இது LK டொமைன் பதிவகத்தின் ஒரு செயற்திட்டமாகும், அத்துடன் இவ் இணையத்தளத்திலுள்ள விளக்க நேர்காணல்கள் ஒவ்வொன்றும் மேலதிக வளர்ச்சியைப் பெறுவதற்கான ஒவ்வொரு படிநிலைகளையும் அடைந்ததை உறுதிப்படுத்துவதனைப் பற்றியது. இவை இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தியில் சாதனைகளை மைல் கல்லாக்கியவர்களின் தனிப்பட்ட பிரதிபலிப்புகளையும் நினைவுகளையும் கொண்டது.
“இவ் இணையத்தளமானது இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தியில் ஆரம்ப கட்டத்திலேயே தமது இலக்கினை அடைந்தவர்களின் நேர்காணல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சியானது தொடரும்.”
நேர்காணலுக்காக அனுமதி வழங்கி உதவியளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் இதன்மூலம் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர்கள் அடைந்த இலக்குகள் அனைத்தும் ஆர்வமுள்ள அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாயிருக்கும்.
பகுதிகள்/பிரிவுகள்
Latest Post

திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) “கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்………” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது.