறு விருதளிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் அத்துடன் இந் நிகழ்வில் திரு.கருணாரெத்ன அவர்களுடன் திரு.ஆர்.வி.ஏக்கநாயக்க அவர்களும் இவ் உயரிய விருதினைப் பெற்றனர். அத்துடன் திரு.கருணாரெத்ன அவர்கள் OPA இன் கணினி விஞ்ஞான பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக 1989 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றார்.

1992 ஆம் ஆண்டு, கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்போரெல் 1992 மாநாடு மற்றும் கண்காட்சியினை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுமாறு திரு.கருணாரெத்ன அவர்கட்கு அழைப்பு விடுத்தார். அதற்கான பிரதான ஒழுங்கமைப்புக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் இன்போரெல் மாநாட்டிற்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டார் அத்துடன் அது ஒரு வெற்றிகரமான மாநாடாக இருந்தது. 13 ஆசிய பசுபிக் நாடுகள் அங்கம் வகித்த தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் (SEARCC) தலைவராக திரு.கருணாரெத்ன அவர்கள் நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு SEARCC’95 மாநாட்டின் ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவராக திரு.கருணாரெத்ன அவர்கள் நியமிக்கப்பட்டார். திரு.கருணாரெத்ன அவர்கள் தலைவராக இருந்த ஒழுங்கமைப்புக் குழுவானது கலாநிதி அபய இந்துருவ, கலாநிதி ஆர்.வி.ஏக்கநாயக்க, நயேனி பெர்னான்டோ அம்மணியார், திரு.நிறஞ்சன் டி சில்வா, திரு.எச்.என்.வி.குணரெத்ன, திரு.லால் சந்திரநாத், திரு.சுனில் அல்விஸ், திரு.கனிஸ்க சுகததாஸ, திரு.ஜெகத் ரணவக்க, கலாநிதி பண்டு ரணசிங்க, திரு.லியோனல் பெரேரா மற்றும் திரு.கித்சிறி மஞ்சநாயக்க போன்ற சிறந்த நிபுணர்களை உள்ளடக்கியிருந்தது. அத்துடன் திரு.அஜந்த குரே அவர்கள் அக்குழுவிற்கு ஆலோசகராகவும் சட்டத்தரணியாகவும் செயற்பட்டார்.

திரு.கருணாரெத்ன அவர்கள் தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் (SEARCC) பொதுச் செயலாளராக 2002 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். இந்தப் பதவியின் மூலம் செயலகத்தின் நிர்வாகத்திற்கும்  பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் பொறுப்பாகவிருந்தார். இவர் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்ற IT மாநாடுகளினை ஒழுங்கமைப்பதில் முக்கிய வகிபாகத்தினை ஏற்றார். மேலும், திரு.கருணாரெத்ன அவர்கள் தகவல் செயலாக்கத்திற்கான சர்வதேச கூட்டமைப்பில் (IFIP) SEARCC இனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார்.

இந்நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றியதன் காரணமாக இலங்கையில் நடைபெற்ற மாநாடுகளுக்கு மற்றும் இலங்கையிலுள்ள நிபுணர்கள் பயனடைவதற்கான பல செயலமர்வுகளை நடாத்துவதற்கும் பல சிறந்த தகவல் தொழினுட்ப வல்லுநர்களுக்கு  அழைப்பு விடுவதற்கான சாத்தியம் ஏற்பட்டது. இப் பிராந்தியத்திற்கு திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் வழங்கிய அளப்பெரும் பங்களிப்பிளை அங்கீகரிப்பதற்காக அவருக்கு “தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் மதிப்பிற்குரிய உறுப்பினர்” எனும் விருது வழங்கப்பட்டது. இவ் மதிப்புக்குரிய விருது பெற்ற ஒரே நபர் இவராவார்.

இவர் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உயரிய விருதினை 2013 ஆம் ஆண்டு  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களிடமிருந்து  பெற்றுக் கொண்டார்.

