கணணிமயமாக்கம் மற்றும் இ-அரசாங்கம்

  • நயேனி பெர்னான்டோ அம்மணியார்
    நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யூனிவஸிட்டி ஓஃப் சிலோன்) பட்டம் பெற்ற பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவில் ஜோர்ஜ் வோஸிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் பொருளாதார புள்ளிவிபர துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை கணனி நிபுணர்கள் சங்கத்தின் (CSSL) ஒரு உறுப்பினராவார். மேலும் இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சொன்ரா கழகத்தினால் பெண் சாதனையாளர் என கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இவர் 1971 ஆம் ஆண்டு தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் ஒரு நிரலாளராக தகவல் தொழினுட்பத் துறையில் தனது தொழிலினை ஆரம்பித்ததுடன், 1978 இருந்து 2000 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியிலும் கடமையாற்றினார். இவர் 1988 இல் இலங்கை தன்னியக்க காசோலைத் தீர்வகத்தினை (SLACH) நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகவிருந்ததுடன் அதன் முகாமையாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். 1993 இல் ஆஃப்லைன் நிதி பரிமாற்றும் முறைமையினையும் SLIPS (இலங்கை இன்ரபேங்க் பேமென்ற் சிஸ்டம்) அறிமுகப்படுத்தும் செயன்முறையினை ஆரம்பித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தினையும் வகித்தார். 1994 ஆண்டு முதல் 2000 வரையான காலப்பகுதியில் மத்தியவங்கியின் தகவல் தொழினுட்பத் துறையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலின் பின்னர் அதனை விரைவாக கட்டியெழுப்புவதற்காக தகவல் தொழினுட்பத் துறைக்குத் தலைமைத்துவம் வழங்கினார், இத் தாக்குதலில் வங்கியின் கணனித் தொகுதிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும் இவர் Y2K தயார்நிலைக்கான இலங்கை குழுவில் நிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றினார். இவர் ஓய்வு பெற தகுதியான வயதினை அடைந்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கியின் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 வரையான காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் தனியார் துறையில் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஸ் நாட்டின் மத்திய வங்கிக்காக நாடளாவிய ரீதியில் செயற்படத்தக்க இலத்திரனியல் காசோலைத் தீர்வு முறைமை மற்றும் இலத்திரனியல் பணப்பரிமாற்ற வலையமைப்பு (எலக்ரோனிக் செக் கிளியரிங் சிஸ்டம் மற்றும் எலக்ரோனிக் பன்ட் ட்ரான்ஸ்பர் நெட்வேர்க்) ஆகியவற்றினை நிறுவுவதற்காக தள திட்ட முகாமையாளராக செயற்பட்டார், அத்துடன் 2010 இல் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். நயேனி பெர்னான்டோ அம்மணியார் கணனி நிபுணத்துவ சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராவார். அத்துடன் அதன் சபையின் துணைத் தலைவராக 1993 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை சேவையாற்றினார். நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் பெயரானது இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித் தொழிற்துறையில் தகவல் தொழினுட்பத்தின் நடைமுறைப்படுத்தலுடன் ஒப்புவிக்கப்படுகின்றது அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல இலக்குகளை அடைய உதவிய கருவியாக இவள் இருந்தாள்.
    மேலும் வாசிக்க…