மொழி தொழினுட்பம்

 • கலாநிதி ருவான் வீரசிங்க
  கலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினை இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். இவர் அரசதுறை நிறுவனங்களுக்காக சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் செயலாக்க ஆய்வுகளை ஆரம்பித்தார். இலங்கைக்கு இணையத்தினை அறிமுகப்படுத்துவதில் உந்துசக்தியாகச் செயற்பட்டு முன்னோடியாக இருந்தவர்களில் கலாநிதி ருவன் வீரசிங்கவும் பங்குவகிக்கின்றார்; லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட்வொர்க் (LEARN) மற்றும் 2003 ஆம் ஆண்டுவரை இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பப் பிரிவில் உயர்மட்டத் தீர்மானங்களை மேற்கொண்ட நிறுவனமான தகவல் தொழினுட்பப் பேரவையின் இணையக் குழு ஆகிய இரண்டிலும் இவரது வகிபாகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலாநிதி ருவான் வீரசிங்க 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இன்ரநெட் சொசைற்றிக்காக வளர்ந்து வரும் நாடுகளில் வலையமைப்பு பணியாளர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு போதனாசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப நிறுவனத்தினால் (ICTA) முன்னெடுக்கப்பட்ட இ-சிறீலங்கா அபிவிருத்தித் திட்டத்தில் சிறந்த ஈடுபாட்டினைக் கொண்டிருந்தார். இவர் ICTA வின் உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவினது ஒரு செயல்மிக்க உறுப்பினராவார். இவர் ஒரு கல்வியியலாளராக பல்வேறு பின்புலங்களைக் கொண்ட மாணவர்களுக்கு தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் கற்பித்துள்ளார். இவர் கணினிகளில் மனித மொழி செயலாக்கம் தொடர்பான பல்வேறுபட்ட அம்சங்களில் ஆய்வு செய்வதில் ஆர்வமுள்ளவர், அதிலும் குறிப்பாக புள்ளிவிவர மற்றும் கார்பஸ் அடிப்படையிலான (Corpus-based) அணுகுமுறைகள் மற்றும் கணினி மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். மேலும் வாசிக்க…
 • திரு. ஹர்ஷா விஜயவர்தன
  திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக இருக்கின்றார் அத்துடன் இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் (IoT) இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அத்துடன் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் UCSC இன் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவின் (SDU) உருவாக்கத்திலும் ஈடுபாடு காட்டினார். அவர் மற்றும் அவரது குழுவினர் SDU இல் இலங்கை அரசாங்கத்திற்கான மென்பொருளை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தனர். இவர் இலங்கையில் இணையம் மற்றும் இ-ஆளுமையினை அபிவிருத்தி செய்வதற்கு மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC) இணையக் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார். அங்கிருந்தபோது தான் சிங்கள யுனிகோட் நடைமுறைப்படுத்தும் வேலை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. திரு. விஜயவர்தன சிங்கள யுனிகோட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார் அத்துடன் அவரது ஆய்வுகூடத்தில் சிங்கள யுனிகோட் இணக்கமான எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார். இவர் இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவின் ஒரு உறுப்பினராகவும் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) ICT பிரிவு குழுவின் ஒரு உறுப்பினராகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் இன்ரநெட் சொசைற்றியின் உள்நாட்டு அத்தியாயத்தின் (ISOC-LK) ஸ்தாபக தலைவராகவும் இருந்துள்ளார். இவர் LK டொமைன் பதிவகத்தின் சபையில் அதன் ஆரம்பத்திலிருந்து சேவையாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் வர்த்தக இணையத்தளத்துடன் இணைத்துக் கொண்டிருப்பதற்கான 20 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் போது, ISOC, LK டொமைன் பதிவகம் மற்றும் ICTA வினால் அவர் ஒரு இணையத்தள முன்னோடியாக பாராட்டப்பட்டார். மேலும் வாசிக்க…
 • திரு.எஸ்.ரி. நந்தசாரா
  திரு.எஸ்.ரி.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார் அத்துடன் UCSC இல் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார். திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு, ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். மேலும் இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் “புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம்” இல் ஒரு கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளை நிறைவேற்றுவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக தேர்தல் ஆணையாளருக்கு உதவியது திரு. நந்தசாராவின் தொழில் வாழ்க்கையின் முக்கிய மைல்கல் ஆகும். “1982 ம் ஆண்டு தேசிய வாக்கெடுப்பு முடிவுகள் கணினி ரீதியிலான நேரடி ஒளிபரப்பு” மற்றும் “இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கான கணினி ரீதியிலான நேரடி ஒளிபரப்பு” ஆகியவற்றினை முதன் முதலில் செயலாக்கி வழங்குவதில் திரு.