இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு

  • பேராசிரியர் அபய இந்துருவ
    பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “லங்கா எக்ஸ்பெரிமென்ரல் அகடெமிக் அன்ட் ரிசேச் நெட்வேர்க்” யினை உருவாக்கியதைக் குறிப்பிடலாம் மற்றும் மிகக்குறைந்த வளங்களை ஒன்றிணைத்து LEARNmail -இலங்கையில் உள்ள கல்விசார் மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கான முதல் இணைய மின்னஞ்சல் சேவையினை 1990 ஆண்டு ஸ்தாபித்தார். இலங்கையின் கன்ரிகோட் டொப் லெவல் டொமைன் பதிவகமான .LK யினால் LEARNmail அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு இயற்கையான முன்னேற்றமாக இருந்தது. இதில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் தொழினுட்பப் பிரிவிலும் அபய இந்துருவ அவர்கள் நிர்வாகப்பிரிவிற்கும் பொறுப்பாக இருந்தனர். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் இலங்கை கணினி மற்றும் தகவல் தொழினுட்ப பேரவையின் (CINTEC) முதல் சபையினது உறுப்பினராக இருந்ததுடன் CINTEC சபையில் 1998 ஆம் ஆண்டு வரை சேவையாற்றியுள்ளார். இவர் ஆற்றிய சேவைகள் அனைத்தும் இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினை அறிமுகப்படுத்துவது சார்ந்தவையாக இருந்தது, அத்துடன் அவரடைந்த முக்கிய இலக்குகளின் விளைவுகளை தற்போது இலங்கையில் இணையம் மற்றும் வலையமைப்பினைப் பயன்படுத்தும் அனைவ ராலும் உணரமுடியும். இதற்காக இவருக்கு இணையச் சமூகத்தினால் (இன்ரநெட் சொசைற்றி) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது – பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் 2014 அம் ஆண்டு இன்ரநெட் கோல் ஓஃப் பேம் இனுள் சேர்க்கப்பட்டார். மேலும் வாசிக்க…
  • பேராசிரியர் ஜிகான் டயஸ்
    பேராசிரியர் ஜிகான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார். பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவராவார். அத்துடன் இலங்கையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனமான லங்கா அக்கடெமிக் நெட்வேர்க் (LAcNet) இன் ஸ்தாபகரும் முதல் தலைவரும் ஆவார். இவர் மேலும் ஒரு சில இணைய சேவை வழங்குனர்கள் தங்களது சொந்த வலையமைப்பினை உரூவாக்குவதற்கு உதவினார். பேராசிரியர் ஜிகான் அவர்கள் 2003 மற்றும் 2004 ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் ICT மேம்பாட்டில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளப் பொறுப்பான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஒரு ஸ்தாபக திட்டப் பணிப்பாளராக இருந்தார். இவர் ICTA இல் இருந்தபோது உள்ளூர் மொழிகளில் ICT இனைப் பயன்படுத்தும் திட்டத்தினை தலைமை தாங்கியதுடன், யுனிகோட் இணக்கமான எழுத்துருக்கள் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டார் அத்துடன் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் SLS 1134: 2004 என சான்றளிக்கப்பட்ட ICT சிங்கள தரநிலை வரைவை வடிவமைப்பதிலும் சேவையாற்றியுள்ளார். இவர் ICT இல் SLSI இன் துறைசார் குழுவின் தலைவராவார். இவர் ICTA இல் இருந்தபோது யுனிகோட் தரநிலை தொடர்பாக பல விழிப்புணர்வு மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சிகளை எழுத்தாக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக ஒழுங்கமைத்தார். இலங்கையின் இரண்டு IDN ccTLDs க்கள் மீது உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக ICTA இன் IDN டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராகவும் பணிபுரிந்தார் (தமிழ் மற்றும் சிங்களம்), இது LKNIC ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவர் இன்டர்நெட் சொசைட்டி ஸ்ரீலங்கா அத்தியாயத்தின் முன்னாள் தலைவராவார். இலங்கையில் இணைய அபிவிருத்தியில் பேராசிரியர் ஜிகான் அவர்களின் முன்னோடியான பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் முகமாக 2013 ஆம் ஆண்டு தி இன்ரநெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டார். மேலும் வாசிக்க…
  • திரு. சன்னா டி சில்வா
    திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய பின்னர், இலங்கையில் முதல் இணைய நிறுவனமான லங்கா இன்ரநெட் மற்றும் முதல் வணிக ரீதியான இமெயில் சேவையகமான sri.lanka.net யினையும் உருவாக்குவதற்கு உதவி புரிந்தார். இந்தக் கம்பனியானது இலங்கையின் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net யினை வடிவமைத்தது அது இப்போதும் நடைமுறையிலுள்ளது. இலங்கையின் முதல் ஓன்லைன் செய்தித்தாள்கள் லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது; அவை டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் என்பனவாகும். இலங்கையின் முதல் ஓன்லைன் வானொலி நிலையம், TNL ரேடியோ லங்கா இன்ரநெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. திரு. சன்னா டி சில்வா அவர்கள் ஓபின்சோஸ் மற்றும் மைக்ரோசொப்ற் சிறீலங்கா ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார் பின்னர் IBM இல் இணைந்து கொண்டார். அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கையில் CBSL இன் அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் சொந்தமான லங்காகிளியர் நிறுவனத்தில் திரு. சன்னா டி சில்வா அவர்கள் இணைந்தார். இலங்கையில் காசோலை தீர்வு முறைமையை தன்னியக்கமாக்கும் செயற்பாட்டினை லங்காகிளியர் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இது முதலில் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கிகளுக்கிடையிலான பணப்பரிமாற்ற முறைமை (SLIPS), ஒரே நாள் பணப்பரிமாற்றம் போன்ற ஏனைய சேவைகளையும் லங்காகிளியர் நிறுவனம் முன்னெடுத்தது. ஒரு நிகழ்-நேர பணப்பரிமாற்ற சேவையகமும் உருவாக்கப்பட்டது. மற்றுமொரு இலக்காக, பொதுவான ஏ.டி.எம் சுவிட்ச், லங்காபே ஆனது உருவாக்கப்பட்டது. இது தற்போதுள்ள அனைத்து வங்கிகளினதும் 98% ஆன ஏ.டி.எம் களை லங்காகிளியருடன் இணைக்கின்றது. நிதியியல் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி கிராமப்புற பகுதிகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான பணம் செலுத்தும் முறைகளை பாதுகாப்பான வகையில் பெற்றுக்கொடுத்தல் எனும் லங்காகிளியரின் பிரதான நோக்கமானது அடையப்பட்டுள்ளது என திரு சன்னா டி சில்வா விளக்குகிறார். மேலும் வாசிக்க…
  • திரு.லால் டயஸ்
    திரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார். திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார். இவர் இலங்கை CERT யினை உருவாக்குவதற்கு கருவியாகத் தொழிற்பட்டதுடன் தற்போது அதன் சிரேஸ்ர நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை CERT யினை உண்மையான தொழில்முறை அலங்காரமாக நிலைநிறுத்துவதற்காக சைபர் செக்யூரிட்டி ஸ்பேஸில் பிற தேசிய CERT க்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உலக அமைப்புகளுடன் உறவுகளை உருவாக்குவதற்கான தனது பரந்த சர்வதேச வெளிப்பாட்டை திரு.லால் டயஸ் ஆல் பயன்படுத்த முடிந்தது. மேலும் வாசிக்க…