(*In 2013 His Excellency President is Mahinda Rajapakshe)

CINTEC

திரு.கருணாரெத்ன அவர்கள் இலங்கையில் ICT கொள்கையில் உயர் தீர்மானங்களை எடுக்கும் முன்னைய கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையில் (CINTEC) உறுப்பினராகச் செயற்பட்டமையை நினைவு கூர்கின்றார்.

SLICTA

திரு.கருணாரெத்ன அவர்கள் இலங்கையின் ICT தொழில்துறை, தொலைத் தொடர்பாடல்கள் வழங்குனர்கள் மற்றும் இணையத்தள சேவை வழங்குனர்களைப் பிரதிநிதித்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப சங்கத்தின் (SLICTA) ஆரம்பத் தலைவராக இருந்தார்.

 சுவாரஸ்யமான மற்றும் முக்கிய சம்பவங்கள் நிறைந்த தொழில் வாழ்க்கை பற்றிய கருத்தை நிறைவு செய்கையில் திரு கருணாரட்ன அவர்கள்  குறிப்பிட்ட ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை நினைவுகூருகிறார் – அவர் இது தான் வெற்றிகண்ட “சாத்தியமற்ற” விடயம் என்று கூறினார். 1999 ஆம் ஆண்டு, ETF சபைக்காக மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளடங்கலாக ஒரு கணினி முறைமையை கொள்வனவு செய்வதற்கான விலைமனுகோரல் ஒன்று இருந்தது. அதன் பெறுமதி 80 மில்லியன் இலங்கை ரூபாய், இது அக்காலப்பகுதியில் ஒரு பெரிய தொகையாகும். விலைமனுகோரல் டிசம்பர் 14 ஆம் திகதி முடிவுற்றது, அடுத்த தினமான 15 ஆம் திகதி விலைமனுகோரல் சபையின் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் உலக வங்கியிடம் வழங்கப்பட்டன. பொதுவாக விலைமனுகோரல் சபையின் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் வழங்கப்படுவதற்கு பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் எடுக்கும். இதனை வெற்றிகாண்பதற்காக அவர் நிதி அமைச்சிலிருந்த விலைமனுகோரல் சபையின் தலைவர் விலைமனுக்களை திறப்பதற்காக மதிப்பீட்டுக் குழுவினை அவரது அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான விண்ணப்பத்தினை அத் தலைவரிடம் கோரினார். அதனை தலைவர் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குழுவினை அனுப்பியதுடன் அவ் அலுவலகத்தினை விட்டு வரும் போது மதிப்பீடு பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். பின்னர், மதிப்பீட்டுக் குழு அதிகாலை 2.00 மணி வரை விரைந்து செயற்பட்டதன் விளைவாக மதிப்பீடு பூர்த்தி செய்யப்பட்டதுடன் அடுத்த தினம் மதிப்பீட்டு அறிக்கை விலைமனுகோரல் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

முடிவில், திரு. யாஸா கருணாரட்ன கூறுகையில், IT யில் இலக்குகளை அடைந்ததற்கு மேலதிகமாக, இவர் விறிச் (bridge) விளையாட்டில் சிறந்து விளங்கினார் –அவர் 12 வயதிலிருக்கும் போது அவரது தந்தை அவரை விறிச் விளையாடும்படி கூறியிருந்தார் அத்துடன் பின்னாளில் இவர் இலங்கை தேசிய அணியின் தலைவராக பல தடவைகள் செயற்பட்டிருந்தார்.

எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு, கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற பல தொழிற்துறைகளில் மனித ஊழியர்களுக்குப் பதிலாக தொழினுட்பங்கள் மற்றும் ரோபோக்கள் என்பன பதிலீடு செய்யப்படும் என திரு.கருணாரெத்ன அவர்கள் கூறுகின்றார். எனவே, இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் ஆராய்வது நிபுணர்களுக்கான சவால் ஆகும்.

Gallery

no images were found

Resources

Annual Report 1991/1992 – The Computer Society of Sri Lanka

Annual Report 1994/1995 – The Computer Society of Sri Lanka

SEARCC’95