நந்தசாரா முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். திரு.நந்தசாரா உள்ளூர் மொழி கணினியியல் அரங்கில் சிறந்த பங்களிப்பினைக் கொண்டிருக்கின்றார்; இவர் மூம்மொழியிலான சொல் செயலாக்கி ‘வாசன் தாரவ (වදන් තරුව) யினை வடிவமைத்தார் மற்றும் 1994 ஆம் ஆண்டின் பின்பகுதியில் வென்ச்சுரா வெளியீட்டாளருக்காக மும்மொழியிலும் இணக்கமான டைப்செட்டிங் மென்பொருள் 'அத்வாலா' (අත්වැල) யினை வடிவமைத்தார். ICT யில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னைய உயர் கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC), கணினி தொழினுட்பத்தில் சிங்களம் மற்றும் தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டின் தரநிலைகளைப் பரிந்துரை செய்கின்ற பணிக்குழுவினது ஒரு உறுப்பினராக இவர் இருந்தார். 1997 ல் கிரீஸிலுள்ள க்ரீட்டில் நடைபெற்ற யுனிகோட் கன்சார்டியத்தின் முக்கியமான கூட்டத்தில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு பிரதிநிதியாக இவர் இருந்தார். அந்தக் கூட்டத்தில், கடுமையான விவாதங்களுக்குப் பின்னர், சிங்கள குறியீட்டுக்கான முன்மொழிவு சில சிறிய திருத்தங்களுடன் இலங்கை பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. மேலும் பேராசிரியர் வி.கே.சமரநாயக்கவின் நிறுவன அபிவிருத்தியில் திரு. நந்தசாரா உதவினார்; இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி தொழினுட்ப நிறுவனத்தினை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். இதன் பொருட்டு, 1988 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு அவர் உதவினார். மேலும் இவர் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தினை அமைப்பதில் ஈடுபட்டுள்ளார், அதில் அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியினை (UCSC) உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார், இது விஞ்ஞான பீடம் மற்றும் கணினி தொழினுட்ப நிறுவனத்தின் கீழ் கணினி விஞ்ஞான துறையினை உள்ளடக்கியிருந்தது. கணினியியலில் 50 வருட பூர்த்தியினை UCSC 2017 ஆம் ஆண்டு கொண்டாடியது அதில் பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் வாசிக்க…
 • தினீசா எதிரிவீர அம்மணியார்
  தினீசா எதிரிவீர அம்மணியார் அவர்கள் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். இவர் இலங்கை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவில் B.Sc. மற்றும் M.Sc பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஒரு கூட்டு உறுப்பினராக இருக்கின்றார் அத்துடன் இலங்கை கம்பியூட்டர் சொசைற்றியின் (CSSL) ஒரு கூட்டு உறுப்பினராகவும் இருக்கின்றார். எதிரிவீர அம்மணியார் ANCL இல் பணியாற்றும் போது, ANCL இற்காக வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மற்றும் டிஜிட்டல் விளம்பர முறைமைக்கான மென்பொருள்களை வடிவமைத்து உருவாக்கினார். இவர் மேலும் வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமைக்காக சிங்கள அடுக்கு அல்கோரிதம் மற்றும் ஆசிரியர் அமைப்பிற்காக சிங்கள ஹைபெனேசன் முறைமையையும் மற்றும் யுனிகோட் அல்லாததிலிருந்து யுனிகோட்டிற்கு மாற்றுவதற்கான மென்பொருள் மற்றும் உரிமையுடைய திறந்த முறைமைகளையும் வடிவமைத்து உருவாக்கினார். இவர் மேலும் ANCL யுனிகோட் எழுத்துரு தினமின யினை திரு.அனுர திசேரவின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கினார். இந்த எழுத்துரு பின்னர் இலவசமாகப் பயன்படுத்த ICTA விடம் கையளிக்கப்பட்டது. தினீசா எதிரிவீர அம்மணியார் இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவில் (LLWG) ஒரு செயற்படு உறுப்பினராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றுகின்றார். ICTA யுனிகோட் இணக்கமான சிங்கள எழுத்துரு “பாஷித” ற்கான விதிகளை எடிரிவீர அம்மையார் உருவாக்கினார் அத்துடன் திரு. பேமசிறீ வடிவமைத்த கிளிஃப்ஸுடன் அதை பூர்த்திசெய்தார். எடிரிவீர அம்மணியார் பரிந்துரைத்ததற்கமைய எழுத்துருவிற்கு “பாஷித” எனப் பெயரிடப்பட்டது. கலையுணர்வுடனான சரியான சிங்கள எழுத்துருவாகிய “பாஷித” மூன்று நிலைகளில் உருவாக்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஒவ்வொரு எழுத்துருவும் செரிப் மற்றும் சான்ஸ் செரிப் எழுத்துருக்களுடனான ஒரு எழுத்துரு குடும்பத்தினைக் கொண்டிருந்தது. மொஸிலா பயர்பொக்ஸ் இந்த எழுத்துருவை வழங்குமாறு கோரியது மற்றும் இதற்காக ஒரு இலகுவான பதிப்பு “பாஷிதஸ்கிறீன்” மொஸிலா பயர்பொக்ஸிற்கு வெளியிடப்பட்டது. எடிரிவீர அம்மணியார் இவ் எழுத்துரு விதிகளை “ஹோடிபோதா” எழுத்துருவில் பயன்படுத்தினார், இது ICTA ற்காக உருவாக்கப்பட்டது அத்துடன் அது சிறு குழந்தைகளைக் கற்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மொழியானது சொல் உருவாக்கம் மற்றும் இலக்கண வடிவத்தில் ஒரு சிறந்த கட்டமைப்பினைக் கொண்டிருப்பதாக தினீசா எடிரிவீர அம்மணியார் கூறுகின்றார். அத்துடன் மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு கிடைக்கக்கூடியபடி இக் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய அவர் விரும்புகிறார். மேலும் வாசிக்க…