திரு. வசந்த தேசப்பிரிய

திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினது செயலாளர் ஆவார். இவர் அம்பலாங்கொடை தர்மாசோகா கல்லூரியில் மற்றும் இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். இவர் தனது முதுமானி விஞ்ஞானப் பட்டத்தினை இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன், கொழும்பு கணினியியல் கல்லூரியில் (UCSC) தகவல் தொழினுட்பத்தில் பட்டபின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ஒரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுச் வேவையாற்றிய அனுபவமுள்ளவர். அவர் அரசு கணினிமயமாக்கல் திட்டங்களில் பரவலாக ஈடுபட்டுள்ளார்.

திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் ஆரம்பத்தில் இறப்பர் அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அலுவலகங்களில் தகவல் தொழினுட்பப் பிரிவில் பொறுப்பதிகரியாக பணியாற்றினார். இவர் 1985 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் இறப்பர் மீள் நடுகை மற்றும் மானிய நிர்வாக திட்டத்தினைக் கணினிமயமாக்கலில் ஈடுபட்டார். இவர் 1998 ஆம் ஆண்டு சிரேஸ்ட உதவிச் செயலாளராக (IT) பொது நிர்வாக அமைச்சில் இணைந்தார். இவர் பொது நிர்வாக அமைச்சில் தகவல் தொடர்பாடற் தொழினுட்பத்தின் பயன்பாட்டினை அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடியாவார்; இவ் அமைச்சானது பொது நிர்வாகச் சுற்றுநிருபங்களை முழு பொதுத்துறைக்கும் மினனஞ்சல் செய்யும் செயற்பாட்டினை முதன்முறையாக ஆரம்பித்ததுடன் அதனை அமைச்சினது இணையத்தளத்திலும் பிரசுரித்தது. இவ் அமைச்சினது முதல் இணையத்தளமானது திரு. தேசப்பிரிய அவர்களின் தலைமையிலான ஒரு குழுவினரால் 1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தில் (ICTA) 2003 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார். இதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு, மறுகட்டமைப்பு அரசினது பணிப்பாளராக திரு. தேசப்பிரிய அவர்கள் தரமுயர்த்தப்பட்டார். திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் ICTA வின் தலைமைத்துவக் குழுவின் அங்கத்தவராக இருந்ததுடன் அரச மறுகட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை வடிவமைப்பதில் மற்றும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் ஒருவராக இருந்தார்.

 

திரு.வசந்த தேசப்பிரிய தற்போது இலங்கை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சினது செயலாளர் ஆவார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற ஒரு விஞ்ஞானப்பட்டதாரி ஆவார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் குறுகிய காலம் கடமையாற்றிய பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.

திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்ததன் பின்னர் இறப்பர் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இறப்பர் நிலப்பதிவுகள் மற்றும் மானியம் வழங்கும் திட்டத்தினை கணனிமயமாக்கும் செயற்திட்டத்தில் பணியாற்றுவதற்காக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார்.
திரு. வசந்த தேசப்பிரிய பணியில் இணைந்த முதல் நாளில் இத்திட்டத்திற்கான தேவைகள் மற்றும் உருவாக்கப்படவேண்டிய திட்டத்திற்கான தீர்வுகள் தொடர்பான ஒரு கலந்துரையாடலில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

அந்த நாளிலிருந்து, நாட்டில் இறப்பர் வளரக்கூடியதாக உள்ள பல இடங்களில் பணியாற்றுவதற்காக திரு. தேசப்பிரிய அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் கடமையாற்றிய எல்லா உப அலுவலகங்களிலும் அவரே கணினிப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்தார். இறப்பர் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் வாங்க் மினி கணனிகள் பாவிக்கப்பட்டதுடன் கணினி மொழியாக கோவோல் (COBOL) பயன்படுத்தப்பட்டது.

திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் தாய்லாந்தில் ஆசியன் தொழினுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளதுடன் கொழும்பு கணினியியல் கல்லூரியில்(UCSC) தகவல் தொழினுட்பத்தில் பட்டபின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

அதற்குப்பின்னர், திரு. தேசப்பிரிய அவர்கள் பொது நிர்வாக அமைச்சில் இணைந்தார், அங்கு அவரது நோக்கம் பரவலாக இருந்தது. திரு. தேசப்பிரிய தகவல் தொழினுட்பப்பிரிவில் சிரேஸ்ட உதவிச் செயலாளராக (SAS) நியமிக்கப்பட்டார். இது அரசினது முதல் சிரேஸ்ட உதவிச் செயலாளர் நியமனமாகும். இந்த அமைச்சினுள் காகித அடிப்படையில் மற்றும் நடைமுறையில் தீர்க்க முடியாத பல சவால்களுக்கு முகங்கொடுத்தார். 1998 காலப்பகுதியில் பொது நிர்வாக சுற்றுநிருபங்கள் முன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டதுடன் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது, இதற்காக நிறைய நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

பின்னர் அமைச்சின் சுற்றுநிருபங்களை பி.டி.எப் ஆக மாற்றி செயலாளரின் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்துடன் பெறுநர்களுக்கு மின்னஞ்சல் செய்தது. முன்னர் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட சுற்றுநிருபத்தினை தேடுவது மற்றும் கண்டுபிடிப்பது இன்னுமொரு சிக்கலாக அமைந்தது.

திரு. வசந்த தேசப்பிரிய இதனை பின்வருமாறு விளக்கினார்: வாழைச்சேனை காகித தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர் ஓய்வு பெறும் நிலைக்கு வந்தபோது தனது சரிசெய்யப்பட்ட சம்பளத்தினைப் பெற ஒரு குறிப்பிட்ட சுற்றுநிருபத்தினை தேடுவதற்காக கொழும்பிற்கு வந்தார். அந்நபரின் சரிசெய்யப்படாத வருமானம் அவரது வாழ்க்கைக்கு போதுமானதல்ல. திரு. வசந்த தேசப்பிரியவால் துரதிஸ்டவசமாக அச்சுற்றுநிருபத்தினை கண்டெடுக்க முடியவில்லை.

இந்நிகழ்வால் தூண்டப்பட்ட திரு. வசந்த தேசப்பிரிய 1970 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட அனைத்து சுற்றுநிருபங்களையும் ஸ்கேன் செய்து குறியிடப்பட்டு, இலக்கமிடப்பட்டு அமைச்சிற்கென உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில் பயனர்களுக்குக் கிடைக்குமாறு செய்தார். இ-அரசாங்கத்தினை நடைமுறைப்படுத்த ஒரு திட்டமும், ஒரு மூலோபாயமும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் அக்காலப்பகுதியில் சின்டெக் (CINTEC) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இ-அரசு சார்பான ஆய்வு ஒன்றிற்காக சுவிடன் மற்றும் எஸ்ரோனியா பயணம் செல்லத் தெரிவு செய்யப்பட்டார். இ-அரசு தொடர்பான கொள்கைகள் நாடளாவிய ரீதியல் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதென இப்பயணத்தின் போது விளக்கப்பட்டது.

அதன் பிறகு, 2003 இல், இ-சிறிலங்கா அபிவிருத்தித் திட்டத்தினை (eSL) நடைமுறைப்படுத்துவதற்காக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தில் இணைவதற்கான ஒரு பத்திரிகை விளம்பரத்திற்கு இணங்க அதற்கு விண்ணப்பித்தார். இவர் இ-அரசு பிரிவிற்காக ஆரம்பத்தில் இ-அரசு நிபுணராகவும் பின்னர் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அரச தாபனங்களில் அப்போதய நிலைமையை மதிப்பீடு செய்யவும் முன்னோக்கி பாதையைக் கண்டறிந்து கொள்வதற்காகவும் 2004 ஆம் ஆண்டு ஒரு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அவ்வாய்வு 14 அரச இணையத்தளங்கள் மட்டுமே உள்ளதாக வெளிக்காட்டியது. மேலும் ஒரு முக்கிய இடையூறாக விழிப்புணர்வின்மை மற்றும் உற்பத்தித்திறனின்மை காணப்பட்டது. மேலும் அரச தாபனங்களில் கையாளப்பட்ட செயற்பாடுகளும் ஒரு பிரச்சினையாக இருந்தது. இவை தகவல் தொழினுட்பத்தினூடாக தீர்வுகள் பெறப்படுவதற்கு முன்னர் மீள்கட்டியெழுப்பப் படவேண்டியிருந்தது. ஆதலால், ICTA இல்
இ-அரசு பிரிவு ஆனது “மீள் கட்டியெழுப்பப்படும் அரசு” என குறிப்பிடப்பட்டது.

இவருடைய பதவிக்காலத்தில் ICTA னால் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கியமான திட்டங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது;

தி லங்கா கவன்மென்ட் நெட்வேர்க் (LGN) கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அரசாங்க நிறுவனங்களையும், முழு நாட்டையும் உள்ளடக்கியது. அரச தகவல் மையமானது (GIC – 1919) அரச தகவல்களைக் கொண்டிருக்கின்ற மையப்படுத்தப்பட்ட இடமாக இருந்தது. இலங்கைப் பிரஜைகளுக்கு சேவை செய்வதற்காக ஜி.ஐ.சி. (GIC) நீணட கால இடைவெளி தேவையை நிவர்த்தி செய்தது ICTA வின் துணிகர முயற்சியாகும். GIC ஆனது தொலைபேசி, ஓன்லைன் (www.gic.gov.lk) அல்லது கையடக்கத் தொலைபேசி போன்ற பலதரப்பட்ட ஊடகங்களினூடாக தகவல்களைக் வழங்கியது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் (BMD) வழங்குவது கணனிமயமாக்கப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் இச் சான்றிதழ்களை பெறுவது இலகுவானதாகவும் செயற்திறனுள்ளதாகவும் இருக்கிறது.

லங்கா கேட் ஆனது இலங்கையில் மின்னணு தகவல் மற்றும் மின்னணு தொடர்புகளுக்கான நுழைவாயிலாக இருந்தது. இந் நாட்டு நுழைவாயிலானது (www.lk or www.srilanka.lk) இலங்கையிலுள்ள அரச தாபனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு ஒரு முக்கிய அணுகல் புள்ளியாகவிருந்தது. அரச வலையமைப்பானது 495 மும்மொழிகளிலுமான யுனிகோட்டிற்கு இணக்கமான வலையத்தளங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அத்துடன் அரச ஊழியர்கள் இணையத்தளங்களை கையாளவும் அவற்றினை நிர்வகிக்கவும் பயிற்றப்பட்டனர். சமுர்த்திப் பயனாளிகளைக் கருத்திற் கொண்டு சமுர்த்திப் பயனாளிகளையும் நுண்கடன்களையும் நிர்வகிப்பதற்காகவும் சமுர்த்தி அதிகார சபையின் சேவைகளை செயற்திறன் மிக்கதாயும் வினைத்திறன் மிக்கதாயும் வழங்க தகவல் தொடர்பாடற் தொழினுட்பத் தீர்வாகிய இ-சமுர்த்தித் திட்டமானது காணப்பட்டது.
தகவல் முறைமைகளுக்கான தரவு, தொழினுட்பம் மற்றும் செயன்முறை தரநிலைகள் லங்கா இண்டரோபெரபிளிட்டி பிறேம்வேக் (LIFe) னால் வரையறுக்கப்பட்டது. இத் தரநிலைகள் வேறுவகையான தகவல் முறைமைகளின் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட தரவுத் தளங்களின் உள்ளியக்கத்தன்மையை செயற்படுத்துகின்றது. LIFe ன் இருப்பிடக் குறியீட்டு ஊடுருவி ஆனது LIFe தரநிலைகளை உடனிணைக்கின்றது.இவ் அப்ளிகேசன் ஆனது பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சினால் உருவாக்கப்பட்டது. இதில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் வழங்கப்படுகின்றது.

அரச சேவைகளுக்கான கடனட்டை மற்றும் மின்னணு கட்டண முறைகளை (கையடக்கத் தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளடங்கலாக) செலுத்துவதற்கான நிதி ஒழுங்குமுறைகளை
(FR 447/2010) தயாரிப்பதற்கு நிதி அமைச்சுடன் சேர்ந்து ICTA ஆனது தலைமைப் பாத்திரத்தினை ஏற்றது. இ- வருமாய் உரிமமும் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டது.

உற்பத்தித்திறன் மேம்பாடானது இ-அரசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தேவையாக இருந்தது.குறிப்பாக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் போதும், இ- அரசாங்க முறைமையினை அறிமுகப்படுத்தும் போதும் மற்றும் அரசாங்கத்தினை மீள் கட்டியெழுப்பும் போதும் இ-தலைமைத்துவ திறமை ஆனது முக்கியமானதாக இருந்தது. ஆகவே, அரச தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுததப்பட்டன. சிரேஸ்ர மற்றும் நடுநிலை அரச அதிகாரிகள் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இ-ஆளுமை பிரிவில் இரு-வருடங்கள் பகுதி நேர MBA கற்கை நெறியினை கற்றனர். இது இலங்கையில் இ-ஆளுமை பிரிவில் முதல் முதுநிலை வணிக நிர்வாக கற்கை நெறியாகும்( MBA) .

அரசாங்க அதிகாரிகள் இ-அரசாங்க முறைமைகளை நிர்வகிக்கவும், கையாளவும் தேவையான அடிப்படை ICT திறன்கள் மற்றும் ஏனைய தொழினுட்பப் பயிற்சிகளையும் கொண்டு தேவையான தகுதிகளுடன் பொதுச் சேவையை வழங்குவதனை உறுதி செய்தனர். ICTA இன் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரிவின் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 15,000 ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படை தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் திறன்கள் மற்றும் தொழினுட்பங்கள் தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டது.
இ-அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதற்கான வேலைகள் 2004/5 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் மேலும் விளக்குகின்றார்.
இந்த செயல்முறை விரிவான ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டது. இக் கொள்கைகள் உள்ளடக்கிய ஆரம்பத்திட்டம் 2009 ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இவை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆலோசனைகளுக்கூடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என திரு.வசந்த தேசப்பிரிய அவர்கள் வலியுறுத்தினார். 2004 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் கடுமையான சவால்களை சமாளிக்க வேண்டியிருந்ததுடன், திட்டமொன்று உருவாக்கப்பட்டு அதிலுள்ள அதிகமான விடயங்கள் அடையப்பட்டன. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 193 நாடுகளை உள்ளடக்கிய e-அரசாங்க மேம்பாட்டு குறியீட்டு எண் (EGDI) தரப்படுத்தலில் 2014 ஆம் ஆண்டு இலங்கையானது 74 வது இடத்தினையும், 2012 ஆம் ஆண்டு 115 வது இடத்தினையும் பெற்றதோடு 41 இடங்கள் முன்னரை விடவும் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தரப்படுத்தலில் 38.5% அதிகரிப்பாகும். ஆகவே, இ-அரசாங்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துகின்ற உலக நாடுகளில் முதல் 40% தரப்படுத்தலுக்குள் இலங்கை காணப்பட்டது.